மனித உரிமை செயல்பாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு!
தேசத்திற்கு எதிரான போர் புரிந்தார் என குற்றம் சாட்டி மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கும் மற்றும் இரு முக்கிய பிரமுகர்களுக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டாக்டர் பினாயக் சென், மாவோயிஸ் டுகளின் சித்தாந்தகுரு நாராயண் சன்யால், கொல்கத்தா தொழிலதிபர் பியூஸ் குஹா ஆகியோர் தேசத்திற்கு எதிராகப் போர் புரிவதற்கு டாக்டர் பினாயக் சென் உதவிய தாக ராய்ப்பூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
124எ (தேசத்துரோகம்), 120பி (தேசத்திற்கு எதிரான சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின்படி இவர்கள் குற்றவாளிகள் என ராய்ப்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார்.
சட்டீஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதத் தொகையும் கட்டவேண்டும். சட்டவிரோத செயல்பாடுகளை தடைச்செய்தல் சட்டத்தின் படி இரண்டு ஆண்டு சிறையும் 1000 ரூபாய் அபராதமும் கட்டவேண்டும். சட்டத்தின் 20-வது பிரிவின்படி சன்யாலுக்கு 10 ஆண்டு சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. இத்தண்டனையை ஒரே கால அளவில் அனுபவித்தால் போதும்.
குழந்தைகள் நல மருத்துவரும், மக்கள் சிவில் உரிமை யூனியன் (பி.யு.சி.எல்) அமைப்பின் துணைத் தலைவருமான பினாயக் சென், சிறையிலுள்ள சன்யாலின் கடிதங்களை மாவோயிஸ்ட்களுக்குவழங்கி தேசத்திற்கு எதிராக சதி செய்தார் என்பது ராய்ப்பூர் கூடுதல் நீதிமன்றத்தின் குற்றச் சாட்டாகும்.
பல ஆண்டுகளாக சட்டீஸ்கரில் ஆதிவாசிகளுக்கும், வறுமையில் உழலும் மக்களுக்குமிடையே மருத்துவசேவை ஆற்றி வந்த பினாயக் சென், கடந்த 2007 ஆம் ஆண்டு பிலாஸ்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் தனிமை சிறையில் வாடிய பினாயக்சென் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் கீழ் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
சிறைக்கைதிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக பினாயக் சென் காவல்துறை மேல் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறைக்கு வருகை தந்துகொண்டிருந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக சென்னின் வழக்கறிஞர் மஹேந்திர துபை தெரிவித்துள்ளார்.
சென்னின் மனைவி எலீனாவும், மனித உரிமை ஆர்வலர்களும் இத்தீர்ப்புக் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னின் மீது தேசத்துரோகம் குற்றஞ்சுமத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை என சென்னின் மனைவி எலீனா தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவியலாது என சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். மனித உரிமை செயல்பாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தீர்ப்பு இது என அவர் தெரிவித்தார்.
சன்யால் மாவோயிஸ்ட் என்பதற்கான ஆதாரமில்லை என வழக்கறிஞர் அமீத் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னிற்கு ராய்ப்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததற்கு உலகமெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சட்டீஸ்கர் நீதி மன்றத்தின் தீர்ப்பு நீதியை மறுப்பதாக அமைந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.
அக்கட்சியின் தேசிய செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா வெளியிட்ட அறிக்கையில்: மனித உரிமை ஆர்வலர்களையும், எங்கள் கட்சித் தொண்டர் களையும் காவல்துறை குறி வைத்துள்ளது. அவர்களுக்கெதிராக பொய்வழக்கை சுமத்தி வருகிறது. டாக்டர். சென்னிற்குப் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியின் தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பினாயக் சென்னிற்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவின் நீதியைக் கொலைச் செய்தது போன்றதாகும். பினாயக் சென்னிற்கு விடுதலைக் கிடைக்க ஜனநாயகத் தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைவரும் அணிதிரள வேண்டுமென ஜனநாயக உரிமை பாதுகாப்பு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராய்ப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சோராப்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சாதாரண ஆதாரங்களின் அடிப்படையிலாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளை ராய்ப்பூர் நீதிமன்ற நீதிபதி துஷ்பிரயோகம் செய்துள்ளார் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாகரீகமற்றது என சோலி சொராப்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்க ளெல்லாம் சொகுசாக வாழும்பொழுது இந்த தேசத்தின் ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது துரதிர்ஷ்டவசமானதாகும் என பிரபல ஆவனப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் சாடியிருக்கிறார்.
டாக்டர் பினாயக் சென்னையும் இதர இருவரையும் நீதிமன்றம் தண்டனை வழங்கியதற்கு நியூ ட்ரேட் யூனியன் இனிஷி யேட்டிவ் கண்டனம் தெரிவித்துள்ளது. குடிமக்களுக்கான உரிமையைப் பாதுகாக்கும் விதமாக இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய மத்திய அரசுக்கு இவ்வமைப்பு கோரிக் கை விடுத்துள்ளது.
டாக்டர் சென்னிற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பை நிரூபிப்பதற்கு அவருடைய மனைவி எலீனா டெல்லியை தலைமையகமாகக் கொண்ட இந்தியன் சோஷியல் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பிய மின்னஞ்சலை ஆவணப்படுத் தியுள்ளது. இது காவல் துறை விசாரணையின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
டாக்டர் பினாயக் சென்னிற்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்ததை எதிர்த்து அமெரிக்காவின் ஹாவட் சதுக்கத்தில் கண்டனப் பேரணி நடைபெற்றது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இப்பேரணியில் கலந்துக் கொண்டனர்.
பினாயக் சென்னை தண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதாரங்கள் எதுவும் அவருக்கெதிராக இல்லை எனவும் பி.யு.சி.எல் செயலாளர் மஹிபால்சிங் தெரிவித்திருக்கிறார். இந்த தீர்ப்பு வெளியான தினம் இந்திய ஜனநாயகத்தின் துயரமான தினம் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்பாராததும், அநியாயமானதுமான தீர்ப்பு இது என பினாயக் சென்னிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறித்து கருத்துத் தெரிவித்த சென் விடுதலை கமிட்டி புனேயில்தெரிவித்திருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு ராய்ப்பூர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்து தீர்ப்பு கூறியதற்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை ராய்ப்பூர் நீதி மன்றம் மீறிவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது. பினாயக் சென்னின் மீதான விசாரணை அரசியல் ரீதியிலானதாகும். சென்னின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை வாபஸ் பெறவேண்டும். என ஆம்னஸ்டியின் ஆசியா-பசிபிக் இயக்குநர் ஸாம் ஸெரிஃபி வலியுறுத்தியுள்ளார்.
சென்னிற்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக சட்டீஸ்கர் அதிகாரிகள் மாவோயிஸ் டுகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக் கட்டும் என ஸாம் ஸெரிஃபி தெரிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் நிறுவனர்களில் ஒருவரான ஹாலித் அசாம், பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை குறித்து கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். பினாயக் சென் மீதான தீர்ப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்து ஜனநாயக உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு டெல்லியில் 27 ஆம் தேதி நாடாளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவ்வாறே ஹைதராபாத்திலும் மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்க

No comments:
Post a Comment