Wednesday, March 17, 2010

சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மன்: மோடியே பதவி விலகு பெருகும் எதிர்ப்பலை! அபூஸாலிஹ்

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.


கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள்¢இந்தக்காரியத்தை செய்து முடித்தனர். கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.


அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா செய்தியாளர்கள் வெளியிட்ட செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும். உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள் என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாகக் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.


ஏனென்று கேட்பார் யாருமற்ற நிலையில் முஸ்லிம்களின் அவலநிலை நீடித்தது.


முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம் என்றான் ஒரு வெறிநாய்.

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.


நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.


குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.


கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.

கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.


தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் மாளிகைக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர்.


உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார். காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார் முதலமைச்சர் மோடியை கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களைக்காப்பாற்றக் கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ் சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறி விட்டது.


குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலை களில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல் களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.


2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005&ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.


அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.


கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலா னர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கள் அல்ல என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகம தாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது.


மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.


உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (ஷிமிஜி) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.


மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின.


இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.


இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு மோடியை நேரில் ஆஜராக அழைப்பாணை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மோடி சிறப்பு புலனாய்வுக்குழு முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அது ஆணையிட்டுள்ளது.


சிறப்பு புலனாய்வுக் குழுவால் சம்மன் அனுப்பப்பட்ட மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.


இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு இதுவே முதல் முறை. எனவே மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ்திவாரி தெரிவித்தார்.


மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.

Saturday, March 6, 2010

இந்து முன்னணிகள் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே - ஏன்?

இந்து முன்னணிகள் துடிப்பது ஏன்?


சாமியார்கள் மதத்தின் போர்வையில் நடத்தும் அட்டூழியங்களும், ஆபாசங்களும் மக்கள் மத்தியில் சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டன.

பிரம்மச்சாரியம் என்றெல்லாம் பேசிக் கொண்டு இரவில் காமவேட்டையில் இறங்கும் விளம்பரம் பெற்ற சாமியார்கள் உண்டு. யோகா ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கோடி கோடியாக பணம் பறிப்பது பெருந்தொழிலாகவும் நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுகிறோம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறித்து தலைமறைவாகும் பேர் வழிகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பீர் சாமியார் என்றும், பீடி சாமியார் என்றும் சுருட்டு சாமியார் என்றும், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்றும், நிர்வாண சாமியார் என்றும் பல்வேறு பெயர்களில் உலா வந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதத்தின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தில், இந்து முன்னணி வகையறாக்கள் தந்திரமான ஒரு வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

சாமியார்களின் இந்த ஆபாச நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாத நிலையில், வேறு வழியின்றி இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிட முனைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இது பொது மக்களை ஏமாற்றும் திசை திருப்பும் வேலையாகும். இதே இந்து முன்னணிக் கும்பல் காஞ்சி சங்கராச்சாரியார் கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டாரே - பெண்கள் விஷயத்தில் சிக்கினாரே, ஊரே சிரித்ததே அப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே - ஏன்?

கண்டிக்காததோடு மட்டுமல்ல; கொலைக் குற்றத்தின்கீழ் வேலூர் சிறையில் இருந்த அந்த ஆசாமிக்கு ஊர் தோறும் பவளவிழாக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே ஊரெங்கும் கட் அவுட்டுகள் வைக்கப்படுகின்றனவே இவற்றைக் கண்டிக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரையிலாவது இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க வேண்டியதுதானே! ஆங்காங்கே இத்தகைய விழாக்களை நடத்திட முன் வரிசையில் இருப்பது இந்தக் கும்பல்தானே! அதில்கூட பார்ப்பன சாமியாரா _ பார்ப்பனரல்லாத சாமியாரா என்று இனம் காண்கின்றனர் போலிருக்கிறது.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பான் தேவநாதன் பெண்களிடம் காமவெறி விளையாட்டு விளையாடினானே. மானம் உள்ள பெண்கள்தான் துடைப்பத்தையும், செருப்பையும் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களேதவிர, எந்த இந்து முன்னணி, எந்த ஆர்.எஸ்.எஸ். தேவநாதனை எதிர்த்துப் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தன?

