Monday, May 14, 2012

ஹரியான சட்டமன்றத் தேர்தல்: 5 முஸ்லிம்கள் வெற்றி

E-mail Print PDF
ஹரியான மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஒருவர் போட்டி காங்கிரஸ் வேட்பாளரான ஜாலிப் கான் ஆவார். காங்கிரஸ் கட்சி இவரை வேட்பாளராக நிறுத்த மறுத்ததினால் சுயேட்சையாக ஹாத்தின் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ் குமாரை ஜாலிப் கான் தோற்கடித்தார். வெற்றிப் பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

  தொகுதிவெற்றிப் பெற்றவர்    வாக்கு வித்தியாசம்       கட்சி 
 1 பெரொஸ்புர்  ஜிர்கா    நஸீம் அஹ்மது 18,194      இ.தே.லோக் தளம் 
 2 ஹாத்தின் ஜாலிப் கான் 6,473 சுயேட்சை 
 3 ஜகாத்ரி அக்ரம் கான் 4.378 பகுஜன் சமாஜ் 
 4 நூஹ் அப்தாப் அஹ்மது 16904 காங்கிரஸ் 
 5 புனஹானா முஹ்மமது இல்யாஸ் 2688 இ.தே.லோக் தளம் 

2005ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 3 முஸ்லிம்களே வெற்றிப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவின் மொத்த மக்கட் தொகையில் 5.8 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்று 2001 அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் 5 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த முறை ஹரியானா சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் மக்கட் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி

E-mail Print PDF
மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் மாலேகான் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.

2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.

அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது

மத்திய மதரஸா வாரியம் வேண்டும் விழிப்புணர்வு

E-mail Print PDF

இந்தியாவெங்கும் உதிரிகளாக இருக்கும் மதரஸாக்களை ஒரு வாரியத்தின் கீழ் ஒருங்கிணைக்க மத்தியரசு திட்ட மிட்டுள்ளது இதற்கு மத்திய மதரஸா வாரியம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் மத்தியல் இதற்கு எதிர்ப்பும், அதிருப்தியும் காணப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மார்க்க கல்வி கற்பிக்கும் மதரஸாக்களில் துறை சார்ந்த கல்விகளும் கற்பிக்கப்பட்டன. அறிவியல், கணிதம், மொழியியல், மருத்துவம் என அத்துணை கல்வியும் மதரஸாக்களில் செழித்து காணப்பட்டது. பின்னர் மதரஸாக் கள் என்பது குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள் மட்டும் கற்பிக்கம் பாட சாலைகளாக மாறிப்போனது. இதன் காரணமாக மதரஸாவில் கற்று வெளியேறும் மார்க்க அறிஞர்களுக்கு பிற துறைகள் சார்ந்த ஞானம் இருப்பதில்லை. மாற்று கல்விக்காக அரசு கல்வி கூட்டங்களில் சேர்ந்தவர்களுக்கு மார்க்க ஞானம் இருப்ப தில்லை. இதனால் மதரஸாக்களில் பிறதுறை கல்வியையும் கற்பிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து வலியுறுத்திக் கொள்ளப்பட்டது.

மதரஸாக்களில் பொது கல்வி திட்டத் தினையும் கொண்டு வர மத்திய அரசு போட்டிருக்கும் திட்மே மத்திய மதரஸா வாரியம். இதற்காக கலந்தாய்வு கூட்டம் ஒன்றை மத்திய மனித வள   மேம்பாட்டு அமைச்சகம் அக்டோபர் 3 ஆம்தேதி கூட்டியது. இக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமை வகித்தார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் கபில்சிபல், '' மதரஸாக்களின் மார்க்க ரீதியிலான கல்வி திட்டங்களில், கற்பித்ததில் அரசு தலையிடாது. இதை வேண்டாம் என்று அவர்கள் கருதினால் இந்த மசோதாவை அரசு ரத்து செய்து விடும் என்று பதிலளித்துள்ளார்.

