Tuesday, June 5, 2012

தேவை தேர்தல் சீர்திருத்தம்

E-mail Print PDF
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு இரண்டு இடம் காலியாக இருந்தது. அந்த மாநிலத்தில் இரண்டு ராஜ்யசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு இடங்களுக்கு ஐந்து பேர் போட்டியிட்டனர். இதனால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில், போட்டியிட்ட வேட்பாளர்களிடையே வாக்காளர்களான சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் போட்டி மும்முரமாக நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக ஒரு சுயேச்சை வேட்பாளரின் தம்பி தனது காரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாயைக் கொண்டு சென்றபோது காவல்துறையினர் மற்றும் வருமானவரித் துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் நடைபெறவிருந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. உறுதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஷஃபி குரைஷி தெரிவித்திருக்கிறார். தேர்தலை ரத்து செய்த கையோடு குரைஷி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறிய வார்த்தைகள் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், ஊழலில் புரளும் கட்சிகளுக்கும், பணத்தைக் கொண்டு அரசுகளை வளைக்கலாம் என நினைக்கும் அதிகாரத் தரகர்களுக்கும் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அமைந்தது.
பணபலத்தைக் காட்டி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இது சரியான பாடம் என குரைஷி தெரிவித்தார். மேலும் எங்களின் நடவடிக்கை இனிமேல் பணபலத்தை வைத்து தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுக்கு சரியான பாடமாக மட்டும் அமையாமல் அச்சத்தையும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் குரைஷி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஜனநாயகத்தை வீழ்த்த பணநாயகம் செய்யும் முயற்சிகள் பலிக்கவில்லை என்றே சொல்லலாம். சில மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தேர்தல்களில் பணம் விளையாடி இருக்கலாமே தவிர நாடு முழுமையும் நேர்மையான முறையில் யாருக்கும் அஞ்சாத முறையில் தேர்தல்களை நடத்திக் காட்டியவர் குரைஷி. இத்தனை சாதனைகளை நிகழ்த்தி இருப்பினும் இனிமேல் இதுபோன்று நிகழாமல் இருக்க அரசியல் கட்சிகள்தான் ஒன்றுசேர்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்றும் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
இப்போதுதான் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது மிகவும் அவசியம் ஆகிறது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தத்தை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் நடைமுறைக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று கூறிய குரைஷி, மேலும் பல தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றும், குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கவும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் ஒளிவுமறைவு அற்ற நிலையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக்கூறும் குரைஷி, தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டுமென சூளுரைத்துள்ளார்.
குரைஷி நிச்சயம் சாதிப்பார் என நம்புவோம். முறைகேடான தேர்தல் முறைகளைக் களைந்து தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு உத்வேகத்துடன் செயல்படும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இந்திய மக்கள் அனைவரும் தோள் கொடுப்பார்கள் என்பது உறுதி

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை

E-mail Print PDF
அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாக நலப் பணிகளும், அறப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்றுதான் நாம் அனைவரும் நம்பி வந்தோம். ஆனால் நல்லவர்கள் நல்ல நோக்கத்திற்காக சமர்ப்பித்த சொத்துக்களைக்கூட ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

இது இந்தியா முழுவதும் உள்ள நிலையாகும். இடையே அத்தி பூத்தாற்போல ஆற்றல்மிக்க செயல்வீரர்கள் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சில மோசடிகளை அம்பலப்படுத்தி வக்ஃபு சொத்துக்களை மீட்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஆயினும் சுரண்டும் கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேறச் செய்வது இந்தியா முழுவதும் வாடிக்கையாகி வருகிறது. நமது அண்டை மாநிலமான பாஜக ஆளும் கர்நாடகாவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு வக்ஃபு வாரியத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வக்ஃபு ஊழல் விவகாரம் பற்றி உள்ளே நுழையும் முன்பு பொதுவாக வக்ஃபு வாரியம் பற்றி சில பிரமிப்பூட்டும் தகவல்களைப் பார்க்கலாம். பரந்த இந்தியாவில் அதிக அளவு நிலங்களை சொந்தம் கொண்டதாக, திரண்ட சொத்துக்களைக் கொண்ட செல்வ வளம் பொருந்தியதாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏராளமான நிலங்களை தன்னகத்தே கொண்ட கொழுந்த பணக்காரத் துறையாக இந்திய ராணுவத் துறை விளங்குகிறது.
இவ்விரண்டு மெகா துறைகளுக்கும் அடுத்தபடியாக ஏராளமான பரப்பளவு கொண்டதாக நம் முன்னோர்களின் முஸ்லிம் கொடை வள்ளல்களின் நன்கொடையாம் வக்ஃபு வாரியம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புமிக்க பின்னணி கொண்ட வக்ஃபு வாரிய சொத்துக்களில் கர்நாடக மாநிலத்தில் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை விடவும், முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படும் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் போல கர்நாடக வக்ஃபு வாரிய ஊழலும் வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம்பெறப் போகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முன்னாள் இஸ்ரோ உயர் அதிகாரிகளின் ஊழல் போன்றவை அகில இந்திய அளவில் பிரம்மாண்ட ஊழல்களாகவும், கடந்த வாரம் வெளியான 10 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி வயல் ஒப்பந்த ஏல ஊழல் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊழலில் முதலிடம் பெற்றாலும், இரண்டு லட்சம் கோடி வக்ஃபு வாரிய ஊழல் ஒரு மாநில அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன? இவை அத்தனையிலும் உள்ள முறைகேடுகள் வெளிவந்தால் நினைக்கும் போதே மயக்கம் வருகிறது அல்லவா? இரண்டு லட்சம் கோடி வக்ஃபு நில ஊழல் குறித்து மாநில சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டு மென கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தபோது, இதற்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, இந்தப் பிரச்சனை குறித்து தமது அரசு முழுமையாக ஆய்வு செய்தபின் அதனை சபையில் விவாதத்திற்கு வைத்து அதன்பிறகு அறிக்கை வெளியிடலாம் என்று கூறிய அவர், யார் யார் வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்தார்களோ அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ முறையில் திரும்பப் பெறப்படும். வக்ஃபு நிலங்களைச் சுரண்டியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
கர்நாடக வக்ஃபு ஊழலின் மதிப்பு இரண்டு மாநில பட்ஜெட்டுக்கு சமமான நிதிநிலை அளவைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் சுருட்டப்பட்ட உண்மையான பண மதிப்பு உலகத்திற்கு தெரிய வேண்டுமானால் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அரசியல் தலையீடு இன்றி உண்மைகள் வெளிவரும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சமீர் அஹ்மதுகான் கூறினார்.
ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கிய உடன் கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய சேர்மன் அன்வர் மனிப்பாடி தலைமையில் ஒரு குழுவை கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அமைத்தார். அந்தக்குழு தனது 7000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சதானந்த கவுடா முன்னிலையில் சமர்ப்பித்தது. இந்தக்குழு 1954ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃபு நில பேர ஊழல் குறித்து விசாரணை செய்தது. 1954ல் இருந்து வக்ஃபு முறைகேடுகளை விசாரித்தால் பெரும்பாலான காங்கிரஸ் திமிங்கிலங்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கர்நாடக வக்ஃபு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் பெரும் தலைகள் கோரிக்கை வைத்துள்ளன.
கர்நாடக மாநிலத்தை இதுவரை சுரண்டிய ஸாரி, ஆண்ட கட்சிகளில் காங்கிரஸை அடுத்து தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த புண்ணியவான்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். சிபிஐ காங்கிரஸின் கதர்சட்டை அணிந்து சோனியா காந்திக்கு ஜே என கோஷம் போட்டு செயல்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் கோரிக்கையின்படி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தால் நீதி நிலைநாட்டப்படும் என ஓரளவு நாம் நம்பலாம்.
45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கறைபடியா(?) கரத்துக்குச் சொந்தக்காரரான திருவாளர் எடியூரப்பாவை வீட்டிற்கும், சிறைக்கும் அனுப்பிய சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியாகும் என உறுதிபட கருத்துக்கள் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசு அமைத்துள்ள மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கையினை நாம் பார்த்தோமேயானால் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடக வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் 22 ஆயிரம் ஏக்கரில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் அன்வர் மனிப்பாடி கமிட்டி கூறுகிறது. அதிலும் குறிப்பாக சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களில் நிதி மதிப்பில் 85 சதவீதம் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூருவில் நில ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளதாம்.
கர்நாடக வக்ஃபு வாரியத்தின¢ நிலங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மிக அதிக அளவு முறைகேடுகள் 2001ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏராளமான வக்ஃபு நிலங்கள் இந்த காலக்கட்டங்களில் சந்தடியின்றி தனியார்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முறையான விசாரணை செய்து நடவடிக்கைகளை கடுமையாக்கினால் அனைத்தும் வெளிவரும் என அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கை கூறுகிறது. ஏராளமான அரசியல்வாதிகளும், இடைத்தர கர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அன்வர் கூறுகிறார். மெகா ஊழலில் 38 பேர் குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்துவிட்ட அன்வர் மனிப்பாடி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 38 பேர் இந்த மெகா ஊழலில் தொடர்புடையவர்கள் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாக அன்வர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியே கசிந்து பழம்பெருச்சாளி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி 38 முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரிஸ், தன்வீர் சேத், கமருல் இஸ்லாம் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சமீர் அஹ்மத்கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம், கர்நாடக முன்னாள் வக்ஃபு வாரிய அமைச்சர் ஹிந்தா ஷேஹ்ரி, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திசை திருப்பும் முயற்சியா? கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு அந்தப் புகார்களின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக மதவாத பாஜக அரசு இதன் பின்னணியில் சதி செய்வதற்காக தனது அரசின் சிறுபான்மை நலத்துறையை ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது? முஸ்லிம்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் களங்கப்படுத்தச் செய்யும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் அல்லவா? என்ற வாதம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது. அவர்களது வாதங்கள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல, எனினும் வக்ஃபு சொத்துக்களில் கணிசமானவை நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா?
இரண்டையுமே தெளிவுபடுத்த தேவை முறையான, விரைவான, நீதியான விசாரணை

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்

E-mail Print PDF
இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?

Sunday, May 27, 2012

தமிழர் இனப்படுகொலைக்கு ஆதரவு. இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கும் ஆர். எஸ். எஸ்

E-mail Print PDF
ஐ.நா. மனித உரிமைக் குழுவில், தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய காட்சிகள், தமிழர்களை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரின் உள்ளங்களையும் உலுக்கின.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிவது அப்பாவிகளை அழித்தொழித்த அமெரிக்கா என்றபோதும், இத்தீர்மானத்தின் மூலமாவது இனப்படுகொலைகார இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என மனிதநேயமுள்ள அனைத்து அமைப்புகளும் இத்தீர்மானத்தை ஆதரித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன.
ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமான காந்திப் படுகொலையை அரங்கேற்றிய ஆர்எஸ்எஸ், இனப்படுகொலை செய்த இலங்கையை வலிமையாக ஆதரித்துள்ளது. இலங்கையை எதிர்க்கக்கூடாது என வரிந்து கட்டிக் களமிறங்கி, நஞ்சு தொனிக்கும் வார்த்தைகளால் கொஞ்சமும் நெஞ்சிரக்கமின்றி அறிக்கை விடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ஸின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில், இலங்கைக்கு பகிரங்க ஆதரவளித்து எழுதப்பட்டத் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது. இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கையின் மீது மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன. ஒரு ஜனநாயக அரசின் மீது அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ ஆதிக்கம் செலுத்த முயல்வதை இந்தியா அனுமதிக்கக்கூடாது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்காமல் தீர்மானத்தை துணிச்சலாக எதிர்க்க வேண்டும். இலங்கையில் விடுதலைப்புலிகள் எவ்வளவோ அராஜகம் செய்தார்கள். புலிகள் செய்த தவறுகள் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை’’
என்று ஆர்.எஸ்.எஸ் ஏடான ஆர்கனைசர் காட்டமாகத் தலையங்கம் எழுதியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் ஸின் தமிழின எதிர்ப்பும், இனப்படுகொலைத் திட்டங்களும் அம்பலப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் ஸின் தமிழர் விரோதப் போக்கை இன வரலாற்று ரதியாகவும் பார்க்கலாம்.
இலங்கையை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதற்கான காரணங்கள்
காரணம் 1:
இராமாயணத்தை உண்மையாக நடந்த கதையாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இராமன்தான் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மூலதனம். இராமன் போரிட்டது இராவணனோடு. இராவணன் ஆண்ட தேசம் இலங்கை. இராவணன் ஒரு தமிழ் மன்னன். ஈழத் தமிழர்கள் இராவணனின் வழித்தோன்றல்களே. எனவே இராவணனின் வாரிசுகள் அழிக்கப்பட்டது நியாயமே என்று கருதுகிறது இராமபக்த ஆர்எஸ்எஸ்.
காரணம் 2:
ஒருநாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு இணையான உரிமைகளோடு வாழக்கூடாது. பெரும்பான்மையினரின் அடிவருடி, அவர்களின் தயவைப் பெற்றுத்தான் சிறுபான்மையினர் வாழவேண்டும். சிறுபான்மையினர் தங்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடு. சிறுபான்மையினர் அறவழியில் உரிமைப் போராட்டங்களில் இறங்கினால் ஆயுதமுனையில் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும். தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ள இலங்கை ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைக்குச் செயல்வடிவம் தந்துள்ளது.
காரணம் 3:
இந்தியாவிலும் பலமுறை இனப்படுகொலைகளை ஆர்எஸ்எஸ் பரிவாரம் நடத்தியுள்ளது. ஸ்டீவ் வில்கின்சன் என்பவர் இந்தியாவில் மதக்கலவரங்களில் நடந்துள்ள மரணங்களைக் குறித்து ஆய்வு செய்துள்ளார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்கிறது இவரது ஆய்வு.
பாகல்பூர், மீரட், பீவண்டி, கான்பூர், முராதாபாத், டெல்லி, அலிகர், சூரத், கோவை, குஜராத், பட்கல் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்துள்ள ஆர்எஸ்எஸ் இன்னும் பல்லாயிரம் பேரைப் படுகொலை செய்யும் பயங்கரத் திட்டங்களைப் பயிற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வில் உலக நாடுகளால் இலங்கை கண்டிக்கப்பட்டால் அது ஆர்எஸ்எஸ்ஸின் கொலை நோக்குத் திட்டங்களுக்கு குறுக்கீடாகக்கூடும் என்று கருதுகிறது.
இது தமிழர்கள் இந்துத்துவ சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தருணம். தமிழகத்தில் வளரத்துடிக்கும் ஆர்எஸ்எஸ்ஸை ஒரு புற்றுநோய் என்று உணரவேண்டும். தமிழகத்திலிருந்து அந்தப் புற்றுநோயை சுவடே இல்லாமல் அகற்ற ஓரணியில் திரளவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க.வோ ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்த தேசம் இந்த இரட்டைவேடக்காரர்களின் முகத்திரையை விரைவில் கிழிக்கும்.

--ஹாஜாகனி

டெல்லி பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகள் புறக்கணிப்பு! - மறைமுகமாக நிலைநாட்டப்படும் மதவெறி

E-mail Print PDF
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க மறுக்கின்றனர் என்ற ஆய்வுக் கட்டுரையை தி ஹிந்து நாளிதழ் 19.03.2012 அன்று பிரசுரித்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பள்ளிக்கூட மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி உட்பட 92 பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
இருபது பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் ஒரு முஸ்லிம் குழந்தை கூட அனுமதிக்கப்படவில்லை. மற்ற பதினேழு பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற ஆய்வில் தலா ஒரு குழந்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முஸ்லிம்கள் சேர்க்கை சம்பந்தமாக தகவல்களைத் தர மறுக்கின்றனர். காரணம் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் பள்ளிக்கூட நிர்வாகம் சேர்க்கவில்லை என்பதேயாகும்.


முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர எத்தனைப் பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளிப்படுத்திய பள்ளிக்கூடங்களின் தகவலைப் பார்க்கும்போது முஸ்லிம் சமுதாயம் இரண்டாந்தர குடிமக்களை விடவும் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு,
பூசா சாலையிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளிக்கூடத்தில் 170 நர்சரி மாணவர் சேர்க்கைக்காக 2443 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 155 முஸ்லிம் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் வெறும் இரண்டு முஸ்லிம் குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதுவும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவின் கீழ் அவ்விரு குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கைலாசில் டெல்லி அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் வாழுகின்ற மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்களே. முஸ்லிம் பகுதியிலுள்ள டெல்லி அரசு பள்ளிக்கூடத்தில் 269 மாணவர் சேர்க்கைக்காக 2997 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 260 முஸ்லிம் குழந்தைகளும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஐந்து முஸ்லிம் குழந்தைகள் மட்டும்தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். டெல்லி முதலமைச்சருக்கு கடிதம் சமூக ஆர்வலர் அப்துல் காலிக், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டெல்லியிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை சேர்ப்பதில்லை. முஸ்லிம்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில்லை. டெல்லி மக்கள் தொகையில் அரசின் கணக்கெடுப்பின்படி 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் 0.5 சதவீத முஸ்லிம்களை மட்டுமே பள்ளிக்கூடங்கள் சேர்க்கின்றன. டெல்லி கீர்த்தி நகர் கிளையிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளிக்கூடத்தில் ஒரு முஸ்லிம் குழந்தை கூட சேர்க்கப்படவில்லை.

டவ்லாகுவான் கிளையிலுள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு முஸ்லிம் குழந்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. லாஜ்பத் நகரிலுள்ள புளு பெல்ஸ் பள்ளிக்கூடத்தில் 150 நர்ஸரி மாணவர் சேர்க்கையில் வெறும் இரண்டு முஸ்லிம் குழந்தைகளை மட்டுமே சேர்த்துள்ளனர். அதுபோன்று சாதிக் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் 120 பேரில் மூன்று முஸ்லிம் குழந்தைகளை மட்டுமே நர்ஸரியில் சேர்த்துள்ளனர். மேற்கூறப்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களும் முஸ்லிம்கள் முழுமையாக உள்ள பகுதியாகும் என்று சமூக ஆர்வலர் அப்துல் காலிக் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் நகலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பியுள்ளார். இதுசம்பந்தமாக தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வஜஹத் ஹபீபுல்லாஹ் குறிப்பிடுகையில், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளும், நலத்திட்டங்களும் வந்து சேருவதில்லை என்று குறிப்பிட்டார். முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூட சேர்க்கையில் புறக்கணிப்பு சம்பந்தமாக தி ஹிந்து பத்திரிகையில் வந்த ஆய்வை எடுத்துக்காட்டி லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி எழுப்பினார். இந்தப் பிரச்சனையை பாஸ்வான் மாநிலங்களவையில் எழுப்பியவுடன் பாஜக உறுப்பினர் பல்பீர் புன்ஜ் கடுமையாக எதிர்த்தார். மதரஸாவில் முஸ்லிம்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டுமென கொக்கரித்தார். மதரீதியான பிரச்சனைகளை எழுப்பக்கூடாது என்றார். உடனே பாஸ்வான் பேசுகையில், முஸ்லிம்கள் இந்திய நாட்டின் பிரஜைகள் இல்லையா? எனக் கேட்டார்.

கல்விக்கூடங்களில் முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்க்க மறுக்கின்றனர். இதற்கு உடனடியான தீர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென பாஸ்வான் வலியுறுத்தினார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் சேர்க்கப்பட்ட முஸ்லிம் குழந்தைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் முஸ்லிம் குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று போராட்டம் நடத்தும்போது சங்பரிவார அமைப்புகள் மதரீதியான இடஒதுக்கீடு கூடாது என விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். முஸ்லிம்கள் நிராகரிக்கப்படுவது மதரீதியாகத்தானே தவிர பொருளாதார ரீதியாக இல்லை என்பது மேற்கூறப்பட்ட தகவலில் நிரூபணமாகிறது. இதுசம்பந்தமாக டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கூறுகையில், அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களில் 16 சதவீதம் முஸ்லிம் குழந்தைகளை சேர்த்திருக்கிறோம் என்றார். இந்த ஆய்வறிக்கையைப் பற்றி பத்திரிக்கையாளர் கேட்டபோது, இதுசம்பந்தமான அனைத்து தகவலையும் நாளைக்கு சொல்கிறேன் என்று கூறி நழுவினார். இன்றைய நாள்வரை முஸ்லிம்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்க மறுப்பது சம்பந்தமாக ஷீலா தீட்சித் எதுவுமே கூறவில்லை. அடுத்த மாதம் வரக்கூடிய டெல்லி உள்ளாட்சிமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் உத்தரபிரதேசத்தில் செய்தது போன்று காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள்.
முஸ்லிம் குழந்தைகளை கல்விக்கூடங்களில் புறக்கணிப்பது என்பது டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பல பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க பள்ளி நிர்வாகங்கள் மறுக்கின்றன. தரம் மிக்க கல்வியை அனைத்து சமுதாயத்திற்கும் வழங்கினால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடைய முடியும். அனைவருக்கும் கல்வி, சமத்துவம் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். செயல்பட வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் நாடாளுமன்றத்தில் சமுதாயக் கட்சிகள் சார்பில் எண்ணிக்கை வெற்றி பெற்று சென்றால்தான் இது போன்ற பிரச்சனைகளை உலுக்கி எடுக்க முடியும்.

மோடியை முன்நிறுத்தும் ஏகாதிபத்திய சக்திகள்

E-mail Print PDF
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ராகுல் காந்திக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவாலாக விளங்குவார் என மேற்கத்திய பத்திரிக்கையான டைம் தனது கணிப்பினை திணித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது குபீர் என மக்கள் சிரிக்கத் தொடங்கினர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருப்பார் என நம்பப்படுவதே ஒரு நகைச்சுவைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியை முன்நிறுத்தி நடைபெற்ற தேர்தல்களில் சொல்லி வைத்தாற்போல எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சிகளை வெற்றிபெற வைப்பதற்காகவே தனது பணிகளை ஆற்றும் ஒருவர் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தப்படுவதாக வைத்துக்கொண்டால் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். காரணம், காங்கிரஸ் கூட்டணிக்கு ராகுலின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை இருக்கக்கூடும்.

ஆனால் ராகுலுக்கு மோடி சவாலாக விளங்குவார் என்ற கூற்று குலுங்கக்குலுங்க சிரிப்பை வரவழைக்கக்கூடியது. மோடியை சொந்தக் கட்சியி னரும் கூட்டணிக் கட்சிக் காரர்களும் தங்கள் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு வரக்கூடாது என மறுத்து வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலைமை இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று. மோடி இவ்வளவு பரிதாபப் பின்னணியைக் கொண் டவர் மட்டுமல்ல, குஜராத் இனப்படுகொலை மூலம் கொடூரப் பின்னணியும் கொண்டவர்.

மோடி-ராகுல் இருவர் மட்டும் தான் பிரதமர் பதவிக்கு மக்களால் எதிர்பார்க்கப்படும் புள்ளிகளா? இவர்களை மேற்கு ஊடகம் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்? மூன்றாவது அணி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய இடத்தினைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் டைம் பத்திரிகையின் இந்த வினோத பரப்புரை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டு புதையல்

E-mail Print PDF
காஷ்மீர் தீவிரவாதிகள், தாலிபான் தீவிரவாதிகள், அல்கொய்தா தீவிரவாதிகள், அல்குஸ்கா தீவிரவாதிகள், அல்கபாப் தீவிரவாதிகள் என பல்வேறு தீவிரவாதக் கூட்டங்கள் குறித்து வணிக நோக்கு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
கும்பகோணத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து இவர்கள் வழக்கமான பொய்ப் பரப்புரை எழுப்பவே இல்லை. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்(!) என்பதை செய்தியைக் கூர்ந்து கவனித்தால் புரிந்து விடும்.கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலுமிச்சங்கள் பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட இடம் அக்ரஹாரம் பகுதியாம். இப்போது புரிகிறதா?