இப்பொழுது இந்த சாமியார்களை எதிர்த்து இந்துமுன்னணி வகையறாக்கள் போராடுவது உண்மை உணர்வின் அடிப்படையில்தான் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் குடி கொண்டிருக்கும் புராண ஆபாசங்கள், இதிகாச ஆபாசங்கள் இவற்றைப் பற்றி தெளிவான முடிவுக்கு அவர்கள் வர வேண்டாமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளை சிவன் கற்பழித்தான். முனிவர்களின் சாபத்தால் சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்தது என்றுள்ளதே. இது ஆபாசமானது இல்லை என்று கூறப் போகிறார்களா?

பிர்மாவின் மகளும் சரஸ்வதி; மனைவியும் சரஸ்வதி என்று எழுதப்பட்டுள்ளதே இது வெட்கித் தலைகுனியத்தக்கது அல்ல என்று இயம்பப் போகிறார்களா? நாரதன் என்ற ஆண் கடவுளும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து பெற்ற பிள்ளைகள் 60 என்று அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதி புகல்-கிறதே, இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்? குரு பத்தினி தாரையைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லப்படுவதற்கு என்ன சமாதானம்? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாஞ்சாலியை வருணிக்கிறதே மகாபாரதம் பஞ்சமா பாதகம் அல்லவா? அது மட்டுமா? அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசை கொண்டாள் அந்தப் பத்தினித் தேவதை என்று பாரதம் கூறுகிறதே பரிதாபத்துக்குரிய பாரத மாதா பக்திப் புத்திரர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

Tuesday, March 2, 2010

அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கிய டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு! 9 பேர் விடுவிப்பு அபூஸாலிஹ்

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதைப் போல பயங்கரவாதச் செயல்களை செய்தவர்கள் எங்கோ இருப்பார்கள். ஆனால் அது தொடர்பாக காவல் துறையினரால் பிடிபட்டவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளாக வும், குற்றமற்றவர்களாகவும், நீதி மன்றத்தால் விடுதலையாகும் நிலை ஏற்படுகிறது.அதுவரை தண்டனை பெற்று அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அனுபவிக்கும் சித்திரவதைகள் அப்பப்பா?


1986-ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ஒரு சிறப்புப்பிரிவு தொடங்கப் பட்டது. 1990&ம் ஆண்டுக்குள் என்கவுண்டர் என்னும் பெயரில் பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், கோப்புகளை விரைந்து முடிப்பதற்காகவும் கொன்று குவிக்கப் பட்டனர் என்ற திடுக்கிடும் தகவலை முன்னணி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவிக்கிறார். அப்பாவிகளை பிடித்து அவர்கள் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளை ஜோடித்து சிறை யில் தள்ளிய கொடுமைகளை நீதித் துறை கண்டறிந்தபோது அதிர்ந்து போனது.

டெல்லி காவல்துறையின் தீவிர வாத சிறப்புப்பிரிவு அதி தீவிர பயங்கரவாதிகள் என்று அறி வித்து கைது செய்தவர்கள் 9 பேரை நிரபராதிகள், ஒன்றும் அறி யா அப்பாவிகள், அவர்கள் மீதான எந்தக் குற்றசாட்டுகளும் நிரூபிக்கப் படவில்லை என டெல்லி நீதிமன்றம் அறிவித்து விடுதலை செய்துள்ளது.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் டேராடூனில் உள்ள (மிஸீபீவீணீஸீ னீவீறீவீtணீக்ஷீஹ் ணீநீணீபீணீனீஹ்)யில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரும் அப்பாவிகள் என ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறிந்து நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. பயங்கரவாதக் குற்றசாட்டில் சிறையில் அடைக் கப்பட்டு அப்பாவிகள் என தற்போது விடு தலை செய்யப் பட்டுள்ளவர் களின் கண்ணீர் கதையை தெஹல்கா இணையதளம் உருக்கத்துடன் வெளியிட்டுள்ளது.

குலைநடுங்க வைக்கும் குற்றச் சாட்டுக்கு இலக்காகி வாழ்வை தொலைத்து விட்டு தவிக்கும் பரிதாப ஜீவன்களின் கதை.
மவ்லவி தில்வார்கான்-இவர் இம்தாதுல் உலும் மதரஸா என்ற மார்க்கக் கல்வி கூடத்தின் ஆசிரியர்.மசூத் அஹ்மத் பாஹ்வைல் பள்ளி வாசலின் பேஷ் இமாம். இவர்கள் இருவரும் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறி இவர்களை டெல்லி தீவிரவாத சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் லஷ்கர்&இ&தய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை கூறியது. தான் எழுப்பிய எந்தக் சந்தேகத் திற்கும் விடையளிக்க டெல்லி காவல்துறை மறுத்து விட்டதாகவும். தான் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய அவர் நான் இதனை மறக்க மாட்டேன்.

