Wednesday, October 29, 2008

என்கவுண்டரில் தப்பினார் அமீர்!
அபூசாலிஹ்
டெல்லி ஜாமியா நகர் கடந்த சில வாரங்களாக பரபரப்புடன் பத்திரிக்கை களில் அடிபட்ட பகுதியாகும். டெல்லி குண்டு வெடிப்புகளில் குற்றவாளிளை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவிய மத்திய உள்துறை தனது தோல்வியை திசை திருப்ப டெல்லி ஜாமியா நகர் பகுதியில் போலி என் கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்திய தாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பொதுவாகவே சர்ச்சைக்குரிய என்கவுண்டர்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அப்போது மட்டுமே பெரிதாக பேசப்பட்டு சில நாட்களில் அடங்கிவிடும் ஆனால் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் நிகழ்ந்த என்கவுண்டர் போலி என்கவுண்டர் என்றே அப்பகுதி மக்களாலும் நடு நிலை ஊடகங்களாலும். மனித உரிமை ஆர்வலர்களாலும் அழைக்கப்பட்டது.சரித்திர சிறப்புமிக்க ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பெருமைக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி புக்கர், பரிசுபெற்ற சர்வதேச மனித உரிமை ஆர்வலர் அருந்ததிராய், முன்னணி வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி போன்றோர் டெல்லி போலி என்கவுண்டர் பிரச்சினையில் ஜாமியா நகர் பகுதி மக்களின் சார்பாக வாதாடினர்.
போலி என்கவுண்டருக்கு மற்றொரு முயற்சியா?
ஆதிஃப் மற்றும் ஷாஹித் என்ற இரண்டு இளைஞர்களின் மீது பிரயோகிக் கப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத் தால் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த அந்த மக்களுக்கு மேலும் ஒரு விபரீதத்தை எந்த தீய சக்தியாவது நிகழ்த்த திட்டமிட்டால் அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும். பொறுத்தது போதும் - பொங்கியெழு என எழுந்து சாதித்த சம்பவத்தைத்தான் நாம் இனி காணப் போகிறோம்.
நம்பர் பிளேட் இல்லாத மர்மங்கள்
இரவு எட்டு மணி கறுப்பு நிற கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில் ஷஹீன் பாக் பகுதியில் நுழைகிறது. அந்தக் காரில் நம்பர் பிளேட்டும் இல்லை. ஆனால் அந்தக் காரில் ஓர் இளை ஞனின் அபயக் குரல் மட்டும் கேட்கிறது.
சுதாரிப்படைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு பரிதாபப் படுகொலை நிகழ்ந்துவிடக் கூடாது என எண் ணியோ என்னவோ கூடுதல் எச்சரிக் கையுடன் மக்கள் அந்த மர்ம காரை சூழ்ந்தனர்.
எவனா இருந்தால் எங்களுக்கு என்ன?
உடனடியாக காரை நிறுத்து. நீங்கள் எல்லாம் யார்? யாரை கடத்திக் கொண்டு போகிறீர்கள்? என கேள்விக் கணை களை துளைத்தபடி மக்கள் சூழ்ந்தனர். மக்களின் கெடுபிடியினால் “நாங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத தடுப்புப் படைக் காவல்துறையினர்’’ என்று கூறினர். அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். அங்கு சற்று பதுங்கி இருந்தபடி பயந்துபோய் காட்சியளித்த அந்த இளைஞனின் பெயர் அமீர் என்பதும் தெரிய வந்தது.
சுற்றி வளைத்த கூட்டத்தைக் கண்ட அந்த சீருடை அணியாமல் வந்த காவல் அதிகாரிகளில் நால்வர் தடாலென சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். ஒரு போலிஸ்காரரும் கடத்தப்பட்ட அமீர் என்ற இளைஞரும் மட்டுமே இப்போது ஷஹீனாபாத் மக்களின் வசம்.
அமீரை சுட்டுக்கொன்று விட்டு அவன் பயங்கரமான பயங்கரவாதி எனவே அவனை சுட்டுக் கொன்றோம் என அறிவிப்பதாக இருந்த சதி திட்டம் மாட்டிக் கொண்ட அந்த போலிஸ் காரரின் வாக்கு மூலத்தில் இருந்து வெளிவந்தது. இந்த நிலையில் மக்க ளின் கூட்டம் அந்த கறுப்பு நிற ஹுண் டாய் காரை சூழ்ந்து கொள்ள பதட்டத்தின் கொதிநிலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காரை சோதனைப் போடுப்பா
காரை சோதனைப் போடு, காரை சோதனைப் போடு என மக்களின் ஆத்திரம் வானத்தை முட்டியது. அந்தக் காரை துடுக்கான இளைஞர்கள் பாய்ந்து விழுந்து சோதனையிட்டனர். அதில் பல ஆவணங்கள் சிக்கின. அதில் பான் கார்டுகள், மொபைல் சிக்கின. கம்ப்யூட் டர் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர் களின் ஐடென்டிட்டி கார்டு போல் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. அந்தக் காரின் உள்ளே நம்பர் பிளேட் கண்டெடுக்கப் பட்டது. னுடு1கூறு 1596 என அதில் காணப்பட்டது. அந்த நம்பர் பிளேட் புதிதாகவும் இதுவரை பயன் படுத்தப்படாததாகவும் இருந்ததைக் கண்டதும் கூடியிருந்த மக்களிடையே ஆத்திரம் அலை பாய்ந்த்து.
சேதப்படுத்தப்பட்ட வாகனம்
கறுப்பு நிற ஹுண்டாய் கார் உடைத்து நொறுக்கப்பட்டது. கார் கண்ணாடிகள் சிதறின. இதற்கிடையில் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜாமியா நகர் ஷஹீனாபாத் பகுதி மக்களால் சிறை பிடிக்கப்பட்ட உ.பி காவல்துறை அதிகாரியையும் அவரால் கடத்தப்பட்ட அமீரையும் ஜாமியா நகர் காவல் நிலையத்தினரிடம் ஒப்படைக்கு மாறு ஜாமியா நகர் காவல்துறையினர் கெடுபிடி காட்டத் தொடங்கினர். பிரச் சினை மிகப்பெரியது உள்ளூர் மேலதி காரிகள் வரவேண்டும். அவர்களிடம் தான் ஒப்படைப்போம் என பொது மக்களும் பதிலுக்கு கெடுபிடி காட்டினர். விடிய விடிய காவல் நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை மக்கள் திரண்டு காத்திருந்தனர். காவல்துறை உயர் அதிகாரி குருசரண்தாஸ் வந்த வுடன் அவர்கள் இருவரையும் ஜாமியா நகர் மக்கள் ஒப்படைத்தனர். அத்தோடு மக்கள் அமைதி அடையவில்லை. அத்து மீறி ஆள்கடத்தல் கிரிமினல் செயலில் ஈடுபட்ட நொய்டா காவல்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உயர் அதிகாரி னு.ஊ.ஞ அஜய் சவுத்ரி `நொய்டா விலிருந்து வந்த ஆள்கடத்தல் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உபி மாநில காவல்துறையினரிடம் தெரிவிக் கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து ஜாமியா நகர் பகுதி மக்கள் வீடு திரும்பினர்.
திரண்ட மக்கள் கூட்டத்தில் ஸஹாரா உர்தூ நாளேட்டின் ஆசிரியர் அஜீர் பர்னி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்களும் திரண்டிருந்தனர்.
நொய்டா நொந்து போனோமடா
இதனிடையில் நொய்டா ஆள் கடத் தல் காவல்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்து இருக்கிறார்.
எங்கள் இளைஞர்களை கடத்தி கண் மூடித்தனமாக கொலை செய்யும் அளவுக்கு சில காவல்துறை அதிகாரிகள் துணிந்த பிறகு நாங்கள் ஒவ்வொரு உள்நோக்கம் கொண்ட காவல்துறை அதிகாரியையும் பத்திரமாக (? ) கவனிப்பது எங்கள் அன்றாட வேலையாக மாறிவிட்டது. எங்கள் இளைஞர்களின் உயிர்கள் எங்க ளுக்கு முக்கியம் அல்லவா? என்கிறார் ஜாமியா நகர் சமூக சேவகர் அமீருல் ஹஸன்

குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு! மன்னிப்புக் கேட்டது சோனி நிறுவனம்!!


குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு! மன்னிப்புக் கேட்டது சோனி நிறுவனம்!!

உலகின் மிகப்பெரிய வீடியோ விளையாட்டுக்களை தயாரிக்கும் சோனி நிறுவனம், குர்ஆனின் வசனங்களை தனது வீடியோ கேமில் பயன்படுத்தியதற் காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்த கவலை அமெரிக்காவின் சிக்காகோ டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களிடம் மனம் வருந்தி மன் னிப்புக் கேட்பதாகவும், லட்சக்கணக்கான தங்களது கணினி மற்றும் வீடியோ கேம் பிரதிகளை திரும்பப் பெறுவதாகவும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் பேட்ரிக் செய்போல்டு அறிவித்திருக்கிறார்.
சோனியின் `லிட்டில் பிக் பிளானெட் கேம்’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டுக்கு வருவதாக இருந்தது. இந்த வீடியோ விளையாட்டில் இடம் பெறும் இசையுடன் கூடிய பாட்டில் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் தேவையே இல்லாமல் (முஸ்லிம்களை சீண்டுவதற்காகவே) இடம்பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தன.
இன்றைய தேதி வரை சோனியின் பி53 மட்டுமே பிரபலமான வீடியோ விளை யாட்டாக இருந்து வந்தது.
தற்போது அந்த சாதனையை முறியடிப்பதற்காக வெளிவந்த சோனியின் லிட் டில் பிக் பிளானட் முஸ்லிம் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபிள்ளை விளையாட்டில் குர்ஆன் வசனங்களை சேர்த்தது சிறு பிள்ளை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாக வீடியோ மார்க்கெட்டுக்கு வரு வது இது முதல்முறையல்ல. ஜப்பான் நிறு வனம் ஒன்றும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இதைப்போன்று மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது

abusalh news about hindutva terrorism

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!
ஸப்ரன் ஹபீப்
(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.
செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.
இதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.
இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.
இந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.
விசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.
உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.
(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)
நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