மத்திய அரசின் 2012-13ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை... ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்?

E-mail Print PDF
மத்திய அரசின் 2012-13ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்றதில் இருந்து விதவிதமாக புதுப்புது வடிவங்களில் மக்களுக்கு சுமைகளை மற்றும் துன்பங்களை ஏற்றிவருகிறது.
இது அப்பாவி மக்களின் மீது தொடுக்கப்பட்ட பொருளாதார தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எரிபொருளுக்கான மானியம் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை பங்குகளின் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும் மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது. எரிபொருள் மானியம் நேரிடையாக மக்களுக்குச் சேர்க்கும் திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்பதே உண்மை. பொதுத்துறை பங்குகளை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும் அபாயம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை. கறுப்புப் பணம் கட்டுப்படுத்தப்படுவது குறித்து எந்த திட்டமோ வரிவிதிப்போ இல்லை. முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எவ்வித வரிவிதிப்பும் இல்லை. திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல் வழங்கக்கூடியது. பணவீக்கத்தின் வேகம் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் பெருகுமோ என அஞ்சும் நிலையில் வருமானவரி உச்சவரம்பு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் தான் என்பது போதுமானதல்ல. மேலும் விலைவாசிகளைக் குறைப்பதற்கோ மேலும் ஏறாமல் தடுப்பதற்கோ எவ்வித முன்னேற்பாடுகளையும் இந்த பட்ஜெட்டில் காண முடியவில்லை.
சிறுபான்மை சமூக மேம்பாட்டுக்கு எவ்வித திட்டங்களும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை, மகளிரை கைதூக்கி விடும் திட்டங்களும் இதில் காண முடியவில்லை. ஈழத் தமிழர் மறுவாழ்வு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் மேல்தட்டு மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையாகவே இது கருதப்படுகிறது

குஜராத்: கேவலத்தின் 10ஆம் ஆண்டு - சஞ்சீவ் பட் குமுறல்

E-mail Print PDF
குஜராத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் இனப்படுகொலையில் கொடிய குற்றவாளிகள் தண்டிக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடுகள் கிடைக்காத நிலையில் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.
இந்த அவலநிலையை சுட்டிக்காட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் மோடி அரசில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாக நேர்மையுடன் செயல்பட்ட சஞ்சீவ்பட், வெட்கக்கேட்டின் 10 ஆண்டுகள் என வேதனை தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜனநாயகத்திற்கான குரல்வளை நசுக்கப்பட்டு விட்டன; குஜராத் வெகுவேகமாக பாசிசமயமாகி விட்டது; அச்சம் காரணமாக அதனை யாரும் வெளியில் சொல்வதில்லை. நீதி குஜராத்தில் எப்போது மலரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதான ஒன்றல்ல. அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது. எவ்வளவு காலம் ஆனாலும் இதற்கென நாம் போராடத் தயங்கக்கூடாது. நீதி வெல்லும்வரை தொடர்ந்து போராட வேண்டும்’’ இவ்வாறு சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக படுதோல்வி: முஸ்லிம்களின் ஓட்டு சிதறியதால் கூடுதலாக 18 இடங்களை பாஜக கைப்பற்றியது

E-mail Print PDF
இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 224 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த மாநிலத்தில் முதலமைச்சராக முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் பதவியேற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் படுதோல்வி அடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பாஜக 47 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் நடத்தும் பாஜக வுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக பாஜக வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்களும் காரணமாகி விட்டனர். ஒரே தொகுதியில் பல்வேறு கட்சியில் போட்டியிடுகிற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பரவலாக முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்.
முஸ்லிம்களின் வாக்குகள் சிதறியதால் பாஜக கூடுதலாக 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் பாஜக வெறும் 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்க முடியும்.

பாஜக வெற்றி பெற்ற 18 தொகுதிகளின் விபரம்
தானாபவன் தொகுதி
சுரேஷ் குமார் (பாஜக - 53719)
அஷ்ரப் அலிகான் (ஆர்.எல்.டி - 53454)
அப்துல் வாரிஸ் (பி.எஸ்.பி. - 50001)

நூர்பூர் தொகுதி
லோகேந்தர் சிங் (பாஜக - 47566)
முஹம்மது உஸ்மான் (பி.எஸ்.பி. - 42093)
குத்புத்தீன் (எஸ்.பி. - 34798)
இக்பால் (சுயே - 32141)

பிஜ்நூர் தொகுதி
பாரதேந்தர் (பாஜக - 68969)
மஹ்பூப் அஹமத் (பி.எஸ்.பி - 51133)
ஷாநவாஸ் (காங் - 47462)

மீரட் தொகுதி
லஷ்மிகாந்த் (பாஜக - 68068)
ரபீக் அன்சாரி (எஸ்.பி. - 61862)
யூசுப் குரைஷி (காங் - 31862)
சலீம் அன்சாரி (பி.எஸ்.பி - 13159)

தெற்கு மீரட் தொகுதி
ரவீந்தர் (பாஜக - 71512)
ரஷீத் அகலாக் (பி.எஸ்.பி - 61762)
ஹாஜி ஆதில் (எஸ்.பி - 49089)
மன்சூர் சைபீ (காங் - 25139)

தெற்கு ஆக்ரா தொகுதி
யோகேன்ட்ரா உபாத்யாயா (பாஜக - 74324)
ஜுல்பிகார் அஹமது பூட்டோ (பி.எஸ்.பி - 51364)
நஜீர் அஹமது (காங். - 39962)
முஹம்மது ஷரீப் உஸ்மானி (எஸ்.பி - 13408)

சிகன்ட்ராபாத் தொகுதி
பிம்லாசிங் சோலங்கி (பாஜக - 45799)
சலீம் அக்தர்கான் (பிஎஸ்பி - 45676)
பத்ருஸ் இஸ்லாம் (எஸ்பி - 43535)

பரேலி கென்னட் தொகுதி
ராஜேஸ் அகர்வால் (பாஜக - 51893)
ஃபஹீம் சபீர் அன்சாரி (பிஎஸ்பி - 32944)
அனீஸ் அஹமதுகான் (சுயே. - 24358)

ஃபெரோஜாபாத் தொகுதி
மனீஸ் (பாஜக - 74878)
அஜீம் பாய் (எஸ்பி - 72863)
காலித் நஸீர் (பிஎஸ்பி - 51790)

ஹமிர்பூர் தொகுதி
சாத்வி நிரஞ்சன் ஜோதி (பாஜக - 63762)
ஃபத்தேஹ் முஹம்மது கான் (பிஎஸ்பி - 55938)
அசோக் (பீஸ் பார்ட்டி - 17330)

கைசர்கன்ஞ் தொகுதி
முகுத் பிகாரி (பாஜக - 45262)
ஹாலித் கான் (பிஎஸ்பி - 37528)
முஹம்மது யூனுஸ் (சுயே - 20791)
சய்யூப் அலி (காங் - 16174)
ரன்வீர் (பீஸ் பார்ட்டி - 12048

கான்பூர் கென்னட் தொகுதி
ரகுநந்தன் சிங் (பாஜக - 42551)
முஹம்மது ஹசன் ரூபி (எஸ்பி - 33243)
அப்துல் மன்னான் அன்சாரி (காங் - 31122
சுஹைல் அக்தர் அன்சாரி (பிஎஸ்பி - 26205

ருடவ்லி தொகுதி
ராம்சந்திர யாதவ் (பாஜக - 61173)
அப்பாஸ் அலி (எஸ்பி - 60232)
சம்சாத் கான் (பிஎஸ்பி - 34354)
முனீர் அஹமது (காங் - 13574)

சஹாரன்பூர் நகர் தொகுதி
ராகவ் லகன்பால் (பாஜக - 85170)
சலீம் அஹமது (காங் - 72544)
மஜாஹிர் ஹசன் (எஸ்பி - 19755)

