Monday, May 14, 2012

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்

E-mail Print PDF
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

ஒபிரைன் இஸ்லாத்தை தழுவி இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகிய

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்

E-mail Print PDF
இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட  தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக  கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின்  கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு  பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட  காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-&இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர்  ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய  ரகசிய சந்திப்பு  கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னதான் அமெரிக்க ஆதரவு பரப்புரை நிகழ்த்தினாலும்  மத வாத காவி பயங்கரவாதம் குறித்தும் அதன் கொடூரங்கள் குறித்தும் தொடர்ந்து அதன் தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இஸ்ரேல் அதிகார வர்க்கத்தினருக்கு நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் சர்வதேச பாசிஸ்டுகள் உள்நாட்டு பாசிஸ்டுகளோடு கரம் கோர்த்திருப்பதாகவே நடுநிலையாள ர்கள் கருதுகிறார்கள்.

பயங்கரவாத (!) தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் ஏற்படுத் தியுள்ள நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவி முகாமின் தீவிர தலைவர்கள் பார்வையிட்டதோடு   இஸ்ரேலின் விமான வியாபார மையங்களைப் பார்வையிடும் திட்டமும் உள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள

மராட்டிய தேர்தல்: 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி

E-mail Print PDF
மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஐவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்;, மூவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்,இருவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள், ஒருவர் ஜன் சூரியா சக்தி கட்சியைச் சேர்ந்தவர்; ஆவர். வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
 வ.எ     தொகுதி     கட்சி   வெற்றிப் பெற்ற வேட்பாளர்   பெற்ற வாக்குகள்
 1 மாவேகான் மத்தி     ஜன் சூரிய சக்தி  முப்தி முஹம்மது இஸ்மாயில் காலிக் 71157
 2 வாந்த்ரே மேற்கு    காங்கிரஸ் ஜியாவுத்தீன் சித்தீக் 59659
 3 மலத் மேற்கு   காங்கிரஸ்   அஸ்லம் ஷேக் 51635
 4 அணுசக்தி நகர் தேசியவாதி காங்கிரஸ் கட்சி நவாப் மாலிக் 38928
 5 மும்பா தேவி காங்கிரஸ்  அமீன் படடேல்  45285
 6 பீவண்டி கிழக்கு சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி  37584
 7 பீவண்டி மேற்கு சமாஜ்வாதி கட்சி அப்துல் ரசீத் தாஹிர் முமீன்  30825
 8 சுhந்திவல்லி காங்கிரஸ் கான் முஹம்மது ஆரிப்  82616
 9முன்குருத் சிவாஜிநகர் சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி 38435
 10 சிலோத் காங்கிரஸ் முஷ்ரிப் ஹஸன் 104241
  
 11 சிலோத்           காங்கிரஸ்        அப்துல் சத்தார் அப்துல் நபி   98131
      
மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2001 அரசு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 10.6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டிய சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 1999 வரை மராட்டிய சட்டமன்றத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 9.5 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அது 12 ஆக உயர்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபு ஆசிம் ஆஜ்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதையும் கவனத்தில் எடு;த்துக் கொள்ள வேண்டு

ஹரியான சட்டமன்றத் தேர்தல்: 5 முஸ்லிம்கள் வெற்றி

E-mail Print PDF
ஹரியான மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஒருவர் போட்டி காங்கிரஸ் வேட்பாளரான ஜாலிப் கான் ஆவார். காங்கிரஸ் கட்சி இவரை வேட்பாளராக நிறுத்த மறுத்ததினால் சுயேட்சையாக ஹாத்தின் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ் குமாரை ஜாலிப் கான் தோற்கடித்தார். வெற்றிப் பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

  தொகுதிவெற்றிப் பெற்றவர்    வாக்கு வித்தியாசம்       கட்சி 
 1 பெரொஸ்புர்  ஜிர்கா    நஸீம் அஹ்மது 18,194      இ.தே.லோக் தளம் 
 2 ஹாத்தின் ஜாலிப் கான் 6,473 சுயேட்சை 
 3 ஜகாத்ரி அக்ரம் கான் 4.378 பகுஜன் சமாஜ் 
 4 நூஹ் அப்தாப் அஹ்மது 16904 காங்கிரஸ் 
 5 புனஹானா முஹ்மமது இல்யாஸ் 2688 இ.தே.லோக் தளம் 

2005ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 3 முஸ்லிம்களே வெற்றிப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவின் மொத்த மக்கட் தொகையில் 5.8 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்று 2001 அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் 5 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த முறை ஹரியானா சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் மக்கட் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி

E-mail Print PDF
மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் மாலேகான் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.

2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.

அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது

மத்திய மதரஸா வாரியம் வேண்டும் விழிப்புணர்வு

E-mail Print PDF

இந்தியாவெங்கும் உதிரிகளாக இருக்கும் மதரஸாக்களை ஒரு வாரியத்தின் கீழ் ஒருங்கிணைக்க மத்தியரசு திட்ட மிட்டுள்ளது இதற்கு மத்திய மதரஸா வாரியம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் மத்தியல் இதற்கு எதிர்ப்பும், அதிருப்தியும் காணப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மார்க்க கல்வி கற்பிக்கும் மதரஸாக்களில் துறை சார்ந்த கல்விகளும் கற்பிக்கப்பட்டன. அறிவியல், கணிதம், மொழியியல், மருத்துவம் என அத்துணை கல்வியும் மதரஸாக்களில் செழித்து காணப்பட்டது. பின்னர் மதரஸாக் கள் என்பது குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள் மட்டும் கற்பிக்கம் பாட சாலைகளாக மாறிப்போனது. இதன் காரணமாக மதரஸாவில் கற்று வெளியேறும் மார்க்க அறிஞர்களுக்கு பிற துறைகள் சார்ந்த ஞானம் இருப்பதில்லை. மாற்று கல்விக்காக அரசு கல்வி கூட்டங்களில் சேர்ந்தவர்களுக்கு மார்க்க ஞானம் இருப்ப தில்லை. இதனால் மதரஸாக்களில் பிறதுறை கல்வியையும் கற்பிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து வலியுறுத்திக் கொள்ளப்பட்டது.