சரியான பாடம் கற்பிப்பேன் என அப்போது கூறியதாக இம்தாதுல் உலூம் மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவி தில்வார்கான் கூறினார்.

அத்துடன் வெற்றுப் பேப்பர்களில் தன்னுடைய கையெழுத்துக்களை கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும் தில்வார் தெரிவித்தார். தாங்கள் விலங்குகளைப் போல் நடத்தப் பட்டதாக மசூத் தெரிவித்தார்.
ஹாரூன் ரஷீத்-சிங்கப்பூருக்கு சென்று விட்டு திரும்பிவரும் போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவரும் ஐந்தாண்டு காலம் சிறையில் இருந்துவிட்டார். இவரது வழக்கில் டெல்லிகாவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

ஹாரூன் ரஷீத் ஒரு வழக்கறிஞர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாமாவின் உதவியால் சிங்கப்பூர் சென்றவர் என்பதும், அவரது குடும்பத்தின் சோக நிலையாகும். ஐந்து ஆண்டுகள் நியாயமற்ற சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளிவந்திருக்கும் ஹாரூன் ரஷீத்தின் சிங்கப்பூர் பிழைப்புக்கு டெல்லி காவல்துறையினர் மூடுவிழா நடத்திவிட்டதாகவும் ஹாரூன் ரஷீத் குறிப்பிட்டார்.

இஃப்திகார் மாலிக்- இவர் டோரடூனைச் சேர்ந்த பயோடெக்னாலஜி பயிலும் மாணவர். வீட்டின் உரிமையாளரிடம் கூட தெரிவிக்காமல் இவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அத்துடன் டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியை வேவு பார்த்தாகவும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ராணுவ பயிற்சி பள்ளியின் அனுமதி சீட்டை இஃப்திகார் வீட்டில் இருந்து கண் டெடுத்ததாகவும் கூறியது டெல்லி சிறப்பு காவல்துறை. வெளி நாட்டிலிருந்து திரும்பிய ஹாரூன் ரஷீத் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி உதவி செய்ததாக கதை பரப்பியதை விட ஒரு வித்தியாசமான கட்டுக் கதையை பரப்பியது. இஃப்திகார் கல்லூரி மாணவராயிற்றே, எனவே தீவிரவாத இயக்கம் இஃப்திகாரின் கல்லூரி படிப்புக்கு நிதி உதவி செய்ததாக கதை புனையப்பட்டது.

இஃப்திகார் மாலிக்கின் மீதான குற்றச்சாட்டில் அடிப்படையிலேயே முரண்பாடுகள் இருப்பதை கண்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதியரசர் தர்மேஷ் சர்மா வெகுண்டெழுந்தார்.

நீதியரசரசரின் நேரடி குறுக்கு விசாரணையில் காவல்துறை ஆய்வா ளர் கைலாஷ் சிங்கால் திணறினார், பலமுறை பல்டியடித்தார்.

இறுதியாக இவர் டேராடூனுக்கும் செல்லவில்லை. இஃப்திகார் வீட்டில் எந்தப்பொருளையும் கைப்பற்ற வில்லை. என்பதோடு மற்றொரு படுபயங்கர தகவலையும் நீதியரசர் தர்மேஷ் சர்மா கண்டறிந்தார்.

2002&ல் நிகழ்ந்த இனப் படுகொலைக்காக பழிக்குப் பழி வாங்கவே தான் ராணுவப் பள்ளியின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டேன் என பொய்யான ஒரு வாக்கு மூலத்தையும் காவல்துறை ஆய்வாளர் கைலாஷ் சிங்கால் மிரட்டி வாங்கியதையும் கண்டு நீதிமன்றமே துடியாய் துடித்தது.

இழந்துபோன என் இளமை வாழ்க்கையை யார் சார் தருவார் என விரக்தியுடன் கேட்கும் இஃப்திகார் மாலிக்கின் வினாவுக்கு விடை எங்கே?