Thursday, September 25, 2008

போலிஎன்கவுண்டர்: ''எங்கிருந்தோ கொண்டுவந்த பிணங்கள்!
சர்ஜுன்
டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த விமர்சனக் கணைகளால் ஆடிப் போன மத்திய அரசும், டெல்லி பிரதேச அரசும் எத்தைத் தின்றால் பித்தம் தனியும் என்ற நிலையில் தடுமாறியது. இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என அப்பாவிகள் மீது குற்றம்சாட்டி வளைத்துப் பிடித்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு குற்றங்களில் சங்பரிவார் இயக்கங்கள் பின்னணியில் இருந்ததாக பல்வேறு மட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த கோணத்தில் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ துப்பறிந்த தில்லை. உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய உண்மை எண்ணம் இல்லையோ என்பதை நிரூபிக்கும் விதமாக அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாக வும் அதில் இருவர் கொல்லப்பட்ட தாகவும், கொல்லப்பட்டவரில் ஒருவர் ஆதிஃப் என்ற பஷீர்தான் முக்கிய சதிகாரன் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் தெரிவித் தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியும் பலி யானதுதான் பெரும் சோகம்.
டெல்லியின் ஜாமியா நகர் பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி யாகும். குறுகிய சந்துகளில் திடீரென நாடகம் போல் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
குறுக்குச் சந்துகளில் குமுறலுடன் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் முஸ்லிம் கள் குழுமினர்.ஒலிபெருக்கிகளின் மூலம் பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாரம்பரியம் மிக்க பல்கலைக் கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டது தேவையற்ற பதட் டத்தை ஏற்படுத்தியது. ஜாமியா நகரில் ஒரு போலி என்கவுண்டர் நிகழ்த்தி ஓர் அபார்ட்மெண்டில் நான்காவது தளத்தில் இரண்டு உடல்களை வேண்டுமென்றே வைத்து நாடகமாடுவதாக ஜாமியா நகர மக்கள் கோஷம் எழுப்பினர்.சில உள்நோக்கம் கொண்ட தொலைக்காட்சிகள் பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தவறான தகவல்களைக் கொடுத்தன.ஜாமியா நகர் பாட்லா ஹவுஸ் அபார்ட்மென்டில் 4வது மாடியில் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.நடைபெற்ற இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கோரிக்கை விடுத்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆன வர். ஜாமியா நகர் பகுதி மக்கள் வெகு காலமாகவே காவல்துறையினரின் கெடுபிடிகளில் சிக்கி வேதனையடைந்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வுக்கும் பிறகு இப்பகுதியை சல்லடையாக சலிப்பதே நடைமுறையாகி விட்டது என்றும் தனது குமுறலை ஜீலானி தெரிவித்தார்.இருவர் முன்கவுண்டர் செய்யப்பட்ட விதமும், என்கவுண்டர் செய்த இடமாக காவல்துறையினர் குறிப்பிடும் இடமும் முழுமையாக சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்டவரின் முகத்தை பொதுமக்களிடம் காட்டவில்லை. மர்ம மான முறையில் போர்வையால் மூடப் பட்டதைக் கண்டு சந்தேகம் எழுப்புகிறார் ஃபைஸல்கான் என்ற அப்பகுதிவாசி. எங்கள் பகுதியைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறார்கள். அவர் மாணவரா? அல்லது குடும்பஸ்தரா? என்பதை எங்களிடம் காட்டாமல் அவர்கள் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? அவர்களாகவே மர்மமான முறையில் அறிவித்திருப்பது நிச்சயம் சந்தேகத்துக் குரிய ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடுகிறார்கள் அவ்வூர் வாசிகள்.நீங்கள் இந்தப் பகுதி யைப் பாருங்கள், யாரும் தப்பித்து ஓடும் நிலையிலா இருக்கிறது? மிகவும் மக் கள் நெருக்கமான பகுதி யில், அதிலும் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்முகாமிட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ள யாருமே எவ ரும் தப்பித்து ஓடியதைப் பார்த்ததில்லை என டெல்லி ஜாமியா நகர் பகுதிவாசி ஆர்.ஆபித் குறிப்பிடுகிறார்.ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் தின் விரிவுரையாளர் ஃபரியாத் தீவிர வாதிகள் பதுங்கி இருந்ததாக சொல்லப் படும் எல்-18 அபார்ட்மென்ட்டின் பின்னால் வசிக்கிறார். ஒரே ஒரு சிறிய புல்லட் சத்தத்தைக் கேட்டேன் என்கிறார்.எங்களுக்கு ஒரு உண்மை தெரி கிறது. ஒவ்வொருவரும் முஸ்லிம்களைக் குறிவைப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இந்த முஸ்லிம் பகுதி குறி வைக்கப்படுகிறது என்கி றார் ஜாமியா நகர்வாசி சலீமுத்தீன்.டெல்லியில் நடந்த தாகக் கூறப்படும் என் கவுண்டர் குறித்து நேரம் வாரியாகப் பார்ப்போம்.காலை 10 மணி20 காவல்துறை அதி காரிகளைக் கொண்ட படை துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் ஜாமியா நகரில் நுழைகிறது. அந்தப் படை பிளாக் எல்-18 அபார்ட் மென்ட்டை சுற்றி வளைக்கிறது.
11 மணியிலிருந்து 11.45 மணிக்குள்காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, புல்லட் புரூஃப் என்ற குண்டு துளைக்காத சட்டை அணியாத நிலை யில் கதவை உடைக்கிறார். காவல்துறை சோதனைக்காக வந்திருக்கிறோம் என பெருங்குரலில் கத்திக் கொண்டே உள்ளே செல்ல முயலும் போது உள்ளி ருந்து 3 எம்.எம். பிஸ்டல் சீறுகிறது. மூன்று தோட்டாக்கள் சர்மாவை நோக் கிப் பாய்ந்தன. இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்தது. சர்மா தரையில் சாய, அவரை காவல்துறை யினர் தாங்குகின்றனர். மற்றொரு தோட்டா ஏட்டு பல்வான் சிங்கின் வலது கையில் துளைத்தது. காவல்துறை ஆய் வாளர் சர்மா `ஹோலி பேமிலி` மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு வயிற்றிலிருந்த குண்டு அகற்றப் பட்டது.மூத்த காவல்துறை அதிகாரிகள் இணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) கர்னால் சிங் மற்றும் துணை ஆணையர் (சிறப்பு) அலோக் குமார் உள்ளிட்டவர்கள் ஜாமியா நகர் வந்தனர்.சிறப்புப் படையின் பல்வேறு பிரிவின ரும் தேசிய பாதுகாப்பு கமாண் டோக்களும் அங்கு வந்தனர். மீண்டும் ஒருதடவை காவல்துறை அதிகாரிகள், அபார்ட்மென்டுக்குள் நுழைய முயல்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.22 சுற்றுகள் துப்பாக்கிகள் தோட்டாக் களை உமிழ்கின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரண்டு பேர் குதித்து தப்பியதாகவும், ஒருவர் காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் அப்புறப்படுத்து கின்றனர்.சரியாக 11.45 மணி துப்பாக்கிச் சண்டை ஓய்ந்து விட்டதாக காவல் துறை அறிவித்து விட்டது. காவல் துறை அறிவித் ததுதான் தாமதம், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் கள் வீதிகளுக்கு வெளியே வந்து உள்ளூர் தொலைக் காட்சி சேனல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பள்ளிவாசல்களில் தீவிர வாதிகள் பதுங்கியிருந்ததாக பொய்ச் செய்தியை ஒளிபரப்பியதால் முஸ்லிம் கள் ஆத்திரம் அடைந்தனர்.மாலை 4 மணிக்குடெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் செய்தியாளர் கூட்டத் தில் என்கவுண்டர் குறித்து அறிவித்தார்.மாலை 7 மணிகாவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா படுகாயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.காவல்துறையினரின் என்கவுண்டர் அறிவிப்புகள் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் விவகாரக்குழு செயலாளர் முஜ்தபா ஃபரூக் அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் வஹாப் கில்ஜி மற்றும் டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி போன்றோர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.என்கவுண்டர் நடந்ததாகக் கூறப் பட்ட இடங்களில் முஸ்லிம் தலைவர் களின் குழுவோடு நானும் சென்றேன். ஆனால் எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என குமுறலுடன் கூறினார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். டாக்டர் ஜஃபருல் நாட்டின் முன்னணி சமூகநல ஆர்வலர். மில்லி கெஜட் ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியர் அவர் உள்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றபோது காவல்துறையினர் அனு மதி மறுத்ததால் என்கவுண்டர் விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. முக்கிய முஸ்லிம் அமைப்புகளான முஷாவராத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த் போன்ற முக்கிய அமைப்புகள் போலி என்கவுண்டரை எதிர்த்து மறியல் போரை செப்டம்பர் 26ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.இதனிடையே முறையற்ற கைதுகள் தொடர்ந்து வருவதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலஹா பாத்தைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர். அவர் ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. என்ற ஆராய்ச்சி உயர்படிப்பு கற்று வந்தார். அவரை அபுல் ஃபஸல் என்கிளேவ் பகுதியில் வீடு எண் சி.81லிருந்து கைது செய்துள்ளனர். முஹம்மது ரஷீத் வீட் டிற்கு அருகில் டீக்கடை நடத்திவரும் 75 வயது பெரியவர் இதனை தெரிவித் திருக்கிறார்.
இந்தியத் தலைநகர் ஆயிரத்து நூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட போதும் அனைத்து மக்களுக்கும் கூர்மையான நீதி வழங்கி மகிழ்ந்தனர்.
ஆனால் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியின் காவல்துறையின் சித்திரவதைகளால் மனம் நொந்து நிஜாமுத்தீன் (30) மற்றும் முயீனுத்தீன் (25) ஆகியோர் தற் கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அதற்குக் காரணமான இரண்டு அதி காரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலை விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகிறதா?
மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு... ஒரு வீரத் தாயின் ஆவேசம்
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.
அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.
குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.
தவுகீர் அப்பாவி
தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.
தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.
எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா
சிமிக்கு எதிரான 194 வழக்குகளில் 192ல் ஆதாரமில்லை!மண்டை காயும் மகாராஷ்டிரா அரசு!!
ரையான்
மத்திய அரசு சிமி இயக்கத்தின் தடைக்கு மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரும்பாடுபட்டு வருகிறது. சில மாநில அரசுகளும் சிமி தடை விஷயத்தில் முனைப்பு காட்டின.அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதில் எப்போதுமே ஆர்வம் காட்டிவரும் மகாராஷ்டிர அரசும் சளைக்காது தனது தீவிரத்தைக் காட்டியது.அப்பாவி இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் எப்போதும் வேகம் காட்டிவரும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் 194 வழக்குகளை சிமி என்ற இயக்கத் திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இதில் மகாராஷ்டிர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் எதுவும் பெரும்பாலான வழக்குகளில் நிரூபணமாகவில்லை. 192 வழக்குகளில் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தனக்குத் தானே கரி பூசிக் கொண்டது. இரண்டு வழக்குகளில் மட்டுமே (கொஞ்சூண்டு) ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.தீவிரவாத தடுப்புப் படையும், புலனாய்வு அமைப்புகளும், காவல்துறை யினரும் நாட்டில் நிகழ்ந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சிமியே காரணம் என பிரச்சாரத்தை மேற்கொண் டும் இன்றைய தேதி வரை தங்களது குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங் களைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.மகாராஷ்டிர அரசின் அரசு வழக்கறிஞ ரும் உச்சநீதிமன்றத்தில் சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் வினோதமாகும்.மகாராஷ்டிர அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் சிமியைத் தடை செய்ய வேண்டும், நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தங்களது அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.மகாராஷ்டிர அரசு சிமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகள் குறித்து பார்ப் போம். மகாராஷ்டிர அரசு 1,057 பேர் மீது குற்றம்சாட்டி 194 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.ஆனால் மகாராஷ்டிர அரசின் காவல் துறை தொற்ற வழக்குகளில் வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே பூர்வாங்க ஆதாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 56 வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 246 பேர் எவ்வித ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப் பட்டனர்.ஆறு வழக்குகளில் சிக்க வைக்கப் பட்ட 79 சிமி அமைப்பினர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவித்தது. இவர் களைத்தான் பயங்கரவாத இயக்கங் களுக்குத் தொடர்பு உடையவர்களாக மகாராஷ்டிர அரசு குற்றம்சாட்டி துன்புறுத் தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. (தூ... வெட்கமாயில்லை?)693 சிமி இயக்கத்தினர் தொடர்பு டைய 111 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவும் மகாராஷ்டிர அரசுக்கு படு தோல்வியை பரிசளிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனி டையே இதுதொடர்பாக மாநில காவல் துறைத் தலைவர் அனாமி நாராயண் ராஜ் என்பவரை சந்திக்க செய்தியாளர்கள் முயன்றும் அவர் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்செய்தியை முன்னணி செய்தி ஏடான இன்குலாப் ஏடு தெரிவித்துள்ளது