மதரஸாக்களில் பொது கல்வி திட்டத் தினையும் கொண்டு வர மத்திய அரசு போட்டிருக்கும் திட்மே மத்திய மதரஸா வாரியம். இதற்காக கலந்தாய்வு கூட்டம் ஒன்றை மத்திய மனித வள   மேம்பாட்டு அமைச்சகம் அக்டோபர் 3 ஆம்தேதி கூட்டியது. இக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமை வகித்தார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் கபில்சிபல், '' மதரஸாக்களின் மார்க்க ரீதியிலான கல்வி திட்டங்களில், கற்பித்ததில் அரசு தலையிடாது. இதை வேண்டாம் என்று அவர்கள் கருதினால் இந்த மசோதாவை அரசு ரத்து செய்து விடும் என்று பதிலளித்துள்ளார்.

மார்க்க கல்வி தொடர்பான  பாடத் திட்டங்களில் அரசு தலையிடாது என்று மத்திய அமைச்சரே ஒப்புதல் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது. அதனை தீர்மானப் பூர்வமாக கூட அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அரே நேரம் மதரஸாக்களில் உலக கல்வயும் கற்பிக்கபட உள்ளத் தேவையே புறக்கணித்து விடக் கூடாது. மத்திய அரசே உதவிட முன்வருகிறபோது அத னில் தடைகள், முரண்கள் இருப்பது தெரிய வந்தால் அரசிடம் தெளிவுபடுத்தி அதனை நன்மையாக்கி கொள்ளலாம். சந்தேகம், அச்சதின் ஊடாக அரசின் உதவி களையும், திட்டங்களையும் இழந்து விடக் கூடாது என்பதில் மார்கக அறிஞர் கள் தெளிவுபட வேண்டும். இந்த வாரியம் அமையுமானால் அரசு சில கோடி நிதிகளை ஒதுக்கி மதரஸாக்களை மேம்படுத்த உதவும். நலிந்துள்ள மதரஸாக் களையும், ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க முடியாமல் திணரும் மதரஸாக்களும் நன்மை அடையலாம். புதிய கட்டிடங்கள், உபயோகப் பொருட் கள் பெறுவதிலும் அந்த நிதியை திறம்பட நிர்வகிக்கலாம். இதற்கென அறிஞர்கள் கொண்டு நிர்வாக குழு ஒன்றியையும் அமைத்திடலாம். ஆனால் அச்சப்பட்டுக் கொண்டு முற்றிலும் நிராகரித்து விடு வதால் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இது எதிர்கால சமூகத்திறகு நாம் செய்திட விளையும் மிகப்பெரிய பேரிடராகும்.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கற்பித்து வரும் பாடத்திட்டங்களை எந்த தடையும் இன்றி மார்க்க கல்வி பெறும் மாணவர்களுக்கு வழங்கிட வேண் டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

எனவே மார்க்க கல்வி திட்டங்களை வகுப்பதில் ஏற்கெனவே மதரஸாக்களுக்கு உள்ள உரிமையை அப்படியே வைத்துக் கொண்டு பௌதீக கல்வியில் அரசின் உயர்நிலை திட்டங்களோடு ஒத்துப் போவதே நமது இன்றைய தேவை. காலத்தின் கட்டாயம். மாறாக நமக்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, பயந்து கொண்டு ஒடுங் கிப் போவதும் ஒரு மூட நம்பிக்கை தா

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை வெறுப்பவர்கள் அமெரிக்க ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டியது விக்கி லீக்ஸ்

E-mail Print PDF
இந்தியாவில் வாழும் பெரும் பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும் பவில்லை என்றும், அவர்கள் தேசியத் திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய முஸ்லிம்கள் எப்போதும் சமாதான சக வாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்  முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி பயங்கரவாத குற்றச் சாட்டில் பாதிக் கப்படுகின்ற னர் என்ற அவல தகவல்கள் எல்லோ ரும் அறிந்த ஒன்றுதான். எனினும் அமெரிக்கக் தூதர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது சாத்தான் வேதம் ஓதுகிறது என ஒதுக்கி விடலாம். எனினும்  ஓங்கி அறையும் விதமாக ஒலிக்கும் உண்மையை, உலகம் அறியும் உண்மையை மறைக்க முடியாது என்பதையே இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் அமெரிக்கத் தூதரகங் கள் தங்களது தலைமை யிடத் துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங் களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக் காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதர வைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாக இருக்கிறார்கள் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கெ டுப்பு பெரும் பங்கு வகிப்பதை இந்த ஆவணம் வெளிச்சப்படுத்தியுள்ளது.  பெரும் பாலான முஸ்லிம் இளைஞர்கள் சமூகங் களுடன் சமூகத்துடன் கலந்துவிட விரும்பு வதால், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு  மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.