குல்ஜார் அஹ்மத்-இளங்கலை படிக்கும் மாணவர் முஹம்மது அமீன்-ஜம்முகாஷ்மீர் வருவாய்த்துறையில் பணிபுரிபவர்.

காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு 2006&ம் ஆண்டு தனது சகோதரர் முஹம்மது அமீன் ஹாஜம் உடன் டெல்லிக்கு வந்தார் 23 வயதான குல்ஜார் அஹ்மது தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு நகைகள் வாங்குவதற்காக வந்தார். அதன் பிறகு நான் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல மாட்டேன் என வேதனையுடன் கூறுகிறார் குல்ஜார்.

நவம்பர் 23&ம் தேதி டெல்லிக்கு வந்த இவர்களை சிறைப்பிடித்த டெல்லி சிறப்பு காவல்துறை டிசம்பர் 10&ம் தேதி வெளியுலகிற்கு அவர்களை பயங்கரவாதிகளாக அறிமுகப் படுத்தியது. லஷ்கர்&இ&தய்பா உறுப் பினர்கள் தான் இவர்கள் என்று அறிமுகப்படுத்தி ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் மற்றும் ஆறு லட்ச ரூபாய் இவர்களிடமிருந்து கைப்பற்றியதாக டெல்லி சிறப்பு காவல்துறை கூறியது.

சரி இவர்களை பயங்கரவாதிகள் என எப்படி கண்டு பிடித்தார்களாம்? திரைப்பட கதாசிரியர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு கற்பனைக்கதைகள் டெல்லி காக்கிகளின் கைவண்ணத்தில் வெளிவந்தன. அதாவது இந்தக் கதையை(!) படிக்கும்போது வாய்விட்டு சிரித்து விடாதீர்கள். மனதிற்குள் சிரியுங்கள்.

லஷ்கர்& இ&தய்பா உடைய டிவிஷனல் கமாண்டர் முஹம்மது அக்மல் என்ற அபூதாஹிரின் தொலை பேசி உரையாடலை வழிமறித்து காவல் துறை டீம் ஒன்று ஒட்டு கேட்டதாம் நான் இரண்டு பேரை அனுப்பியிருக்கிறேன்.

அவர்களிடம் பணத்தையும் வெடி பொருட்களையும் வாங்கிக் கொள்ளவும் என்று மற்றொரு நபருக்கு தொலைபேசியில் பேசியதை ஒட்டுக் கேட்டதாகவும், ஒட்டுகேட்பு டீமின் தலைவர் டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மோகன் சந்த் சர்மா தான் ஒட்டு கேட்டதாகவும் அதோடு குல்ஜார் மற்றும் அமீன் இருவரையும் டெல்லி நோக்கி வந்த பஸ்ஸில் (ரூட் நம்பர் 729) டவுலாகுவான்&யிலிருந்து மகிபால்பூர் வரும் பஸ்ஸில் டிசம்பர் 10&ம் தேதி கைது செய்ததாக காவல்துறை தரப்பு அறிவித்தது.

ஆனால் கைது செய்ததையோ, எங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து எவ்வித புகைப்பட ஆதாரங்களையும் காவல்துறை வெளியிட வில்லை.

இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேஷ் சர்மா காவல்துறை தரப்பு வாதங்களை நிராகரித்தார். முழுக்க முழுக்க டெல்லி காவல்துறையினர் தனது தொழிலுக்கு தொடர்பில்லாத வேலை களில், குற்றச் செயலில் ஈடுபட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தார்.


குல்ஜாரும், முஹம்மது அமீனும், நீதிபதி தர்மேஷ்சர்மா உத்தரவின் படி விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் விடு விக்கப்பட்ட அவர்களின் கண் ணீர் கதை கல்நெஞ்சத்தையும் உருகவைக்கக் கூடியதாகும்.

காவல்துறையினர் இவர்கள் தொடர்பாக வழங்கிய அனைத்து ஆவணங்களும், குற்றச்சாட்டுகளும், பொய்யானவை என நீதிமன்றம் அம் பலப்படுத்தியது. பொய்குற்றம் சாட்டிய இந்தக் கயவர்களுக்கு தண்டனை எப்போது?

துளி அளவும் உண்மை இல்லாத கட்டுக்கதையை பரப்பி இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்களை வேட்டையாடும் அளவுக்கு துணிச்சலை இந்த கயவர்களுக்கு தந்தது-யார்?