சஞ்சீவ் பட் உயிருக்கு ஆபத்து மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம்
குஜராத் இனப்படுகொலை நிகழ தூண்டுகோலாக அம்மாநில முதல் அமைச்சர் மோடி விளங்கினார் என உச்சநீதி மன்றத்தின் முன் பிரமாண வாக்குமூலம் வழங்கினார் சஞ்சீவ் பட். மோடியை சிறந்த நிர்வாகி என்றும் ரொம்ப நல்லவர் என்றும் பொய்கதைகளை புனைபவர்கள் முகங்களில் கரி பூசும் விதமாக இந்த பிரமாண வாக்கு மூலம் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியும் ஆத்திர மும் அடைந்த மோடி அரசு, சஞ்சீவ் பட்டுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றது.
ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசே வாபஸ் வாங்கியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உண்மை உரைத்த நியாயமான காவல்துறை அதிகாரியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் மனித உரிமை போராளிகள் மற்றும் முன்னணி அரசியல் மற்றும் கலை இலக்கிய பிரமுகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலையை தோல் உரித்து காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்ற குஜராத் மாநில அரசின் செயலை அவர்கள் வன்மையாக கண்டித்தனர். அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள அவர்கள் இது விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 66 மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளில் ஆமிர் இத்ரிசி, (மும்பை முஸ்லிம் கல்வியாளர்கள் அமைப்பு), அபுஸாலிஹ் ஷரிப்
(முன்னணி பொருளாதார மேதை), அட்மிரல் ராமதாஸ் (முன்னாள் கடற்படை தளபதி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), டேனிஷ் அஹ்மது (மதசார்பற்ற ஜனதா தளம்), டாக்டர் ராம் புன்யானி (எழுத்தாளர்), ஹர்ஷ் மந்தர் (எழுத்தாளர்), மகேஷ் பட் (சினிமா தயாரிப்பாளர்), நசுருதீன் ஷா (நடிகர்), பேரா, பணிக்கர் (வரலாற்று ஆய்வாளர் கேரளா), ராம் விலாஸ் பாஸ்வான் (லோக்ஜனசக்தி தலைவர்), இர்பான் ஹபீப் (வரலாற்று ஆய்வாளர் டெல்லி), சீமா முஸ்தபா (பத்திரிகையாளர்) உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளன

No comments:
Post a Comment