Tuesday, May 15, 2012

ஊழல் ஒழிப்பு எழுச்சி! நடுங்கும் மத்திய அரசு

E-mail Print PDF
ஊழலுக்கு எதிராக இந்த தேசத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை மத்தியில் ஆள்வோரை அலறச் செய்துள்ளது. அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி, ஊழலுக்கு எதிராக எழுப்பிய குரல் நாடெங்கும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதனைக்கண்டு ராம்தேவும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார். அது, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையானது.
சர்ச்சைக்குரிய ராம்தேவ் சாமியாரின் உண்ணாவிரத ஸ்டன்ட், நாட்டு மக்களின் பரிகாசத்திற்கு இலக்கானது. 11 ஆயிரம் கோடி ரூபாய்களை முறைகேடாகச் சேர்த்த ஒருவர் எவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராட முடியும். அவ்வாறு போராடுவது கேலிக்கூத்தாகவே முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவே ராம்தேவ் போராட்டத்தின் முடிவுகள் அமைந்தன. இது ராம்தேவுக்கு மட்டுமல்ல, அவரைப் பின்னணியில் இருந்து இயக்கிய சங்பரிவார சக்திகளுக்கும் சரியான பாடமாக அமைந்தது.

இந்திய மக்களிடையே சமீபகாலமாக ஏற்பட்ட அரசியல் பொருளாதார விழிப்புணர்வு மத்திய அரசை ஆட்டம்காண வைத்தன. ஊழலை ஒழிக்க, ஊழல் செய்தவர்களை கண்காணிக்க லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்தது. லோக்பால் மசோதா ஒருவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவரையும் அந்த சட்டத்தின் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தினை இயற்றுவதற்கோ அல்லது அதில் புதிய ஷரத்துக்களை இணைப்பதற்கோ அரசு மற்றும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரங்கள் இருக்க வேண்டும். ஒரு சிறிய குழுவோ கூட்டமோ அதனைத் தீர்மானிக்க முடியாது என்றும், அது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்றும் மத்தியில் ஆள்வோர் தரப்பிலிருந்து பதில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளதுதான் மாபெரும் விநோதமாகும். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறும் மத்திய அரசு, அந்த மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று கூறிய மத்திய அரசு, அதுகுறித்த விவாதங்கள் வீடியோக்களாகப் பதிவு செய்ய அனுமதிக்க முடியாது என ஆட்சேபனை தெரிவிக்கிறது.

ஊழல் எதிர்ப்பு போரில் சிலர் ஈடுபடலாம். ஈடுபடாமல் பின்வாங்கலாம். அதில் முன் நின்று நடத்துபவர்கள் மீதெல்லாம் மத்திய அரசு பாய்ந்து பிராண்டுவது தேவையற்ற ஒன்று.

மீண்டும் ஒரு எமர்ஜென்சி வரும் என்பதைப்போல் வதந்திகளை உருவாக்குவது, பின்னர், எமர்ஜென்சி இன்னொரு முறை வரவே வராது என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவது மத்திய அரசுக்கு அழகல்ல.

ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை. சிலரால் அரங்கேற்றப்படும் நாடகங்களை தவிர்த்துப் பார்த்தால் ஊழல் ஒழிப்பில் நாட்டு மக்களின் ஊக்கம் நிறைந்த முயற்சி பாராட்டுக்குரியது.

ஊழலை ஒழிக்க அனைவரும் உறுதி ஏற்போ

No comments: