Tuesday, May 15, 2012

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

E-mail Print PDF
நடைபெற்று முடிந்துள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அஸ்ஸாம் மாநிலம் தவிர மீதம் உள்ள நான்கு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மூன்று மாநிலங்களிலும் மக்கள் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கு விடை கொடுத்து விட்டார்கள். மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தோமானால் முஸ்லிம்களிடையே தங்கள் சமூக பிரதிநிதித்துவம்  குறித்து   தெளிவான, எழுச்சியான விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

குறிப்பாக 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் வெற்றி பெற்றதை விட அதிகமானவர்கள் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகை  சூடியுள்ளனர்.

இது எண்ணிக்கை வடிவில் மட்டுமல்ல, எண்ணத்தின் அடிப் படையில் கூட சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம். மகிழ்ச்சிக்குரிய மாற்றம் என்றால் அது மிகையல்ல.

2006 ஆம் ஆண்டில் 105
2011 ஆம் ஆண்டில் 130

கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு வங்காளம், கேரளா, அஸ்ஸாம் தமிழ்நாடு, புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 105 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால்  2011 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து மாநிலங்களில் 130 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கேரளா 36

இனி மாநில வாரியாக பார்ப் போம். நம் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 36 முஸ்லிம்கள் சட்டமன்றம் செல்கின்றனர்.  140  சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கேரளா வில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முன்னணி 72 இடங்களை கூட்டணியாகப் பெற்றுள்ளது.  இடதுசாரிகள் கூட்டணி 68 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் இங்கு கூட்டணி பலத்தில்தான் முதல் அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவி களைப் பெற்றுள்ளது.காங்கிரஸ் 82  இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான கேரளா முஸ்லிம் லீக் 24  இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வென்றுள்ளது.

அஸ்ஸாம் 33

அஸ்ஸாம் மாநிலத்தில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் 33  முஸ்லிம்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்கின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 25  முஸ்லிம்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் 9 இடங்களில் வென்ற அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (கிமிஹிஞிதி) இந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது   பெரிய கட்சியாகவும், முக்கிய எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

16 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களும் இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும்  மற்றொன்றில் தலித் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கிமிஹிஞிதி தனித்த அடையாளத்துடன் பெரும் சக்தியாக வடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் 59

மேற்கு வங்காள சட்டமன்றத்தில் 59 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் ஆவர். மேற்கு வங்க வரலாற்றில்   ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைவது இதுவே முதல் முறை. கடந்த 2006 சட்ட மன்றத் தேர்தலில் 46  சட்டமன்ற  உறுப்பினர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

294 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்காள சட்ட மன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதி த்துவம் 20 சதவீதத்தை தொட்டுள் ளது. 59  சட்டமன்ற உறுப்பினர் களில் ஏழு பேர் பெண்கள்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 226 தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. இடது சாரிகள் 61 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்துள்ளனர். (மார்க்சிஸ்ட் 40, சிபிஐ 2, அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் 11, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 7, சமாஜ்வாடி கட்சி 1).

திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக  தேர்ந் தெடுக் கப்பட்ட 226 சட்டமன்ற உறுப்பினர்களில்  முஸ்லிம் உறுப்பி னர்கள் 40 பேர் என்பது குறிப்பி டத்தக்கது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கள் 25 பேர், காங்கிரஸ் கட்சியில்  15  பேர்.

பொதுவாக காங்கிரஸ்& திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி யில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலானோர் புதுமுகங் களாவர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஹைதர் அஸீஸ் சபாய், ஹவ்ரா மாவட்டத்தில் உலுபெரியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற கொல்கத்தா  உயர்நீதிமன்ற நீதிபதி நூரே ஆலம் சவுத்ரி பிர்பும் மாவட்டத்தில் உள்ள முராரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷ்வானுர் ரஹ்மான் என்ற கணினி மென்பொருள் நிபுணரின் மர்ம மரணம் குறித்து மாநில ஆளும் கட்சிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் பெரும் பிரச்சாரத்தினை மேற்கொண்டதோடு, ரி ஸ்வானின் மூத்த சகோதரருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கியது. ருக்பானு ரஹ்மான் நாடியா மாவட்டத்தில் சப்ரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நந்திகிராமில் வெற்றி

சர்ச்சைக்குரிய நந்திகிராமில் நில ஆக்கிரமிப்பு கொள்கையை எதிர்த்து ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின்   தாயார் பிரோஜா பீபி மீண்டும் வெற்றி பெற்றார். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரோஜா பீபி இந்த தேர்தலிலும் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். நந்திகிராமில் திரிணா மூல் காங்கிரஸ் பெற்ற வெற்றி  நெகிழ வைப்பதாக இருந்தது.

2006ல் இரண்டு என்ற அளவில் இருந்த முஸ்லிம் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2011 சட்டமன்ற தேர்தலில் 7 ஆக உயர்ந்துள்ளது. நந்திகிராம் பிரோஜா பீபியை தொடர்ந்து மேதிசபுர்ஜ்ஜில் இருந்து மும்தாஜ் பேகமும், மத்திய சொனார்பூர் தொகுதியில் இருந்து பிர்தௌசி பேகமும், தெற்கு 24  பர்கானா தொகுதியில் மஹ்மூதா பேகமும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நகராட்சி கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட 59  முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களில் 15 பேர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

புதுவையில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற  உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டார். திமுகவைச்  சேர்ந்த நாஜிம் தேர்ந்தெடுக் கப்பட்டார். சிறிய யூனியன் பிரதேசத்தில் முன்பு இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் இருந் தனர்.

தமிழகத்தில்  ம.ம.க.

தமிழகத்தில் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் 7 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந் தெடுக் கப்பட்டனர்.  தற்போது ஒன்று குறைந்து 6  பேர் சட்டமன்றம் செல்கின்றனர்.  அதிமுக சார்பில் திருச்சி (மேற்கு) தொகுதியில் மரியம் பிச்சை, ஆவடியில் அப்துல் ரஹீம், ராணிப்பேட்டையில் முஹம்மது ஜான் ஆகியோரும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ஆம்பூரில் அஸ்லம் பாஷா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் மனிதநேய மக்கள் கட்சி முதல் முறையாக இந்த தேர்தலின் மூலம் தனது கணக்கை துவக்கியுள்ளது.    அதுவும் குறிப்பாக தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மனதினில்  இந்நிகழ்வு   உற்சாக ஊற்றாக அமைந்ததுள்ள

No comments: