மத்திய மதரஸா வாரியம் வேண்டும் விழிப்புணர்வு
இந்தியாவெங்கும் உதிரிகளாக இருக்கும் மதரஸாக்களை ஒரு வாரியத்தின் கீழ் ஒருங்கிணைக்க மத்தியரசு திட்ட மிட்டுள்ளது இதற்கு மத்திய மதரஸா வாரியம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் மத்தியல் இதற்கு எதிர்ப்பும், அதிருப்தியும் காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மார்க்க கல்வி கற்பிக்கும் மதரஸாக்களில் துறை சார்ந்த கல்விகளும் கற்பிக்கப்பட்டன. அறிவியல், கணிதம், மொழியியல், மருத்துவம் என அத்துணை கல்வியும் மதரஸாக்களில் செழித்து காணப்பட்டது. பின்னர் மதரஸாக் கள் என்பது குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள் மட்டும் கற்பிக்கம் பாட சாலைகளாக மாறிப்போனது. இதன் காரணமாக மதரஸாவில் கற்று வெளியேறும் மார்க்க அறிஞர்களுக்கு பிற துறைகள் சார்ந்த ஞானம் இருப்பதில்லை. மாற்று கல்விக்காக அரசு கல்வி கூட்டங்களில் சேர்ந்தவர்களுக்கு மார்க்க ஞானம் இருப்ப தில்லை. இதனால் மதரஸாக்களில் பிறதுறை கல்வியையும் கற்பிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து வலியுறுத்திக் கொள்ளப்பட்டது.
மதரஸாக்களில் பொது கல்வி திட்டத் தினையும் கொண்டு வர மத்திய அரசு போட்டிருக்கும் திட்மே மத்திய மதரஸா வாரியம். இதற்காக கலந்தாய்வு கூட்டம் ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அக்டோபர் 3 ஆம்தேதி கூட்டியது. இக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் கபில்சிபல், '' மதரஸாக்களின் மார்க்க ரீதியிலான கல்வி திட்டங்களில், கற்பித்ததில் அரசு தலையிடாது. இதை வேண்டாம் என்று அவர்கள் கருதினால் இந்த மசோதாவை அரசு ரத்து செய்து விடும் என்று பதிலளித்துள்ளார்.
மார்க்க கல்வி தொடர்பான பாடத் திட்டங்களில் அரசு தலையிடாது என்று மத்திய அமைச்சரே ஒப்புதல் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது. அதனை தீர்மானப் பூர்வமாக கூட அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அரே நேரம் மதரஸாக்களில் உலக கல்வயும் கற்பிக்கபட உள்ளத் தேவையே புறக்கணித்து விடக் கூடாது. மத்திய அரசே உதவிட முன்வருகிறபோது அத னில் தடைகள், முரண்கள் இருப்பது தெரிய வந்தால் அரசிடம் தெளிவுபடுத்தி அதனை நன்மையாக்கி கொள்ளலாம். சந்தேகம், அச்சதின் ஊடாக அரசின் உதவி களையும், திட்டங்களையும் இழந்து விடக் கூடாது என்பதில் மார்கக அறிஞர் கள் தெளிவுபட வேண்டும். இந்த வாரியம் அமையுமானால் அரசு சில கோடி நிதிகளை ஒதுக்கி மதரஸாக்களை மேம்படுத்த உதவும். நலிந்துள்ள மதரஸாக் களையும், ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க முடியாமல் திணரும் மதரஸாக்களும் நன்மை அடையலாம். புதிய கட்டிடங்கள், உபயோகப் பொருட் கள் பெறுவதிலும் அந்த நிதியை திறம்பட நிர்வகிக்கலாம். இதற்கென அறிஞர்கள் கொண்டு நிர்வாக குழு ஒன்றியையும் அமைத்திடலாம். ஆனால் அச்சப்பட்டுக் கொண்டு முற்றிலும் நிராகரித்து விடு வதால் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இது எதிர்கால சமூகத்திறகு நாம் செய்திட விளையும் மிகப்பெரிய பேரிடராகும்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கற்பித்து வரும் பாடத்திட்டங்களை எந்த தடையும் இன்றி மார்க்க கல்வி பெறும் மாணவர்களுக்கு வழங்கிட வேண் டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
எனவே மார்க்க கல்வி திட்டங்களை வகுப்பதில் ஏற்கெனவே மதரஸாக்களுக்கு உள்ள உரிமையை அப்படியே வைத்துக் கொண்டு பௌதீக கல்வியில் அரசின் உயர்நிலை திட்டங்களோடு ஒத்துப் போவதே நமது இன்றைய தேவை. காலத்தின் கட்டாயம். மாறாக நமக்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, பயந்து கொண்டு ஒடுங் கிப் போவதும் ஒரு மூட நம்பிக்கை தா

No comments:
Post a Comment