சஹாரன்பூர் தொகுதி
ஜக்பால் (பாஜக - 80670)
அப்துல் வாஹித் (காங் - 63557)
அப்துல் சர்பராஜ்கான் (எஸ்பி - 43018)

வாரனாசி (வடக்கு - தொகுதி)
ரவீந்திர ஜெய்ஸ்வால் (பாஜக - 47980)
அப்துல் சமது (எஸ்பி - 37434)
ராபியா கலாம் (காங் - 31029)

ஃபாஜில்நகர் தொகுதி
கங்கா (பாஜக - 49995)
கமாலுத்தீன் (பிஎஸ்பி - 44501)
அஜிமுல்லா (பீஸ் பார்ட்டி - 8101)

கைரானா தொகுதி
உகும்சிங் (பாஜக - 80293)
அன்வர் ஹசன் (பிஎஸ்பி - 60750)
அய்யூப் (எஸ்பி - 21267)

இந்த வாக்கு எண்ணிக்கையைப் பார்க்கும்போது எந்த முஸ்லிமும் வேதனை அடையாமல் இருக்க முடியாது. இனிமேலாவது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு களத்தில் நிற்க வேண்டும். தமிழகத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் உ.பி.யில் நடந்ததைப் போன்று நடைபெற்றுள்ளன. உதாரணத்திற்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முத்துப்பேட்டை, மேட்டுப்பாளையத்தில் பாஜக கைப்பற்றியுள்ளது அல்லது முஸ்லிமல்லாதோர் வெற்றிபெற்றுள்ளனர். சமுதாய நலனில் அக்கறையுடன் களத்தில் நிற்பவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் தலைகாட்டுகிற கட்சியைப் புறக்கணித்துவிட்டு, மக்களோடு மக்களாகப் பணியாற்றிவரும் சமுதாயக் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் சமுதாய உரிமைகளை மீட்டெடுக்க முடியும். ஏற்கனவே இரத்த தானத்தில் முதலிடம், 90க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் அனைத்து சமுதாயத்திற்கான சேவை, கல்வி உதவி, மருத்துவ உதவி, சட்டப் பாதுகாப்பு, ஜனநாயக வழியில் உரிமை மீட்பு போராட்டங்கள், இடஒதுக்கீடு போராட்டங்கள் என பல்வேறு பணிகளை தமுமுக மற்றும் மமக செய்துவருகிறது. எவ்வித சமுதாயப் பணிகளையும் செய்யாமல், பதவிக்காக கட்சியை ஆரம்பித்து முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கிற சக்திக ளைப் புறக்கணித்துவிட்டு, முஸ்லிம்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகளுக்கு வாக்களிப் பதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமையை மீட்டெடுக்கலாம்

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

E-mail Print PDF
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்
இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.
இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால் மூடி மறைக்க கூடிய சதி வேலைகளும் முதன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இசுலாமியர்கள் தேச விடுதலைக்கு இயற்றிய தொண்டு வெளிச்சத்திற்கு வராமல் தடை செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்இந்திய இசுலாமியர்கள் தேசிய எழுச்சியின் தொடக்கம் முதல் இந்திய விடுதலைக்கான தியாக தீபத்தை எற்றுவதில் பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தேசியம் மற்றும் ஆங்கிலேய விரோத எண்ணங்கள் விதைக்கப்படுவதில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இதில் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கே உரிய முற்போக்கு தன்மையுடன் முதன்மையான முறையில் தங்கள் தியாகத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முஸ்லிம்களின் தியாக செயல்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது.
இந்திய சமயசார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட சில சகோதரர்கள் வெளிக்கொணர படாத இந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற புனித நோக்கோடு அல்லும் பகலும் வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க, காணாமல் போன வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று, இந்திய சமயசார்பின்மை நிலைநாட்ட உதவிட வேண்டும் என்ற நோக்கோடு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.
தமிழக ஆங்கிலேயே சிப்பாய்கள் ஆங்கில அரசிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களின் ஆணைக்கு இணங்கி அமைதியான முறையில் செயல்பட்டதாக நீண்ட நாட்களாக நம்பப்படுகிறது. சென்னை ஆவணகாப்பகத்தில் இருக்க கூடிய ஓரு ஆவணம் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகின்றது. தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 9வது பட்டா¬யன் படையை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆங்கில அரசு 1775ல் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை எற்க மறுத்து இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியவர் மக்தும் சாஹிப் என்பது ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து, கேப்டன் கெல் என்கிற ஆங்கில அதிகாரி 900 சிப்பாய்கள் முன்னிலையில் மக்தும் சாஹெப்பை இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டிய இந்த தகவல் ஆவண காப்பகத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1806ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் திப்பு சுல்தானின் வாரிசுகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இயற்றிய குறிப்பிடத்தக்க பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றதன் காரணமாக ஆங்கில அரசு இசுலாமியர்களை சந்தேகத்துடன் நோக்கினார்கள் என்பது ஃர்ம்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த புரட்சியில் பங்கேற்றதன் எதிரொலியாக ஆங்கில இராணுவத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல இசுலாமியர்கள் சென்னையிலும் வேலூரிலும் சிறை வைக்கப்பட்டனர். சிலர் காடுகள் நிறைந்த தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1806ல் எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும், பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.
புரஹா ஷா என்கின்ற பக்கீர் வேலூரில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வேலூரில் தங்கி இருந்த மௌல்விகளுக்கும், பக்கீர்களுக்கும் ஆஜ்மீர் நகரில் இருந்த ஆங்கில அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த தொடர்பும், வேலூர் முஸ்லிம்கள் 1839ல் கிளர்ச்சி செய்ய தீட்டிய திட்டமும் வெளியானது. அதே போல் அதே கால கட்டத்தில் வேலூர் பக்கீர் காதர் மீரா என்பவர் கைது செய்யப்பட்டபோது வேலூர் முஸ்லிம்களுக்கும், சென்னை பல்லாவரத்தில் இருந்த ஆங்கில எதிர்ப்பு சிப்பாய்களுக்கும் இருந்த தொடர்பும் அவர்கள் சதித்திட்டத்திற்காக இணங்கி செயல்பட்டது தெளிவானது. அதே வேளையில் வேலூரில் ஆங்கில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகத்ததற்காக லத்தீப் சாஹிப் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ¬ல் வேலூரில் இருந்து வெளிவந்த சுல்தானா அக்பர் என்கின்ற தினசரி பத்திரிக்கை ஆங்கில விரோத கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பதிய செய்தது. ஆக வேலூர் முஸ்லிம்கள் 1806 க்கு பிறகும் ஆங்கில அரசுக்கு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் தேசியம் செழித்து வளர வித்திட்டன என்பது உறுதியாகிறது.
1857 புரட்சியின் பாதிப்புகள் தமிழகத்தை எட்டவில்லை என நீண்ட நாட்களாக போதிக்கப்பட்டு வந்தது. இதனால், சமீபகாலமாக தமிழகத்திலும் 1857ன் எழுச்சியின் பிரதிபழிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் தமிழக முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்பது அறிந்து பெருமை பட வேண்டிய செய்தி மட்டும் ஆல்ல அதை இசுலாமிய சகோதரர்களிடம் கொண்டு சென்று இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் இசுலாமியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.
காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1857 புரட்சியின் போது சென்னையில் ஆற்காடு நவாப் அவர்களின் தலைமையிடமாக கருதப்பட்ட திருவல்¬லிக்கேணியில் புரட்சியின் தாக்கம் தென்பட வாய்ப்புகள் இருந்ததாக கருதிய ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குலாம் கௌஸ் மற்றும் ஷேக்மன்னு என்கின்ற இரண்டு நபர்கள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணத்தை வழியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டனர். அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் குசா முஹம்மத் ஆவ்குர்ஹா ஹøசைன் என்பவர் வேலூர் மற்றும் புங்கனூர் பகுதிகளில் 1857 புரட்சிக்கு ஆட்களை திரட்டிய காரணத்தால் மார்ச் 1857ல் கைது செய்யப்பட்டார் ஆகஸ்டு 1, 1857ல் சேலம், புட்நூல் தெருவில் ஆய்யம் பெருமாள் சாரி என்பவரின் வீட்டுக்கு முன் ஆங்கில ஆட்சி அன்றைய தினம் வீழ்ந்துவிடும் என்ற செய்தியை எதிர்பார்த்து பலர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் ஓருவராக இருந்த ஹைதர் என்பவர் இவ்வளவு நேரம் சென்னையில் இந்திய தேசிய கொடி எற்றப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1857 புரட்சியின்போது செங்கல்பட்டில் அருணகிரி மற்றும் கிருஷ்ணா என்கின்ற இருவர் இந்த பகுதியில் மக்களை திரட்டி கலகம் விளைவித்து கொண்டிருந்தனர். செங்கற்பட்டில் எற்பட்டிருக்க கூடிய இந்த எழுச்சியை ஓருங்கிணைக்க சென்னையில் இருந்து சுல்தான் பக்ஷ் என்பவர் செங்கல்பட்டு சென்றார். இந்த தகவல்களையும் சுல்தான் பக்ஷின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் செங்கற்பட்டு மாஜிஸ்ரேட் சென்னை மாகாண அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முஸ்லிம் 1857 புரட்சிக்கு முன்னரும், புரட்சியின் நேரத்திலும் மட்டும் இல்லாமல் புரட்சிக்கு பின்னரும் தொடர்ந்து ஆங்கில எதிர்ப்புணர்வை பல இன்னல்களுக்கிடையே கடைப்பிடித்துதான் பரப்பியும் வந்தனர்.
1869ல் கூட வேலூர் நகரத்தில் கலவர சூழ்நிலை இருந்ததாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 20 வது பட்டாயன் வேலூரில் தங்கி இருந்த ஐரோப்பியர்களை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு இருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளக் கூடிய உரிமை வழங்கப்பட்டது என்பது அரசு உவணங்களில் பதிவாகியுள்ளது.
ஆக இசுலாமியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் தொடக்கம் முதல் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு கட்டங்களிலும் தங்களின் வீரத்தை விதைத்து போராடி, தியாகித்து, இரத்தம் சிந்தி அந்த இயக்கத்தை வளர்த்து இருக்கின்றனர். இதில் தமிழக முஸ்லிம்கள் முண்ணணியில் இருந்தார்களேயல்லாமல், இரண்டாம் இடத்தில் இருக்கவில்லை. இது முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டிய, அறிந்து பெருமைப்பட வேண்டியதன்றோ!
-ஆபுல் பாசல்

இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?

E-mail Print PDF
இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதோர் அடித்தளம் அமைந்துவிட்டதால், மன்மோகன் சிங் பிழைத்தார். அந்த நன்றி உணர்வு இல்லாமல் அப்படிப்பட்ட உணவுத் தன்னி றைவு அடித்தளத்திலுள்ள கற்களை ஒவ்வொன்றாகக் கன்னக்கோல் போட்டுக் கழற்றும் மன்மோகன், பொருளாதார மண்டலம் என்ற லைசென்சை? வழங்கி நொய்டாவில் மட்டு மல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் "விவசாய நில அபகரிப்பை' நிகழ்த்தி வருகிறார்.

இந்திரா காந்தியைப்போல் தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவர் மத்திய கிழக்கு நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளி லும் தோன்றி, உண்ணும் உணவில் தன்னிறைவுத் திட்டம் தீட்டாததால், ஊழலுடன் உணவுப் பிரச்னையும் இணைந்து, மக்கள் கிளர்ச்சி செய்து, அரசியல் மாற்றமே நிகழ்ந்து வருகிறது.

உணவு விலையேற்றம், வேலை யில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி, கல்வியில் குறைந்த முதலீடு, உணவுப் பற்றாக்குறை என்று பல பிரச்சனைகளால் பொருளாதாரம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் உலக ஏகபோக உணவு வர்த்தகர்கள் வேண்டு மென்றே உணவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திரத்தில் நரிகளாகவும் தன்னலத்தில் புலிகளாகவும் உள்ளதை எகிப்து நிகழ்ச்சி வெளிப்படுத்தக் கூடியது. எகிப்தின் உணவுப் பற்றாக்குறை ரஷிய இறக்குமதியால் ஈடு செய்யப்படுகிறது.

கடந்த முறை ரஷியாவில் போதிய உபரி இருந்த நிலையில் கிளன்கோர் ரஷியாவிலிருந்து எகிப்துக்கு கோதுமை ஏற்று மதியைத் தடைசெய்ய ரஷிய அரசை வற்புறுத்தியுள்ளது. ரஷியாவும் அவ்வாறு தடை செய்யக் காரணம் சுவிட்சர்லாந்து நிறுவனமான கிளன்கோர் ரஷிய உணவு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

ஒரு குளம் வற்றும்போது மீன்கள் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய ஆற்றுநீரைத் திருப்பிவிடாமல் வற்றிய குளத்தில் மீன்பிடிக்கும் உலக வர்த்தகர்கள் ஒன்றுகூடி உலக விவசாயத்தை உயர்த்தும் தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தாவோஸ் நகரில் அமெரிக்க ஆசியுடன் வழங்கியுள்ளனர். உலகத்தில் உணவு உற்பத்தி குறைந்து வருவதால் ஆண்டுக்கு 2 சதவீதம் உணவு உற்பத்தி பெருகவும், 2 சதவீதம் பசுமையக விளைவைக் குறைக்கவும், 2 சதவீதம் வறுமையைப் போக்கவும் திட்டம் தயாராகிவிட்டது.

உலகின் மாபெரும் உணவு அரக்கர்களான 17 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன யார் அவர்கள்? என்று கேட்டால், கார்கில், கோகோ கோலா, டூபாண்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சி, கிராஃப்ட்ஃபுட், சேப் மில்லர், ஆர்ச்சர் டேனியல்ஸ், மிட்லாண்ட், பி.ஏ.எஸ்.எஃப், மெட்ரோ ஏ.ஜி, யூனிலிவர், சைன்ஜெண்டா, வால்மார்ட், யாரா இண்டர்நேஷனல், பஞ்சி லிமிடட். யு.எஸ். எய்டின் கைங்கர்யம் இது.

உலக விவசாயம் முற்றிலுமாகத் தொழில் நிறுவனக் கைப்பற்றாக மாற்றும் திட்டம் அமெரிக்க எய்ட் என்று கூறப்படும் யு.எஸ். ஏஜன்சி ஃபார் இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் தயாரித்துள்ள சதித் திட்டம் யு.எஸ். எய்டின், நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஷா, "உணவில் பொதுத்துறையுடன் தனியார் கூட்டுறவு வளர்ந்து உற்பத்தி உயர வளரும் நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்'' என்று தாவோஸில் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 149 நாடுகளில் 105 நாடுகளின் உணவுத் தேவை இறக்குமதியை நம்பியுள்ளன. வடக்கு நாடுகள் உணவு வழங்கும் நாடுகளாகவும் தெற்கு நாடுகள் உணவுக்காகத் திருவோடு ஏந்தும் நாடுகளாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில் இந்திய நிலை என்ன? இந்தியா வையும் திருவோடு ஏந்த வைக்கும் ஏற்பாடுகளில். சர்தார்ஜி அலுவாலியா தீவிர மாயுள்ளார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிகாகோ வர்த்தகப் பள்ளி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன் என்பவர் நிதி ஆலோசகராகவும் விளங்கி வருகிறார். "இன்னமும் ஏன் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'' என்றும் விவசாயத்துக்கு 5 சத மக்கள் போதுமானது என்றும் கூறியுள்ளார். ரகுராம் ராஜன் ஓதிய வேதவாக்கை அப்படியே பிரகடனம் செய்யும் மன்மோகன் சிங், "இந்திய விவசாய வளர்ச்சிக்கு விவசாயிகள் முட்டுக்கட்டையாக உள்ளதால் - அரைக்காணி, காக்காணியெல்லாம் வெளியேறி வேறு பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்று கூறியுள்ளதைக் கேட்டு... "மூட்டையைக் கட்டிக்க... பட்டணந்தான் போகலாமடி'' என்று விவசாயிகள் கிளம்பி விட்டதை மக்கள் தொகைப் புள்ளிவிவரமும் நிரூபிப்பதாயுள் ளது.

2001-லிருந்து 2011-க்கு வரும்போது சுமார் 9 கோடி மக்கள் நகர்ப்புறம் வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மொத்த மக்கள்தொகை 2011-ல் 121 கோடி. இதில் 83.3 கோடி மக்கள் கிராமத்தில் உள்ளதாக ஒரு கணக்கு. - அதாவது 70 சதவீதம் இருப்பினும் இவர்களில் சரி பாதி விவசாயம் சாராத பணியில் ஈடுபட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. கிராம மக்கள் அதாவது கிராமத்தில் வசித்தாலும் விவசாயம் செய்வோர் என்று இன்றைய தொழில்மய உலகில் கணக்கிட முடியாது. யு.எஸ். எய்ட் கூறுவதையெல்லாம் மன்மோகன் சிங் நிறைவேற்றிய வண்ணம் உள்ளார். அன்னாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அலுவாலியா அண்மையில் ஓமானி நிறுவனத்துக்கு ஏற்றுமதிக்குரிய விவசாய உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே நீண்டகாலமாகச் செயல்பட்டுவந்த வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டிச் சட்டத்தை அகற்றிய அலுவாலியா, இந்தியத் தொழில் வர்த்தக அமைப்புக் கூட்டணியை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சிறு விவசாயிகளின் நலன் களைக் காப்பாற்றி வரும் மார்க்கெட் கமிட்டிகள் மெல்ல மெல்ல மூடப்பட்டு அந்த இடத்தைப் பன்னாட்டு ஏகபோகங் கள் ஆக்கிரமிக்கும். 2005-ல் மார்க்கெட் கமிட்டி சட்டத்தில் உணவுத்தொழில் நிறுவனம் விரும்பும் உகந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டம், பொதுவிநியோகம். உணவு மானியம் எல்லாம் நிதிநெருக்கடியைக் காரணம்காட்டி உணவு வர்த்தகத்தில் தனியார் நுழைவு படிப்படியாக அனுமதிக் கப்படலாம். ஏனெனில், திட்டக்கமிஷன் பொருளியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், அரசுப் பணித்துறைச் செயலர்கள் போன்றோர் சுதந்திர வணிகம், சில்லறை வணிகத்தில் தொழில் நிறுவன ஆதிக்கம் - உணவுச்சங்கிலி என்று அமெரிக்காவில் காண் பவைகளை இந்தியாவுக்குள் கொண்டுவரத் துடிக்கின்றனர். இப்படிக் கொணர்வதன் மூலமே விவசாயத்தை உயிர்த்துடிப்பாக மாற்றலாம் என்று பேசுகின்றனர்.ஏறத்தாழ இன்றைய இந்தியா விவசாயத்தைக் கார்ப்ப ரேட்டுகளுக்கு வழங்க முன்வந்து விட்டது. விவசாயிகளே சமூகத்துக்கு பாரமாகிவிட்டனர் என்பதால், அரசின் கொள்கையே விவசாயிகளை ""மூட்டையைக் கட்டிக்கோ, பட்டணம்போய் பிழைச் சுக்கோ'' என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. பாரம்பரியம் என்ற பேச்சே காதில் விழ வேண்டாம். விதை விற்பனையில் மான்செண்டோவின் ஏகபோகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

உலக வர்த்தகத்தில் ஒழுங்கு முறையற்ற ஊக வணிகம் 2002-ல் 0.77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்ஜியங்கள்) என்ற நிலை இன்று 8 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா நீங்கலாக உணவு வர்த்தகத்தைக் கைப்பற்றிவிட்ட பன்னாட்டு ஏகபோகங்கள் உணவு இறக்குமதியை நம்பி வாழும் நாடுகளில் உணவு விலையை உயர்த்தி விட்டன. பசியுடன் வேலையின்மையும் சேர்ந்து ஏழை நாடுகளைத் துயரிலாழ்த்திவிட்டதால் மக்கள் கிளர்ந்தெழுந்து அந்தந்த நாட்டுத் தலைவர்களைக் குற்றவாளி யாக்கினாலும் நிஜமான குற்ற வாளி நியூயார்க்கின் வால்தெரு. நிதி விற்பன்னர்களின் இப் பொன்னகரத்திலிருந்து வெளிவரும் விஷவாயுவுடன் எண்ணெய் விலையும் பற்றி எரிவதால் ஏழை நாடுகளின் வயிற்றில் பசித் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. உணவு உத்தரவாதச் சட்டம் இயற்றப் போகும் மன்மோகன் அரசு, குறைந்தபட்சம் இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்காமல் மீண்டும் உணவில் தன்னிறைவை நோக்கித் திட்டமிடுவதன் மூலமே உணவுக்கு உத்தரவாதம் வழங்க முடியும். இல்லாவிட்டால் உலக உணவு வர்த்தகப் புலிகளுக்கு இந்தியா இரையாகிவிடும்.

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்

E-mail Print PDF
மதநல்லிணக்கம், சமூக அமைதியை வலியுறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த செய்தி நடுநிலையாளர்களிடையே கடும் அதிருப்தியையும் கேலிச் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.


இருபத்தோறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி 2002ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து வரலாற்றில் அழியாத இழிவைப் பெற்றுவிட்ட நரவேட்டை நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களால் நகைப்புக்குரியதாக கருதப்பட்டதில் வியப்பில்லை. ஆடுகளுக்காக ஓநாய் ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போல இந்த செயல் அமைந்ததாக சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

2002 பிப்ரவரி 28ஆம் தேதி நிகழ்ந்த இனப்படுகொலையில் குதறப்படும் கதறலுடன் குல்பர்க் என்ற குடியிருப்பினுள் புகுந்து அடைக்கலம் புகுந்த மக்களை பின்னால் விரட்டிச் சென்று சமூக விரோதிகள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். அடைக்கலம் தேடி வந்த மக்களைப் படுகொலை செய்ய முயன்ற பாதகர்களை தடுத்து நிறுத்தினார் கோத்ரா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரி.

கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுக்களை கலவரக்காரர் களின் முன் வைத்து இவற்றை எடுத்துக் கொண்டு அப்பாவிகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார் இஹ்சான் சான் ஜாஃப்ரி. அவரது கெஞ்சலையும் உருக்கமான வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திய அந்த மனித மிருகங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றதோடு அவர்களுக்கு ஆதரவாக புறப்பட்ட இஹ் ஜாஃப்ரியையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றும் அவரது ஆணுறுப்பையும் வெட்டி சிதைத்து நெருப்பில் போட்ட கொடூரமும் யாராலும் மறக்க முடியாதது.

இந்தக் கொடூரங்களுக்கு காரணமானவர்கள் மீதும், அந்த கொலைப்படையின் தலைவனும் குஜராத் முதல் அமைச்சருமான மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தினை அணுகினார். அவரது நீண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக அவரது முறையீட்டினை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுக்குழு முன் குஜராத் முன்னாள் புலனாய்வு காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உள்ளிட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் நாட்டை யே அதிர்ச்சியடைய வைத்தது. மோடியின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியது.

உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விரைவில் அறிக்கையினை வெளியிட்டு உண்மைகளை உலகிற்கு வெளிப் படுத்தும் என எதிர்பார்த்த சூழலில் உச்சநீதிமன்றம் திடீரென ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி மோடி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் வருவது மட்டுமே உச்சநீதிமன் றத்தின் வேலை அல்ல என்று அறிவித்ததோடு குஜராத் மாநிலத்தின் கீழ் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் கூறினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

குஜராத் நீதிமன்றங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் உச்சநீதிமன்ற அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார் நீதிக்காக வேண்டி போராடிய மூதாட்டி ஜாக்கியா ஜாஃப்ரி.  இருப்பினும் முழுமையான விசார ணைகளை செய்யும் பொறுப்பு உச்சநீதிமன்றத்தின் பணி அல்ல, கீழ் நீதி மன்றங்களின் பணியே என்றும் கருத்துக்கள் சொல்லப் பட்டன.

அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தின் விசாரணைகளை சிறப்பு புலனாய்வுக் குழு கண்காணிக்கும் என்ற  உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மோடியை பரிசுத்தமானவர் என்று கூறிடவில்லை என்று சட்டநிபுணர்களாலும் கற்றறிந் தவர்களாலும் தெளிவாக கூறப்பட்டது. இருப்பினும் மோடி ஆதரவு ஊடகங்கள் மோடியை இனக்கலவரங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், மனிதப்புனிதர் என்றும் உச்சநீதிமன்றமே புகழாரம் சூட்டிவிட்டதைப் போல போலியான பரப்புரைகளை பா.ஜகவில் உள்ள மோடி ஆதரவு முகாமும் சில அரை வேக்காட்டு ஊடகங்களும் பரப்பத் தொடங்கின. மோடியும் தான் உத்தமர் என்று உலகம் அறிவித்துவிட்டதைப் போலவே ஆர்ப்பாட்டம் செய்தார்.

ட்விட்டர் இணையதளத்தில் நிஷீபீ வீs நிக்ஷீமீணீt என்று ரொம்ப நல்லவர்போலும் பாவ காரியங் களை வாழ்க்கையில் ஒரு நாள் கூட செய்யாதவர் போலும் புனிதர் வேடம் போட்டார்.

உச்சநீதிமன்ற அறிவிப்பினை தனக்கு சாதகமானதாக காட்டிக் கொண்ட மோடியை உத்தமர் என்ற கனவுலகில் திளைக்க வைப்பதற்கான வேறொரு (கெட்ட) காரியமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடந்தது.

இந்தியாவின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ் என்ற சுயேச்சையான அமைப்பு கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்து வருகிறதாம். இது அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுக ளுக்கும் இடையிலான உறவுகளை நிர்ணயிப்பதில், தீர்மானிப் பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

அதாவது அமெரிக்காவின் நலனைக்காக்க எதிர்கால லட்சியம் குறித்து முடிவெடுக்க சி.ஆர்.எஸ் என்ற அமைப்பு சில ஆய்வுகளை வெளியிடும். அதன்படி, தற்போ தைய வெளியீட்டில் மோடி சிறந்த பொருளாதார மேதையாகவும், அடுத்த பிரதமராகவும் வர வாய்ப்புள்ள தலைவர் என்று அது தனது கணிப்பினை வெளியிட்டது.

அமெரிக்க காங்கிரசனல் ரிசர்ச் சர்வீஸின் அறிக்கை ஒன்றும் அபூர்வமான அறிக்கை அல்ல. இது வெறும் மாதாந்திர அறிக்கை மட்டுமே. இதற்கே மோடியின் ஆதரவு கும்பல் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

மோடி மாபெரும் தலைவர்;  வருங்காலப்பிரதமர் என்றெல்லாம் கூச்சல்கள் எழுந்தன. அமெரிக்க காங்கிரஸின் இந்த அறிக்கைக்கு புதிதாக வியாக்கியானங்கள் வெளிப்பட்டு மோடியை வானளாவ உயர்த்த இப்போது என்ன அவசியம் வந்தது.?
மத உரிமைகளுக்கு எதிரான குற்றம் இழைத்தவர் எனக்கூறி மோடி அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் மீதான கறையைக் (!) களைய அமெரிக்காவில் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப் படுகிறது. அமெரிக்க காங்கி ரசனல் ரிசர்ச் சர்வீஸ் அறிவிப்பு செப்டம்பர் முதல்வாரம் வெளியாகிறது. மோடி தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு வெளியானது, அதனை வைத்து உச்சநீதிமன்றமே தனக்கு புனிதர் பட்டம் வழங்கிவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது, அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது என அனைத்துக்கும் ஒரு வலுவான பின்னணி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒரே ஒரு தடவை பிரதமர் பதவி சுகத்தை ருசித்து இனி என்றுமே அந்தப்பதவியை நெருங்க முடியாத பா.ஜ.கவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்புப் புகழ் அத்வானி முதல் பெல்லாரி சுரங்க மன்னர்களான ரெட்டிகளின் தோழி சுஷ்மாசு வராஜ், கர்ர்ப்ரேட்டுகளின் நண்பர் அருண்ஜேட்லி, போன்ற வர்களோடு ஓநாய் பார்வையோடு மோடியும் களத்தில் நிறுத்தப் பட்டார்.

ஆனால் அத்வானியை விட படுபயங்கர இமேஜ் கொண்ட மோடி மீது அக்கறை கொண்ட சில சக்திகள் மோடியின் பிம்பத்தின் மீது படிந்துள்ள இனக்கலவரம் என்ற இமேஜை மறைக்க, அதனை இந்திய மக்கள் மறக்கவும் மோடி திடீர் உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் நாடகத்தை அறிவித்து அதனை கடும் எதிர்ப்புகளுக்கும் ஆதரவாளர்களின் ஆரவாரங் களுக்கிடையே முடித்துக் கொண் டார். அவரது உண்ணாவிரதம் எடுபடாமல் போனது. எனினும் மோடியை பிரதமராக்கியே தீருவோம் என ஊடகபிற்போக்கு வாதிகளும் கார்ப்பரேட் கொள்ளையர்களும் முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டனர்.

இருப்பினும் மோடியின் இனவெறி இமேஜினால் மோடி எந்தக் காலத்திலும் குஜராத்திற்கு வெளியே போனியாக மாட்டார் என்ற உண்மையை ஆரம்பித்ததும் மோடியை மகாத்மாவாக்கியே தீருவோம் என்ற திட்டத்துடன் உண்ணாவிரத நாடகத்திற்கு ஒத்துழைப்பு தந்ததோடு மோடியை வாழ்த்தி போற்றி புகழ்பாடும் முழுபக்க விளம்பரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளி யாகும் நாளிதழ்களில் வெளி வந்தன.

முழுபக்க விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்காக ரூபாய் குஜராத் மக்களின் வரிப்பணம் ஏராளமாக வாரி இறைக்கப் பட்டது. அந்தப் பணத்திற்கு மயங்கி வாலாட்டும் நாலுகால் பிராணியைப் போல ஊடகங்கள் மோடியை வானைவிட புகழ்ந்தன. இது இலங்கை பிரச்சினையில் ஜெயவர்த்தனே தொடங்கி ராஜபக்ஷே வரை வீசிய எலும்புத்துண்டுகளுக்காக சில தமிழக ஊடகங்கள் செயல்பட்டதைப்போல தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்களும் செயல்பட்டு, குஜராத் நரபலி மோடியின் புகழ்பாடின.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா, அர்ஜூன் மொத்வாடியா உள்ளிட் டவர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.

மோடியின் உண்ணாவிரத நாடகத்தைக் கண்டித்து குஜராத் இனப்படுகொலையில் நரோடா பாட்டியாவில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உறவினர் கள் தர்ணா போராட்டம் நடத்தப்புறப்பட்டனர். போராட்டக் குழுவினரோடு இந்திய விண்வெளி இயலின் தந்தையான விக்ரம் சாராபாயின் மகள் மல்லிகா சாராபாய் மற்றும் ஜன்சங்கர் மஞ்ச்சின் தலைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞருமான முகுல்சின்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தேசத்தில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் ஐந்து கோடி மக்கள் தவிக்கின்றனர். ஒருநாளைக்கு இருபது ரூபாய் கூட தினக்கூலி பெறமுடியாத அவலநிலையில் லட்சோபலட்சம் இந்தியர்கள் வாடிவரும் நிலையில் 180 கோடி செலவழித்து 5 நட்சத்திர பாணியிலான உண்ணாவிரதம் இருந்த மோடி, ஏழை இந்தியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.
மோடியை வாக்குசீட்டின் மூலமும் சட்டப்படியும் தண்டி க்க ஒட்டுமொத்த இந்தியா காத்திருக்கிறது

ன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்

E-mail Print PDF
அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.