Thursday, September 18, 2008

மாதம் ஒரு குண்டுவெடிப்பு! செயலிழந்த மத்திய உள்துறை!!
சத்தியவேந்தன்


டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியா னார்கள். அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்விடங்களுக்கு அருகில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் அவர்களுக்கு தொடர்புண்டா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். குண்டுவெடிப்பில் தொடர்பில்லை எனில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பிற்கு அடுத்த நாள் பெங்களூருவில் பாஜக செயற்குழு கூட்டம் கூடியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மாநில அரசுகள் இயற்றியிருக்கும் சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
மோடி டெல்லியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் என்பது முன் கூட்டியே தெரியும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் தான் எச்சரித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். (அகமதா பாத் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு முன்பே மோடியிடம் எச்சரித்தது என உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்ததற்கு பழிக்குப் பழியாக மோடி தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்).
மக்கள் கூடும் முக்கியமான இடங் களில் குண்டுவெடித்து அப்பாவிகள் பலியாகும் கொடும் செயலை நிகழ்த்திய இரக்கமற்ற அரக்கர்களை மன்னிக்க முடியாது. சிரித்துக் கொண்டே வந்த மனித மலர்களைப் பிய்ந்த தசைத் துண்டுகளாக, ரத்தக் கூளங்களாகப் பார்க்கும் எவருக்கும் அதனை நிகழ்த் திய மிருகங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தை விளக்குவதற்கு வார்த்தை களே இல்லை.
என்ன ஆனது என் இந்திய தேசத்திற்கு? குண்டுவெடிப்புகள் ஒருபுறம், கலவரங்களை ஏற்படுத்தி அப்பாவிகளைப் பிடித்து சித்திரவதை செய்தல் மறுபுறம் என நாடு முழுவதும் வேதனைச் செய்திகளே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கொரு முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது போக தற்போது மாதத்திற்கொரு தடவை குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. மாதம் மும்மாரி பொழிந்ததா என அந்தக் காலத்தில் மன்னர்கள் கேட்டது போக இப்போது மாதம் மும்மாரி குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என ஆள்வோர் கேட்கின்ற நிலையிலேயே தற்போதைய சூழல் அமைந்துள்ளது.
குண்டுவெடிப்புகள் எப்போது நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த அவலம் தொடங்கியது? இந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்? குண்டுவெடிப்புக்குப் பிறகு தவறாக குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் யார்? இந்த குண்டுவெடிப்புகளுக்கு யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்பதை யெல்லாம் தீவிரமாக ஆய்வு செய்தால் நிஜங்கள் நிதர்சனமாகத் தெரியவரும்.
முதல் காட்சி குண்டுகள் வெடிக்கும். இரண்டாம் காட்சியாக அத்வானி, மோடி, (தமிழ்நாட்டில் ராமகோபாலன்) போன் றோர் வெண்திரையில் வெளிச்சத்துக்கு வருவார்கள். ஒரு குற்றச்செயல் நடந் தால் குற்றவாளிகளைக் கண்டுபிடி, கைது செய் என கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கூறுகெட் டத்தனமாக கூச்சலிடுவதைக் கண்டு நாட்டு மக்கள் நகைக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் அனைத்தும் ஒரு சம்பிரதாய சடங்கு களாகவே மாறிவிட்டன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு கள் வெடிக்கின்றன. அப்பாவி இந்திய மக்கள் பலியாகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் வினோதமான முறையில் பிரச்சாரம் செய்கின்றன. உளவுத்துறை ஊகங்களை மட்டுமே புலனாய்வு அறிக்கையாக வெளியிடுகின்றன.
பெங்குளூரு, மாலேகான், ஹைதரா பாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், அஜ்மீர் என பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான வர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பாவிகளை வளைத்து படம் காட்டு வதோடு அரசுகளின் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றன. விளைவு தீவிரவாதம் தொடருகிறதே யொழிய நிற்பதாகத் தெரியவில்லை. அரசுகளின் மெத்தனமும் இருட்டில் குருட்டுத்தனமாக சதிகாரர்களைத் தேடும் போக்கும் மக்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. சதிச்செயலைக் கண்டு பிடித்து சதிகாரர்களை கையும் களவு மாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வழியைக் காணோம்.
இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து வெள்ளை அறிக்கை தர மத்திய, மாநில அரசுகள் தயாரா?
அப்பாவிகளை வளைத்துப் பிடிப்பது. சதி குறித்து ஈமெயில் வந்தது, கொசு மெயில் வந்தது என கோக்கு மாக்குத் தனமாக அறிவித்து விட்டு அசட்டுத் தனமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது. மனித உயிர்களை தீர்வை நோக்கி நடைபோடாமல் வதந்திகளிலும் வக்கிர சிந்தனைகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கிலிருந்து மீளும் வழியைக் காணோம்.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவா ளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் ஆணை யம் சுட்டிக் காட்டிய (பெரும் புள்ளிகளும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை)
குஜராத் இனப்படுகொலை சதிகாரர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொடூரன் மோடிக்கு வழங்க வேண்டிய விசாவைக் கூட ரத்து செய்தன. ஆனால் இந்திய மண்ணில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன? மீண்டும் பொடாவை கொண்டு வரவேண்டும் என அவர்தான் இங்கு சுத்த யோக்கியர்போல் கூச்சலிடுகிறார்.
2006 ஏப்ரல் 6 ஆம் தேதி மகராஷ்ட்ர மாநிலம் நான்டெட்டில் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறை பொறியாளரின் வீட்டில் குண்டு வெடித்தது.
வெடித்த குண்டுகள் பொறியாளரின் மகன் நரேஷ் (வயது 29) மற்றும் அவனது நண்பன் பன்சே (வயது 31) என்ற இருவரின் உயிரையும் குடித்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் பிணங்களை போட்டு விட்டு வீட்டை விட்டே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினரின் சோத னையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு, வெடிக்காத தோட்டாக்கள், ஒட்டுத் தாடிகள், வெள்ளை தொப்பிகள், அவ்ரங் காபாத் பள்ளிவாசல்களின் படங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
அதே மகராஷ்ட்ரா மாநிலத்தின் பார்பானி முஹம்மதியா பள்ளிவாசலில் ஏப்ரல் 9 ஆம் தேதி 2006. வெடித்த குண்டு வெடிப்பு தொடர்பாக சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெசவ் என்பவன் போஸ்லா ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவன். இவர்கள் அனைவரும் சங்பரிவார் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத் தில் நவி மும்பை மற்றும் தானேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பிடிபட்ட சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இவைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாட்டில் தொடர்ச் சியாக நடைபெறும் குண்டு வெடிப்பு களின் விசாரணைகள் இருட்டு மூலை யில் கறுப்பு பூனையைத் தேடும் முயற்சி யாகவே இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளை குறித்த பிரச்சனைகளில் பாஜகவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு உண்மை நிலையை அறிய ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய உள்துறை செயலிழந்து விட்ட தையே இது காட்டுகிறது

Friday, September 12, 2008

இறைத்தூதரை கேலிச்சித்திரமாக்கிய தினமலர்!
தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு!!
ஹபீபாபாலன்

உலகத்தின் வழிகாட்டி, உத்தமர் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நெறி வசந்தமாய் பூமிப் பந்தெங்கும் பரவி வருகிறது. காற்றை விட வேகமாக, கடலை விட ஆழமாக, ஆகாயத்தை விட விசாலமாக அந்த தூயவரின் வழிகாட்டுதல்கள் எட்டுத் திக்கும் பற்றிப் பரவி வருகிறது. நபிகள் பெருமானை அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யாகப் பெற்றதை தங்களின் பெறற்கரிய பாக்கியமாக எண்ணி உலகின் 140 கோடி முஸ்லிம்கள் பூரித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். உயிரை விட மேலாகக் கருதும் அந்த உத்தமரின் புகழுக்கு துளி அளவு மாசு நேர்ந்தாலும் புழுவென துடித்துப் போவார்கள், புயலென கொதித்து எழுவார்கள், சூரியக் கதர்களாய் சுட்டெரிக்கப் புறப்படுவார்கள்.
அண்ணலாரின் மீது இந்த அவனி யில் வாழும் 140 கோடி முஸ்லிம்கள் காட்டும் அன்பு அத்தகையது.

பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பினைக் குலைக்கும் முயற்சியை எவர் செய்தாலும் அப்போது `யுகப் பிரளயமே’ உருவானதோ என இந்த உலகமே கலங்கும் அளவுக்கு மக்களின் தார்மீக கோபம் இந்த பூமிப் பந்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.
சரித்திரங்கள் சாட்சியம் பகர்கின்றன. இவையெல்லாம் ஒரு சராசரி பொது அறிவு கொண்ட மனிதனுக்குக் கூட தெரியும். ஆனால் தினமலர் என்ற நாளேட்டிற்கு எப்படித் தெரியாமல் போனது? சீண்டிப் பார்க்கும் சின்னப் புத்தி இந்த இதழின் பரம்பரை குணம் என்றாலும் கூட விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விஷய ஞானம் கொண்டவர்கள்(!)தான் தினமலரை நடத்தி வருகிறார்கள் என்பதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.
தமிழகம் திராவிட இயக்க பூமி, பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பது பிரச்சார வியூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. பொட்டில் அடித்தாற்போல், செவுளில் அறைந்தாற் போல் மற்றொரு உண்மையை விழுங்கிக் கொள்ள, உண்மையை விளங்கிக் கொள்ள தமிழகம் மெல்ல மெல்ல தயாராகி வருகிறது.
இந்திய பூபாகத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வருகின்ற ஹிந்துத்துவ பாசிசவாதத்திற்கான மூலப்பொருள், கருப்பொருள், அந்த பாசிசவாதத்தை வேகமாக கொண்டு செல்ல உதவும் எரிபொருள் தமிழகத்திலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவருக்கும் தலைமைப் பீடமான நாக்பூர் என்றும், அதன் தலைவர் சுதர்சன் என்றும் இந்த நாடு தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவரின் (அஞ்)ஞான குருவாக தமிழகத்தைச் சேர்ந்த குருமூர்த்திதான் விளங்கி வருகிறார் என்பதை கள்ளம் கபடமில்லா தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப் படுகொலையின் சூத்ரதாரி என வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் வரித்தெடுக்கப்பட்டவர் நரவேட்டை நரேந்திர மோடி. அவரது மூச்சுக்காற்று பட்டால் கூட முழு நாசம் என எண்ணிய இந்த நாடு அவரை சற்று தள்ளியே வைத்தது. பாதகம் இழைக்க அஞ்சாத பாஜக கூட கொடூர மோடியை குஜராத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என தலையில் குட்டி வைத்தது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்து மோடியை ஒரு சர்வதேச `போர்க் குற்றவாளி’ எனும் அளவுக்கு கீழிறக்கி காட்டியது.
இந்தியாவே காறி உமிழ்ந்தால் என்ன? அமெரிக்காவும் பிரிட்டனும் விசா வழங்க மறுத்தால்தான் என்ன? பாஜகவே பக்கத்தில் வராதே என வெருண்டோடினால்தான் என்ன? மூன்றாயிரம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு முழுக் கிரீடம் சூட்ட நாங்கள் தயார் என தமிழகத்திலிருந்து முதல் குரல் எழுந் தது. ஒன்று இரண்டானது, இரண்டு மூன்றானது.
திராவிடத் தாய் என தனது கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனி விமானத்தில் பறந்து சென்றார். பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ஹிந்துத்துவ பாசிசத்தின் அகில இந்திய பிரச்சார பீரங்கி, சிரிப்பு நடிகர் `சோ’ ராமசாமி தனது பத்திரிக் கையின் விழாவுக்கு அழைத்தார். மோடியின் ஆட்சியை பொற்கால ஆட்சி என விமர்சித்து சிறப்பு இதழ் வெளி யிட்டது கல்கி வார ஏடு. (மூன்றாயிரம் முஸ்லிம்களை கதறக் கதற குதறிய அந்த செயலைத்தான் (!) கல்கி ஏடு பொற்கால ஆட்சி என்றதோ?) மேற்கூறிய அத்தனை புண்ணிய(!) வான்களுக்கும் ஒருபடி மேலாக செயல்படும் ஒரு தீவிர பாசிச சக்தியாக தினமலர் நாளேடு செயல்பட்டது. முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்துவதில் முன்னிலை வகித்தது தினமலர். நாளொரு அவதூறும், பொழுதொரு புளுகுமாய் வெளியிட்டு வெறித்தனத்தை பறைசாற்றியது.
முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்நாட் டில் வாழும், உழைத்து பிழைக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அழுத்தப் பட்ட மக்களை அவமானப்படுத்துவதில் அது முன்னிலை வகித்தது.
கோபால்ஜி என்றழைக்கப்படும் தினமலர் (வி.எச்.பி.) கோபால்
சமூக நீதி தத்துவத்தின் பிதாமகனாக தமிழக மக்களால் போற்றப்படும் பெரியாரை அனைத்துத் தரப்பு மக்களும் பெரியார் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெரியாரை ஈ.வே.ரா. என தனது பத்திரிக்கையில் எழுதி ஈனத்தனமாக நடந்து கொண்டது.
ஒரு தாயின் வயிற்றில் நாம் அனை வரும் பிறந்தால் அந்தத் தாயின் மணி வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தோ மடா தம்பிகளா? என தமிழக இளைஞர் களை சகோதர வாஞ்சையுடன் அழைத்து மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அத னால்தான் அவரை அண்ணா, அண்ணா என தமிழகம் அழைத்து மகிழ்ந்தது. அரசியல் எதிர்முகாமில் உள்ளவாகள் கூட அண்ணா என அழைத்த போதும், தினமலர் மட்டும் அண்ணாதுரை என அதிமேதாவி(!)த்தனமாக அழைத்து தன்னை அடையாளம் காட்டியது.
தமிழ்நாட்டில் பாமரர்களையும் பத்தி ரிகை படிக்க வைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். பத்திரிகையுலக ஜாம்ப வான் என அவரை அழைப்பதுண்டு. அவரை தமிழர் தந்தை என அவர் மீது அன்பு கொண்டோர் அழைத்தனர். அதில் தினமலருக்கு ஏற்பட்ட வயிற்றெ ரிச்சலில் கொச்சைப்படுத்தும் வரிகளை வெளியிட்டது.
தமிழின உணர்வாளர்களை, தலித் பெருமக்களை,பிற்படுத்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி இன்பம் கண்டது.
கற்பு குறித்து விநோதமான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது என பைத்தியக்காரன் கூட கற்பனை செய்ய முடியாத ஒரு கருத்தை தினமலர் அச்சில் ஏற்றியது.
மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாடே வேதனை யில் ஆழ்ந்த அந்த சம்பவத்தில் கூட தினமலர் தனது ஈனச் செயலின் மூலம் சாதனையைப் படைத்தது.
`மாலேகான் பள்ளிவாசலில் இருந்த குண்டு வெடித்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
இவ்வாறு ஈனத்தனத்திலும் இழிசெய லிலும் சாதனை(!) படைத்த தினமலர், பெட்ரோல் கிணற்றில் பீடி பற்ற வைத்த தைப் போன்ற ஒரு முட்டாள்தனமாக செயலைச் செய்து நாட்டையே அவமா னத்தில் ஆழ்த்தி விபரீதத்தை விதைத்தது.
நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக டென்மார்க்கிலிருந்து வெளி வந்த ஜிலாண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. ஒன்றல்ல, 12 கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டது.
டென்மார்க்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது கோபத்தை ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வெளியிட்டனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. எகிப்தின் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் ஷேக் அஹ்மத் தந்தாவி யூசுப் அல்கர் ளாவி போன்றோர் அந்தப் பத்திரிக்கை மன்னிப்புக் கேட்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். டென்மார்க் அரசும், ஜிலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிக் கையும் மார்க்க அறிஞர்களின் கோரிக் கைக்கு தலைசாய்க்க மறுத்துவிடவே `டென்மார்க் கார்ட்டூன்’ விவகாரம் சர்வதேச அளவில் கொதி நிலையை எட்டியது. உலகெங்கும் உள்ள முஸ்லிம் கள் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
மொராக்கோவிலிருந்து இந்தியா வரை, மவுரிடானியாவிலிருந்து இந்தோ னேஷியா வரை முஸ்லிம்களின் `பெருமானார் பேரபிமானம்’ வெளிப்பட் டது. டென்மார்க் பொருட்களை புறக்கணிக்குமாறு உலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகித்த டென்மார்க், உலக முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் இழப்பினை சந்தித்தது. பால் பொருட்கள் பாழாயின. போராட்டங்கள் ஓயாத சூழ்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முஸ்ஸன் மன்னிப்புக் கேட்டார். போப் 16ஆம் பெனடிக்ட், பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ’பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் தேவையற்ற விஷயம்’ என கண்டித்தார்.
உலக அளவில் பெரும் புயலையும் பதட்டத்தையும் எழுப்பிய அதே டென் மார்க் கார்ட்டூன்களில் ஒன்றைத்தான் அசட்டு துணிச்சலுடன் உள்நோக்கத் துடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.
கடந்த திங்கள்கிழமை (1.9.08) அன்று வேலூர் பதிப்பு தினமலரில் இலவச இணைப்பான கம்ப்யூட்டர் மலரில் 12வது பக்கத்தில் “லுடிர கூரநெ இணையதளம் மூலமாக படங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு `முஹமது நபி கார்ட்டூன்’ என்று விஷமத்தனமான கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டிருக்கிறது தினமலர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைபேசி தகவல் பரிமாற்றங்களும், குறுந்தகவல்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. இறைத்தூதரை அவமதித்த அடாத செயலை அனுமதிக்கவே மாட்டோம் என நாடெங்கும் குமுறல்கள் எழுந்தன. அந்த இழிசெயலை நிகழ்த்தய வேலூர் தினமலர் அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் மக்களின் கோபம் ஆத்திர அலையாக வெடித்தது.
வேலூரில் ஏற்பட்ட எழுச்சி ஆதிக்க சக்திகளின் அடிவயிற்றை கலக்கியது. (வேலூர் போராட்டம் தனிச்செய்தியில் காண்க). தமிழகமெங்கும் கொந்தளித்த தாலும் இதன் வீச்சில் உலகமே பதற்றம் அடைந்ததாலும் உலக மக்களின் உச்சக் கட்ட வெறுப்பை சுமந்த கேவல தினமலர் முதல் பக்கத்தில் வருத்தத்தினை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த எதிர்ப்பலையில் மக்களைத் திரட்டும் விஷயத்தில் தமுமுக பெரும் பங்கு வகித்தது. 1995ஆம் ஆண்டு முதலே தமிழக முஸ்லிம்களின் போர்க் குணத்தை வகுத்தெடுப்பதில் முழு இடம்பெற்ற அந்த மக்கள் இயக்கம் இதுவரை முஸ்லிம்களின் கல்வி, சமூகம் அரசியல் தொடர்பான போராட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டியது.
இறைத்தூதரை அவமதித்த தினமலர் விவகாரத்தில் தமுமுக தமிழகமெங்கும் போர்க்கோலம் பூண்டது. இளைஞர் சக்தியின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தலைவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.
சரியாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அவமதிப்புக் கார்ட் டூனை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தினர். இதைப் பயன்படுத்தி நாடெங்கும் சங்பரிவார சக்திகள் பெரும் கலவரங்களை நடத்த திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ரத்தம் குடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. புனித ரமலான் மாதத்தில் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனி டம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம்களை வேதனைப்படுத்த வெறியோடு காத்தி ருந்த கூட்டத்தின் முக்கிய சதிகாரனாக தினமலரின் முதலாளிகளில் ஒருவரான கோபால் என்பவர் அறியப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய அஜெண்டாக்களை செயல்படுத்து வதையே லட்சியமாகக் கொண்டு அவரும் அவரது பத்திரிகையும் விளங்கி வருகிறது என்பதை இந்த நாடும் மக்களும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
மக்களின் பெருங்கோபத்தைக் கண்ட தினமலர் மன்னிப்பு கேட்டது.
மன்னித்தல் என்பது மிகப் பெரிய வர்களின் இயல்பு. மன்னிப்பு என்பது தவறிழைத்தவர்கள் அதை மீண்டும் செய்யலாம் என்பதற்கான லைசென்ஸ் அல்ல. தவறினை ஒப்புக்கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதுதான் மன்னிப்பு.
தமுமுக தலைமையிடம் தினமலர் நிர்வாகம் நேரடியாக அணுகி தனது வருத்தத்தினை தெரிவித்தது.
மேலும் சில சாதுவான முஸ்லிம் இயக்கங்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது வருத்தத்தினை தினமலர் நிர்வாகம் தெரிவித்ததாக தனது முதல் பக்க மன்னிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
தினமலர் பத்திரிகைக்கு இந்த சமுதாயம் வழங்கியிருக்கும் மன்னிப்பு தினமலர் தனது தீய இயல்புகளை திருத்திக் கொள்வதற்கான அவகாசம் மட்டுமே. கார்ட்டூன் விவகாரத்தால் உலக முஸ்லிம்களின் உச்சக்கட்ட வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் தினமலர் தன்னை திருத்திக் கொள்ளுமா? அல்லது மீண்டும் சிலுமிஷங்களைத் தொடர்ந்து சீரழிவில் சிக்கிக் கொள் ளுமா?
தினமலர் தான் முடிவெடுக்க வேண்டும்.
தினமலரின் அந்தர்பல்டியும் அறிவுகெட்ட வாதமும்
``You Tube’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக தினமலர் கம்ப்யூட்டர் மலரில் `இறைத்தூதர் அவமதிப்பு கார்ட்டூன்’ குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
``You Tube’ என்ற இணையதளம் வீடியோ காட்சிகளுக்காக உலக அளவில் பிரபலமான இணையதளமாகும். தேவையான படக் காட்சிகளும், சில தேவையற்ற படக் காட்சிகளும் கொண்ட அந்த இணையதளம் குறித்து அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத தினமலரின் செயலைப் பார்க்க முடிகிறது. கார்ட்டூனைப் பார்க்க `லுடிர கூரநெ’ இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதில் தினமலரின் விஷமம் தெரிய வருகிறது.
இரண்டாவது அது உலகையே டென்மார்க் கார்ட்டூன் என்பது மடையனுக்குக் கூடத் தெரியும். வேண்டுமென்றே வம்பை விலை கொடுத்து வாங்குவதற்காகவே செய்த தினமலரின் தீய செயல் தெளிவாகிறது. அதை தங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர் தொழிலாளி ஒருவர் செய்து விட்டார் என மழுப்புவது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.
சரி, ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்த தவறு என்றே ஒப்புக்கொண்டு தொலைப்போம். ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் செயலை ஏன் செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வைத்தே தினமலரின் ஊழியர்கள் உரம் ஊட்டப்படுகிறார்களா?
அப்படி ஒரு வெறிபிடித்த மனநோயாளிகளின் கூட்டம் தமிழகத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. தினமலரின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பியூன், குப்பை கூட்டி பெருக்குபவன், முதலாளி என அனைவரும் குரோத வெறிபிடித்த கிறுக்கன்களாகவே இருப்பார்களோ என மக்கள் நினைப்பதில் அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது

Wednesday, September 3, 2008

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!! -சர்ஜுன்




விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!
-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன

Monday, July 7, 2008

வரலாற்றில் முதன்முறையாக அதிக முஸ்லிம் மாணவர்கள்!


வரலாற்றில் முதன்முறையாக அதிக முஸ்லிம் மாணவர்கள்! பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி-அபூசாலிஹ்
இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இது முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக் கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்ற புரட்டல் வாதத்தை புறம் தள்ளும் விதமாக அமைந்து சவுக்கடி கொடுத்தது.
இவ்வாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில்2699 இடங்களில் முஸ்லிம்களுக்கு 94 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இது 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் படியே கிடைத்துள்ளது.
1483 இடஒதுக்கீட்டுக்கான இடங்களைக் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் 15லும் முஸ்லிம்களுக்கு 52 இடங்களும் 348 அரசு ஒதுக்கீடு கொண்ட 5 தனியார் கல்லூரிகளிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு 12 இடங்க ளுக்கு 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 783 இடங்களில் 27 இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரி யிலும் 85 இடங்களின் இடஒதுக்கீட்டில் மூன்று இடங்கள் முஸ்லிம் சமுதாயத் தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறே பி.இ மற்றும் பி.டெக் அட்மிஷனுக்கு மிக அதிகமான இடங் கள் இடஒதுக்கீட்டின்படி முஸ்லிம் களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இடஒதுக்கீடு பொறியியல் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கில் முஸ்லிம் மாணவர் களுக்கு ஏணியாக அமைந்து விட்டது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக் கான இடஒதுக்கீட்டின் படி 4, 882 இடங்கள் ஒதுக்கீட்டில் கிடைக்கும். அதிலும் முஸ்லிம் மாணவர்களுக்கே சாதகமான நிலை நிலவுவதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி குறிப்பிடு கிறார்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யும்போது அதிக மதிப் பெண்கள் பெற்ற ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்களை விட ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறை முஸ்லிம் மாணவர் களுக்கு சாதகமாக இருக்கும்.
சான்றாக பொதுப் பிரிவில் 195.5 கட்.ஆஃப் மதிப்பெண்கள் எடுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவரின் ரேங்க் 3,004 பிற்படுத்த வகுப்புக்கான அவரது ரேங்க் 1,725 ஆனால் முஸ்லிம் இடஒதுக்கீட்டின் படி வெறும் 91 ரேங்கிலேயே முஸ்லிம் மாணவர் விரும்பும் சிறந்த கல்லூரி, விரும்பும் பாடம் கிடைக்கும் நிலை உருவாகும்.
முஸ்லிம் மாணவருக்கு இதனால் கட் ஆஃப் மதிப் பெண்ணில் 1 முதல் இரண்டு மதிப்பெண் கூடுதலாக பெற்றதற்கான சாதக மான அம்சம் இடஒதுக்கீட்டின மூலம் கிடைத்து விடுகிறது. மொத்தத்தில் வராது வந்த மாமணி போல் கிடைத்த இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம் களுக்கான கல்வியிலும் முழுமையாக கிடைத்து விட்டது

Friday, June 27, 2008



மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
-அபூசாலிஹ்
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத் திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேத னைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.
பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.
1. மங்கேஷ் தினகர் நிகாம்2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி3. சந்தோஷ் ஆங்ரே4. விக்ரம் பவேஎன்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.
முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.
பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:
1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)2. 20 டெட்டனேட்டர்கள்3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்4. டைமர்கள்5. வோல்டேஜ் மீட்டர்கள்6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்7. ரிமோட் கண்ட்ரோல்கள்8. ரிவால்வர்கள்9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா

தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!
கொந்தளிக்கும் இந்தியா!!
-சத்தியவேந்தன்
பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்

Tuesday, June 24, 2008


மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத் தின் துணை இயக் கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக் கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல் களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங் கிய பஜ்ரங்தளத் தினர் அந்த நாட கத்தை தடுத்து நிறுத்தினர். அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்ப தாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல
Posted by mannady at 2:29 PM 0 comments

abusalih news
மன்னிப்பு கேட்ட மகாராஷ்டிரா சி.ஐ.டி.போலிஸ் மகாராஷ்டிரா மாநில போலிஸ் ஹுவாஜா யூனுஸ் என்ற இளைஞரின் மீது வழக்கு விசாரணையை மேற்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மேலும் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் சக்தி மிகுந்த இடங்களில் செல்வாக்குமிகுந்தவர்கள். எனவே ஹுவாஜா யூனுஸ் வழக்கில் தங்களால் விசாரணை செய்ய முடியாது. சுயேச்சையான ஒரு விசாரணைக் குழுவினரே இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.யார் அந்த ஹுவாஜா யூனுஸ்? 2002 ஆம் ஆண்டு கட்கோபாரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வளைகுடாவில் வாழ்ந்து வந்த கணினி மென்பொருள் பொறியாளரான ஹுவாஜா யூனுஸை போலிஸ் கைது செய்தது. காவல் நிலைய லாக்கப் அறையில் காவல்துறையினரின் கடும் சித்திரவதைகளால் ஹுவாஜா யூனுஸ் ஜனவரி 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் காட்கோபார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அப்துல் மதீன் உட்பட இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் மீதும் வழக்கு தொடர மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. போலிஸ் மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநில அரசு நான்கு காவல்துறையினர் மீது மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. காவல்துறை சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கை ஒப்படைக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி.காவல்துறையின் வெளிப்படையான தன்மையையும் அதே பரிதாபகரமான தோல்வியையும் மகாராஷ்டிரா அரசின் உள்நோக்கத்தையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எட்டு பேரை குற்றமற்றவர்கள் என மும்பை பொடா நீதிமன்றம் விடுதலை செய்தது. போலிஸ் காவலில் இறந்த ஹுவாஜா யூனுஸின் மர்ம மரணம் குறித்த சந்தேகம் வலுப்பெற்றது. ஹுவாஜா யூனுஸை சித்திரவதை செய்து படுகொலை செய்ததாக பதினான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
Posted by mannady at 2:26 PM 0 comments

abusalih news
இந்தோனேஷியாவில் அனாதைகளாக்கும் பெற்றோர்கள்! இந்தோனேஷியாவில் தொடரும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் வறுமையில் சிக்கிய இந்தோனேஷிய பெற்றோர் தங்களின் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகவலை ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ளது.சுனாமி என்ற ஆழிப்பேரலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். அப்போது ஏராளமான அனாதை இல்லங்கள் நிறுவப் பட்டன. சமூகநலத் துறையின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் யூனிசெஃபின் அனாதை நிலையங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.5 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அனாதை நிலையங்களில் வெறும் 6 சதவீத குழந்தைகளே உண்மையில் அநாதைகள் என்றும் மற்றவர்கள் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட குழந்தைகள் என்றும் தெரிய வந்தது.உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by mannady at 2:25 PM 0 comments

abusalih newsagainst anti dalit atricities
உயர்சாதியினரால் கொல்லப்பட்ட தலித் மூதாட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் ஆதிக்கசாதியைச் சேர்ந்த மூவரால் உயிரோடு எரிக்கப் பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.ஆதிக்கசாதியினர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹீராலால், தினேஷ் மற்றும் ராஜேந்திரா என்ற மூவரும் பீரம்பாய் என்ற 55 வயது பெண்மணியை நெருப்பி லிட்டு கொளுத்தினர்.80 சதவீதம் அந்தப் பெண்மணியின் உடல் எரிந்து விட்டதாக கன்ததா பகுதி யின் காவல்துறை அதிகாரி அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.பீரம்பாய் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி கன்ததா பகுதி முழுவதும் பரவி யது. பெரும் போராட்டத்திற்கு பிறகே படுகொலையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தீயிலிடப்பட்ட பெண்மணியின் கணவரான ஹுகும் சந்த் தெரிவித்தார்
Posted by mannady at 2:23 PM 0 comments

abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments

abusalih news about food crisis
விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்! உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்
Posted by mannady at 2:21 PM 0 comments

abusalih article about social justice
மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா?மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக விபரங்கள் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.34 காபினெட் அமைச்சர்கள், 22 ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான துறைகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப்பிரிவில் 203 அதிகாரிகளையும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெறும் 23 பேர் மட்டுமே அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.தேவ் ஆசிஷ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்படி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.மண்டல் பரிந்துரைகளுக்குப்பின் தேசிய அளவில் ஏற்பட்ட சமூக நீதி எழுச்சிக்குப்பின் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அதிர வைக்கும் தகவலாகும்

news from abusalih

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா
அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.
ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.
அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.
ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.
அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்

Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் அரசியல் அபாயம்! ஓர் எக்ஸ்ரே ரிப்போர்ட்-சத்தியவேந்தன்
கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க முடியா விட்டாலும் கூட பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் சென்ற பாஜக சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. (இதற்கி டையில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளிவந்து ஜனநாயகக் கேலிக்கூத்தும் நடந்தது). வழக்கமான தேர்தல் முடிவுகளைப் போல கர்நாடக தேர்தலை எடுத்துக் கொள்ள முடியாது என அரசியல் பார்வை யாளர்கள் கூறிக்கொள்கிறார்கள்.
மதவாத சக்தியை முறியடிப்போம் என காங்கிரஸும் மதவாத, சக்திகளை நாங்கள் தன் முறியடிப்போம் என மதசார்பற்ற(!) ஜனதாதளமும் பெருங்குர லெடுத்துக் கூவின. ஏற்கனவே சந்தர்ப்ப வாத தேவேகவுடாக் கட்சியினால் மனம் வெறுத்துப்போன கர்நாடக மக்களுக்கு, தேவே கவுடாக் கட்சியினரின் கூச்சல் எரிச்சலைத் தந்தது. எவ்வாறெனில் தேவேகவுடாக் குடும்பத்தின் மீதான வெறுப்பு பாஜகவின் எடியூரப்பா மீது அனுதாபம் காட்டும் அளவுக்குச் சென்றது ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் மதச்சார் பற்ற(?) ஜனதா தளத்திற்கும் தான் போட்டி என்பதைப் போல மாநில மெங்கும் பிரச்சாரம் தூள்பறத்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளத்தின் மீதான கோபம் பாஜகவுக்கு வாகாய் அமைந்தது. வாகையாய் வாய்த்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளம் கடந்த தேர்தலில் பெற்ற பல தொகுதிகளை பாஜகவுக்கு கர்நாடக மக்கள் தாரை வார்த்துக் கொடுத்தனர்.
விளைவு முன்பைவிட பாரதிய ஜனதா 31 இடங்களை அதிகம் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சுயேட்சை கும்பலின் எண்ணிக்கையும் 16 குறைந்தது. கடந்த தேர்தலில் 58 இடங்களைப் பெற்ற தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனதாதளம் இந்த முறை 30 இடங்களைப் பறிகொடுத்து வெறும் 28 இடங்களை மட்டுமே பிடித்தது. முந்தையத் தேர்தலைப் போலவே பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் மூன்றாவதாக மதசார்பற்ற(?) ஜனதாதளமும் இடம் பிடித்துள்ளது. பெரிதும் பரிதாபத்துக்குரிய கட்சியாக தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனததளம் மாறியிருக்கிறது. ஆனாலும் பாஜகவுக்கு வெற்றியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டி சாதனை (!)யில் காங்கிரஸும் இடம்பெற்றுக் கொள்கிறது.
காங்கிரஸின் அசட்டுத்துணிச்சலே அக்கட்சிக்கு வினையான முடிந்திருக் கிறது. பாஜக எடியூரப்பாவை முன்நிறுத்தி யது. முதல்வர் வேட்பாளர் இவர்தான் என்று பகிரங்கமாக அறிவித்தது. காங்கிரஸில் மூலைக்கு மூன்று நான்கு பேர் நாங்கள் தான் முதல்வர், நான் தான் அடுத்த முதல்வர் என எண்ணிக் கொண்டே வலம் வந்தார்கள்.
காங்கிரஸின் அரசியல் சாணக்கிய ரான முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா நான் முதல்வர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என அறிவித்தார். காங்கிரஸ் இவரை மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்து தேர்தலுக்காக அழைத்து வந்தும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு கூறியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகளுக்கிடையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா வலம் வந்தார்.
முதன்முறையாக பா.ஜ.க. தென்னிந்தியாவில் காலூன்றிவிட்டது என பல பத்திரிக்கைகள் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது என தம்பட்டம் அடிக்கும் ஊடகங்களில் போக்கு வினோதமாக உள்ளது. பா.ஜ.க.வின் வெற்றிக்கு தொகுதி மறுசீரமைப்பும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்புற சாதி சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகள் பல தொகுதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு உள்ளன. இது பாஜகவுக்கு சாதகமான அம்சம் என்றும், நாட்டுக்கு பாதகமான அம்சம் என்றும் அரசியல் ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.
இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் ஊசி நுழையாத இடத்தில் கூட பாஜக நுழையும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது. மதசார்பற்ற சக்திகள் குறிப்பாக காங்கிரஸ் விழித்துக் கொள்ளாவிட்டால் அபாயம் அருகில் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நல்ல வேளையாக தேசிய அளவில் பாஜக நொண்டிக் குதிரையாகவே இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பாஜக என்ற நொண்டிக் குதிரையால் துள்ளிக்குதிக்க முடியாது.ஆனால் காங்கிரஸ் போன்ற மதசார் பற்ற சக்திகள் பாஜகவை சண்டிக் குதிரையாக மாற்றமலிருந்தால் போதும் ஏனெனில் கடப்பாறை கும்பல்கள் தங்களின் எதிர்கால வெற்றிக்கு காங்கிர ஸையே மலைபோல நம்பிக் கொண்டுள்ளன.
அது காங்கிரஸுக்கு தெரிய வேண்டுமே
கர்நாடகத்தில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கüல் ஏழு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். ஒருவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரோஸ் நூருத்தீன் சேட் பெல்காம் தொகுதி யிலிருந்தும், கமருல் இஸ்லாம் குல்பெர்கா தொகுதியிலிருந்தும், சைய்யது யாசின் ரய்சூர் தொகுதியிலிருந்தும், ரோஷன் பெய்க் பெங்களூர் சிவாஜி நகர் தொகுதியிலிருந்தும், என்.ஏ.ஹாரிஸ் பெங்களூர் சாந்தி நகர் தொகுதியிலிருந்தும், யு.ஏ. காதர் மங்களூர் தொகுதியிலிருந்தும், தன்வீர் சேட் நரசிம்மராஜா தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜமீர் அஹமது கான் சாம்ராஜ் பேட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற 8 முஸ்லிம் வேட்பா ளர்கüல் தன்வீர் சேட் மற்றும் ரோசன் பேக் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட 14 முஸ்லிம் வேட்பா ளர்கüல் 7 பேர் வெற்றிப் பெற்றுள் ளார்கள். மதசார்பற்ற ஜனதாத் தளத்தில் 12 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றிப் பெற்றார். ஐக்கிய ஜனதாத் தளத்தின் சார்பாக இருவர் போட்டியிட்டு இருவரும் தோல்வி அடைந்தார்கள்.
1985 முதல் கர்நாடகச் சட்ட மன்றத்தில் சராசரியாக 5 முதல் 7 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள். 1985 தேர்தலில் 5 முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள், இவர்கüல் மூவர் காங்கிரசை சேர்ந்தவர்கள் இருவர் ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1989 தேர்தலில் 7 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர். 1994 தேர்தலிலும் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 3 பேர் ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர் பி.எஸ்,பி, காங்கிரஸ் மற்றும் இந்திய தேசீய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், 1999 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை அடித்தது. 13 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கüல் 12 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். 2004ல் நடைபெற்ற தேர்தலில் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 4 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவர் மதசார்பற்ற ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடகத்தில் மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தினர் முஸ்லிம்களா வார்கள். 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கை ஒரு போதும் அடையவில்லை.
2008 சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகüல் 28 முஸ்லிம் வேட்பா ளர்கள் போட்டியிட்டார்கள். காங்கிரஸ் சார்பாக 14 வேட்பாளர்களும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக 12 வேட்பாளர் களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 2 வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.
கர்நாடக முஸ்லிம் முத்தஹிதா தெஹ்ரிக் (கே.எம்.எம்.டி.) இந்தத் தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பிரச்சாரம் செய்தது. வேட்பாளர் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் காங்கிரஸ் இன்னும் அதிகமான தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கும் என்று கே.எம்.எம்.டி. தலைவர் முக்தார் அஹ்மது நம்மிடம் தெரிவித்தார்
கர்நாடகத்தில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கüல் ஏழு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். ஒருவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரோஸ் நூருத்தீன் சேட் பெல்காம் தொகுதி யிலிருந்தும், கமருல் இஸ்லாம் குல்பெர்கா தொகுதியிலிருந்தும், சைய்யது யாசின் ரய்சூர் தொகுதியிலிருந்தும், ரோஷன் பெய்க் பெங்களூர் சிவாஜி நகர் தொகுதியிலிருந்தும், என்.ஏ.ஹாரிஸ் பெங்களூர் சாந்தி நகர் தொகுதியிலிருந்தும், யு.ஏ. காதர் மங்களூர் தொகுதியிலிருந்தும், தன்வீர் சேட் நரசிம்மராஜா தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜமீர் அஹமது கான் சாம்ராஜ் பேட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற 8 முஸ்லிம் வேட்பா ளர்கüல் தன்வீர் சேட் மற்றும் ரோசன் பேக் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட 14 முஸ்லிம் வேட்பா ளர்கüல் 7 பேர் வெற்றிப் பெற்றுள் ளார்கள். மதசார்பற்ற ஜனதாத் தளத்தில் 12 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றிப் பெற்றார். ஐக்கிய ஜனதாத் தளத்தின் சார்பாக இருவர் போட்டியிட்டு இருவரும் தோல்வி அடைந்தார்கள்.
1985 முதல் கர்நாடகச் சட்ட மன்றத்தில் சராசரியாக 5 முதல் 7 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள். 1985 தேர்தலில் 5 முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள், இவர்கüல் மூவர் காங்கிரசை சேர்ந்தவர்கள் இருவர் ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1989 தேர்தலில் 7 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர். 1994 தேர்தலிலும் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 3 பேர் ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர் பி.எஸ்,பி, காங்கிரஸ் மற்றும் இந்திய தேசீய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், 1999 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை அடித்தது. 13 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கüல் 12 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள். 2004ல் நடைபெற்ற தேர்தலில் 6 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றார்கள். இவர்கüல் 4 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவர் மதசார்பற்ற ஜனதாத் தளத்தைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடகத்தில் மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தினர் முஸ்லிம்களா வார்கள். 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கை ஒரு போதும் அடையவில்லை.
2008 சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகüல் 28 முஸ்லிம் வேட்பா ளர்கள் போட்டியிட்டார்கள். காங்கிரஸ் சார்பாக 14 வேட்பாளர்களும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக 12 வேட்பாளர் களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 2 வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள்.
கர்நாடக முஸ்லிம் முத்தஹிதா தெஹ்ரிக் (கே.எம்.எம்.டி.) இந்தத் தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பிரச்சாரம் செய்தது. வேட்பாளர் தேர்வில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் காங்கிரஸ் இன்னும் அதிகமான தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கும் என்று கே.எம்.எம்.டி. தலைவர் முக்தார் அஹ்மது நம்மிடம் தெரிவித்தார்
ஜெய்ப்பூர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்
-ஹபிபா பாலன்
ராஜஸ்தான் தலைநகரும் இந்தியா வின் முன்னணி சுற்றுலா நகரமுமான ஜெய்ப் பூரில் சென்றவாரம் நிகழ்ந்த குண்டு வெடிப் பில் 80 பேர் பலியாகியுள்ளனர். 2005க் குப் பிறகு பயங்கர வாத தாக்குதல் அச் சுறுத்தல் உள்ள பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளி யில் நடைபெற்ற 10வது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். வழக்கம் போல் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் வலம் வரத்துவங்கியுள்ளன.
என்னதான் உத்தரவாதங்களை வழங்கினாலும் இந்தியா படிப்படியாக பாதுகாப்பற்ற நாடாக மாறிவருவதாக ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இயக்கங்களுக்குத் தொடர்பு என குற்றம்சாட்டப்படுவதும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி உள்ளூர் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் அடுத்தடுத்து நிகழும் காட்சிகளாக இருக்கும் என உலகின் எந்த மூலையிலிருந்தும் நாம் கூறலாம். ஜெய்ப்பூரிலும் இதேநிலை தொடருகிறது. வழிபாட்டுத்தலம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் கொலை பாதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த எந்த குண்டு வெடிப்பிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவர வில்லை என்பது அதிரவைக்கும் உண்மையாகும்.
அதைவிட தவறாக இந்த வழக்கு களில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி களின் கதி என்ன? என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை என்பது சோகமான ஒன்றாகும். குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சமூக இளைஞர்களை குறிவைத்து வளைக்கப் படுவதும், பெரும்பாலான ஊடகங்கள் ஊகங்களை செய்தியாக வெளியிடுவதும், பிரதான எதிர்க்கட்சி பொடாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பட்டிமன்றம் வைப்பதும் தொடருகிறது. பாவம் அப்பாவிகளின் அவல நிலை. தீரும் வழியைத்தான் காணோம்.
2006 செப்டம்பர் மாதம் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர் களும் நறுமணம் பூசி மகிழ்ச்சியோடு சென்றனர் அதில் 56 பேர் மீண்டும் திரும்பவேயில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு துயர நிகழ்வாக அமைந்தது. 2007ல் மே மாதம் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், ராஜஸ்தானில் அஜ்மீர் தர்ஹாவுக்கு அருகில் நோன்பு துறந்து கொண்டிருந்தவர்களின் மத்தியில் வெடித்த குண்டுகளும் பல அப்பாவிகளின் உயிரைக் குடித்தது.
கடந்த மூன்றாண்டுகளில் ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள், இரண்டு கோயில்கள் பயங்கரவாதிகளின் பாதகச் செயலுக்கு இலக்காயின. அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆர்.டி.எக்ஸ் போன்ற பொருட்கள் பயன்பட்டதாக விசாரணைக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். அம்மோ னியம் நைட்ரேட் உள்ளூர் கயவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கள் ராணுவத்தோடு தொடர் புடையவர்கள் அல்லது சர்வதேச தொடர்புடை யவர் களுக்கு மட்டும் பெறமுடியும் என சொல்லப்படுகிறது.
வெடிபொருட்களை சாதாரண பையில் வைத்து முஸ்லிம்கள் அதிகம் கூடும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமையும் ஹிந்துக்கள் அதிகமாக கூடும் செவ்வாய்கிழமைகளில் கோயில் களிலும் வைத்துவிடுகிறார்கள். அப்போது தான் இறப்பும் இழப்பும் அதிகமாக இருக்கும் என்பது சதிகாரர்களின் திட்டம். ஆனால் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் குறித்து இதுவரை துல்லியமான புலனாய் வுகள் வெளிப்படவில்லை. முஸ்லிம் களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வது திட்டமிட்ட சதி என மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு 2006 ஏப்ரலில் மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெடில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. அதில் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சில மாதங்கள் கழித்து தான் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பலியானவர்களின் உடல்களுக்கு நடுவே ஒட்டுத்தாடியுடன் கூடிய அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைப்பார்த்ததாக உள்ளூர்வாசி கூறினார். முஸ்லிம் போல் வேடமிட்டு சதிகாரன் ஒருவன் இந்த சதிச் செயலை செய்ததாக நடுநிலையாளர் கள் கூறியதை விசாரணைப்படையினர் ஏற்றுக் கொள்ளவேயில்லை.
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் படுகாயமடைந்தனர். உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. உல்ஃபா அதனை வன்மையாக மறுத்தது. அத்தோடு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் மீது உல்ஃபா குற்றம்சாட்டியுள்ளது அவ்வாறே மத்தியப்பிரதேசத்தில் வெடிகுண்டுகள் தயாரித்த சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனைப்படுகிறார் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பில் சதிச்செயலில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை தமிழகக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய அளவில் பிரத்தியேக உளவுப்படை அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்
வேலியில் போகும் ஓணானை..
.ரக்சன்
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பலத்த சர்ச்சைகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில் சர்ச்சைகளில் அடிபடாத முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்திய ஏவுகணை தொழில் நுட்பத் தின் முன்னோடி என்றும் அணு ஆயுத தொழில் நுட்பத்தின் பிதாமகன் என்றும் போற்றப்படும் கலாம் இத்தகைய கருத்தினை உதிர்த்திருக்க வேண்டாம் என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.
நாட்டில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையங்கள் யுரேனியம் எரிபொருள் களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. இந்த எரிபொருள் இந்தியாவில் அதிக அளவு கிடைப்பது இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக, தோரியம் எரிபொருள் நிறையக் கிடைக்கிறது.
இதனை அணு உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ள சுமார் பத்து வருடங்கள் ஆகலாம். எனவே யுரேனியம் எரிபொருளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார்.இதையே ஒரே பிடியாக பிடித்துக் கொண்ட அமெரிக்காவின் நேசாபிமானி பிரதமர் மன்மோகன் சிங் அறிவார்ந்த விஞ்ஞானிகள் சொல்வதை நாட்டு மக்கள் ஏற்பார்கள் என பாய்ந்து விழுந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
எதற்காக ஒப்பந்தம் என்பதைவிட யாருக்காக ஒப்பந்தம்,,,, என்பதே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றவுடன் மின்சாரத் தேவையை நிறைவேற்ற அணுமின் நிலையத்தை தாராப்பூரில் அமைத்தபோது எரிபொருள் தருவதாகக் கூறிய அமெரிக்கா அப்பட்டமாக ஏமாற்றியது. அமெரிக்காவின் அத்தகைய மனப் பான்மை இன்றும் மாறவில்லை என்பதே விவரமறிந்தவர்களின் கருத்தாக இருக் கிறது. இந்நிலையில் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சலாம் போடுவது எதற்காக?
இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் 'ஹைடு' ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக பேசாமல் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பேசி பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.
சொன்னது அப்துல் கலாமாகவே இருந்தாலும் கூட அது புறக்கணிக்கப்படக் கூடிய கருத்தே.
ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாதின் இந்திய வருகை குறித்து அமெரிக்கா என்ன சொன்னது? எவ்வாறு ஆணவமாக உத்தரவிட்டது. ஈரான் அதிபரோடு அணுசக்தி விஷயம் பற்றி பேச வேண்டாம் என உத்தரவிட வில்லையா? உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர எத்தனிக்கும் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கண்ணை மூடி ஆதரிக்கும் கலாம்களும் மன்மோகன் சிங்குகளும் அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தை மூடி மறைத்து என்ன தான் ஆதரவு கானங்கள் பாடினாலும் இந்திய மக்களிடம் அது எடுபடாது என்பது உறுதி
நாடாளுமன்றத்தில்; தென்காசி குண்டு வெடிப்பு சதி விவகாரம்அவமானத்தில் சுருண்டு போன பாஜகவினர்-தமிழ் மாறன்

அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் சமாதானச் சோலையாக விளங்கிய தென்காசியில் ஹிந்து முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்ணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி தென்காசியை அமளிக்காடாக்கினர்.
உச்சகட்டமாக குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி பழியினை அப்பாவி முஸலி்ம் இளைஞர்களின் மீது போட்டு சந்தடியில்லாமல் முஸலி்ம்களை சாய்ந்து விட முயன்றனர்.
தமிழக காவல்துறையின் நடுநிலையான அணுகுமுறையினால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதன் பிண்ணயில் இருந்த பயங்கரசதி அம்பலமானது.
இந்து முண்ணனி பிரமுகர் குமார பாண்டியன் கொலை செய்யப்பட்ட பின்பும் இந்துக்களிடையே எந்த கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. எனவே இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவே தென்காசியில் இரண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம் என கொலையுண்ட குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ள குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்தக் குற்றவாளிகள் அனைவரும் சங்பரிவாரின் முக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சங்பரிவாரின் நயவஞ்சக நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் மூழ்கியது.
கொதிப்படைந்த சமூகநல ஆர்வலர்கள் சதிகளின் பிண்ணனி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.
தென்காசியில் சங்பரிவாரின் சதிவலைகள் சமூக நல்ணக்கத்திற்கு வேட்டுவைப்பதை அறிந்து வேதனையடைந்த தமுமுக, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் வெடித்த பைப் வெடிகுண்டைப் போலவே தென்காசியில் வெடித்த இரண்டு குண்டு வெடிப்புகளும் உள்ளதால் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவார். எனவே நாடெங்கிலும் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த துல்யமான விசாரணைகள் தேவை என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் கருத்து தெரிவித்திருந்தார் இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் தென்காசியில் வெடித்த சங்பரிவார்குண்டு' குறித்த விவாகாரம் வெடித்தது.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தாங்களே தங்கள் அலுவலகத்தின் முன்பு குண்டு வைத்து விட்டு முஸலி்ம்கள் மீது பழியை போட்ட இழி செயலைப் போன்று நாடு முழுவதும் நடைபெற்ற சம்பவங்களை ஒருங்கிணைத்து மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்புப் பிரிவு மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் முன்வருமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிருந்தா காரத் வினா எழுப்பினார். அவர் தனது விரிவான உரையில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் மற்றும் பேருந்துநிலையத்திலும் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்திலும் மிகவும் கேடு கெட்ட முறையில் நடைபெற்ற சதி குறித்து உண்மைகளை வெளிக் கொணர்ந்த தமிழ்நாடு காவல்துறையினர் பாராட்டப்படவேண்டியவர்கள். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதை நாடு அறியும். ஆனால் காவல்துறையின் புத்திசாத்தனமாக விசாரணை மூலமாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய இந்து முண்ணனியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அப்பகுதியில் மதப்பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதிவேலையின் நடவடிக்கையே இந்த சம்பவம் என்பது காவல்துறையினரின் புலனாய்வில் புலப்பட்டிருக்கிறது.
மதவெறி தீ மூட்டி விடப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பாஜகவில் இருக்கக்கூடிய நபர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைப்படாத அந்த நபர்கள் இச்சம்பவத்தில் முழுமையாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு பிருந்தா காரத் பேசியதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் தென்காசி சங்பரிவார் குண்டு வெடிப்பு' குறித்த முழு விவரங்களையும் அவையில் தெரிவித்தார். சம்பவத்தின் பிண்ணனி எந்தவிதமான நோக்கம் இருந்திருக்கக்கூடும் என அவையே தீர்மானிக்கப்பட்டும் என்று கூறிய சிவராஜ் பாட்டில் சங்பரிவார் சதிகளை விலாவாரியாக விவரித்தார். பின்னர் இது இந்து முஸ்லிம்களும் இந்த சதிக்கு இலக்காவில்லை என்பதை தெரிவித்த சிவராஜ் பாட்டில் தமிழக சம்பவம் தற்போது புலனாய்வில் இருந்து வருகிறது என்று கூறிவுடன் மீண்டும் துணைக் கேள்வி எழுப்பிய பிருந்தா காரத் எம்.பி., இதைப் போன்ற ஒரு குண்டு வெடிப்பு தான் மகராஷ்ட்ர மாநிலம் நான்டெடில் நடந்தது. இதில் மத்திய என்ன நடவடிக்கை எடுத்தது என அறிய விரும்வதாக தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த சிவராஜ் பாட்டில் 2006 ஏப்ரல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பஜ்ரங் தள்ளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை மகராஷ்ட்ரா மாநில காவல்துறையினர் கண்டறிந்தனர். காவல்துறையினர் விசாரணையில் ஆட்சேபணைகள் எழுந்ததால் பின்னர் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும், அதற்கும் ஆட்சேபனை எழுந்ததால் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணையில் தற்போது நான்டெட் குண்டு வழக்கு நடைபெற்று வருகிறது. உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் இருந்தால் மத்திய புலனாய்வுத்துறையின் கீழ் விசாரணை செய்யப்படும் என சிவராஜ் பாட்டில் உறுதி அளித்தார்.
இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்மையாக இருக்கிறது என சிவராஜ் பாட்டில் சங்பரிவாரின் சதிகுறித்து கூறும் போது பாஜகவினரின் முகங்களில் ஈயாடவில்லை

Thursday, April 3, 2008

பள்ளிவாசலில் நாங்கள்தான் குண்டு வைத்தோம்! மீண்டும் வெடிக்கும்!!சங்பரிவார் மிரட்டல்!இந்திய எல்லையில் இமயமலைபரப்பில் இருக்கும் நேபாளம் மன்னர்ஆட்சியின் அதிகார இறக்கைகள்வெட்டப்பட்டு ஜனநாயகப் பாதைக்குதிரும்பி வருகிறது. இந்நிலையில்,நேபாளத்தை மதவாத நாடாக மாற்றவேண்டும் என ஒரு கும்பல் தீவிரமாகதிட்டமிட்டுவருகிறது. நேபாள மக்களின்ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. நேபாளபாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்பட்டு வரும் மதவாத அமைப்பு இது.இது நேபாளத்தை சங்பரிவார் நாடாகமாற்ற தொடர்ந்து கலவரம் விளைவித்துவருகிறது. இந்நிலையில், நேபாளத்தலைநகர் காட்மாண்டுக்கு தென்கிழக்கில்200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளபிராட்நகரில் உள்ள சின்ன பள்ளிவாசலில் குண்டுவெடித்தது. இதில் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்திருந்தஇருவர் கொல்லப்பட்டனர். 60க்கும்மேற்பட்ட முஸ்லிம்கள் மாலை நேரத்தொழுகை யில் ஈடுபட்டிருக்கும் போதுமூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இதுமார்ச் 29ஆம் தேதி நடந்தது.குண்டுகள் வெடித்தவுடனே ''தாங்கள்தான் இந்த தாக்குதலை நடத்தினோம்''நேபாளத்தை ஹிந்துத்துவா நாடாகமாற்றும் வரை இது போன்ற தாக்குதல்கள்தொடரும் என்றும் தேசிய பாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்படும்கோட்சே கும்பல் தெரிவித்துள்ளது.நேபாளம் 2006 ஆம் ஆண்டுவரைஉலகின் ஒரே ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசியல் சாசனசட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுநேபாளம் மதசார்பற்ற நாடாகஅறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.உலக உண்மைகள் என்ற நூலில்குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்இரண்டு கோடியே 80 லட்சம்மக்கள் வாழும் நேபாளத்தில் 80சதவீதத்தினர் ஹிந்துக்களாவர்.இந்நிலையில், பள்ளிவாசலின் மீதுநிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்வரும்ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைசீர்குலைக்கும் சதி என்றும் அதற்குதாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்றும் நேபாளப் பிரதமர்கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.நேபாளத்தில் முகாமிட்டிருக்கும்ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்குழு பள்ளிவாசல் மீதான குண்டு வெடிப்புதாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐ.நா.பார்வையாளர் குழுவின்தலைவர் தனது கடும் கண்டனத்தைதெரிவித்துள்ளார். இது மதவாத விஷமிகளின் திட்டமிட்ட தாக்குதல் தான்சந்தேகமே இல்லை என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.பள்ளிவாசலில் வெடிகுண்டுதாக்குதல்நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில் முஸ்ம்கள்வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். எங்கள் போராட்டம்கலவரமாக வெடிக்காமல் தவிர்த்துக்கொள்ள எங்களால் முடியும் எனதெரிவித்த முஸ்லிம் இத்திஹாதுல்அமைப்பின் தலைவரான ஜாஃபர்அஹ்மத் ஜமாலி முஸ்லிம்களுக்குநாடாளுமன்றத்திலும், ராணுவத்திலும்அதிக அளவு இடம் ஒதுக்க வேண்டும்என்றும் கூறியிருக்கிறார்.காந்தியைக் கொன்ற கோட்சேமதவெறி கும்பலின் கொடிய கரங்கள்இந்தியாவை தாண்டியும் விரியத்தொடங்கியிருப்பது உலக அமைதிக்குஏற்பட்டிருக்கும் ஆபத்தாகவே முடியும்என அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

Thursday, March 27, 2008

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா


ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங் களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.
இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமை யாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங் களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்ப தாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் நர்ம்ங் எர்ண்ழ்ம்ஹய்ள் நஹன்ஹக்ள் ஹய்க் ல்ஹழ்ஜ்ஹஜ்ஹள் (1578 லி 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக் களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளை யும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர் கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன் மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்கா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (ஒள்ப்ஹம் ஹய்க் ஒய்க்ண்ஹய் ஈன்ப்ற்ன்ழ்ங்) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்