மார்க்க கல்வி தொடர்பான  பாடத் திட்டங்களில் அரசு தலையிடாது என்று மத்திய அமைச்சரே ஒப்புதல் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கது. அதனை தீர்மானப் பூர்வமாக கூட அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அரே நேரம் மதரஸாக்களில் உலக கல்வயும் கற்பிக்கபட உள்ளத் தேவையே புறக்கணித்து விடக் கூடாது. மத்திய அரசே உதவிட முன்வருகிறபோது அத னில் தடைகள், முரண்கள் இருப்பது தெரிய வந்தால் அரசிடம் தெளிவுபடுத்தி அதனை நன்மையாக்கி கொள்ளலாம். சந்தேகம், அச்சதின் ஊடாக அரசின் உதவி களையும், திட்டங்களையும் இழந்து விடக் கூடாது என்பதில் மார்கக அறிஞர் கள் தெளிவுபட வேண்டும். இந்த வாரியம் அமையுமானால் அரசு சில கோடி நிதிகளை ஒதுக்கி மதரஸாக்களை மேம்படுத்த உதவும். நலிந்துள்ள மதரஸாக் களையும், ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க முடியாமல் திணரும் மதரஸாக்களும் நன்மை அடையலாம். புதிய கட்டிடங்கள், உபயோகப் பொருட் கள் பெறுவதிலும் அந்த நிதியை திறம்பட நிர்வகிக்கலாம். இதற்கென அறிஞர்கள் கொண்டு நிர்வாக குழு ஒன்றியையும் அமைத்திடலாம். ஆனால் அச்சப்பட்டுக் கொண்டு முற்றிலும் நிராகரித்து விடு வதால் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இது எதிர்கால சமூகத்திறகு நாம் செய்திட விளையும் மிகப்பெரிய பேரிடராகும்.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கற்பித்து வரும் பாடத்திட்டங்களை எந்த தடையும் இன்றி மார்க்க கல்வி பெறும் மாணவர்களுக்கு வழங்கிட வேண் டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

எனவே மார்க்க கல்வி திட்டங்களை வகுப்பதில் ஏற்கெனவே மதரஸாக்களுக்கு உள்ள உரிமையை அப்படியே வைத்துக் கொண்டு பௌதீக கல்வியில் அரசின் உயர்நிலை திட்டங்களோடு ஒத்துப் போவதே நமது இன்றைய தேவை. காலத்தின் கட்டாயம். மாறாக நமக்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, பயந்து கொண்டு ஒடுங் கிப் போவதும் ஒரு மூட நம்பிக்கை தா

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை வெறுப்பவர்கள் அமெரிக்க ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டியது விக்கி லீக்ஸ்

E-mail Print PDF
இந்தியாவில் வாழும் பெரும் பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும் பவில்லை என்றும், அவர்கள் தேசியத் திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய முஸ்லிம்கள் எப்போதும் சமாதான சக வாழ்வு போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்  முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி பயங்கரவாத குற்றச் சாட்டில் பாதிக் கப்படுகின்ற னர் என்ற அவல தகவல்கள் எல்லோ ரும் அறிந்த ஒன்றுதான். எனினும் அமெரிக்கக் தூதர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது சாத்தான் வேதம் ஓதுகிறது என ஒதுக்கி விடலாம். எனினும்  ஓங்கி அறையும் விதமாக ஒலிக்கும் உண்மையை, உலகம் அறியும் உண்மையை மறைக்க முடியாது என்பதையே இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் அமெரிக்கத் தூதரகங் கள் தங்களது தலைமை யிடத் துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங் களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக் காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதர வைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்றாளர்களாக இருக்கிறார்கள் என்றும் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கெ டுப்பு பெரும் பங்கு வகிப்பதை இந்த ஆவணம் வெளிச்சப்படுத்தியுள்ளது.  பெரும் பாலான முஸ்லிம் இளைஞர்கள் சமூகங் களுடன் சமூகத்துடன் கலந்துவிட விரும்பு வதால், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு  மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

Thursday, September 16, 2010

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுடன் பெருநாள் கொண்டாடிய தமுமுகவினர்

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுடன் பெருநாள் கொண்டாடிய தமுமுகவினர்


வேலுார் சிறையில் முஸ்லிம் கைதிகளுக்கு புத்தாடைகள் வழங்குகிறார் தமுமுக மாவட்டச் செயலாளர் ஏஜாஸ் அஹ்மது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுடன் ஈகைப் பெருநாளைக் கொண்டாடினர்.
ஆண்டுதோறும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருநாட்களின் போது வேலூரில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் ஈகைப் பெருநாளான நேற்று (செப்டம்பர் 10) வேலூர் மாவட்ட தமுமுக சார்பில் மத்திய சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பெருநாள் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலுார் மத்திய சிறை பள்ளிவாசலில் ஈத் தொழுகையில் பங்குக் கொண்டோரில் ஒரு பகுதி

சிறை பள்ளியில் பெருநாள் உரை ஆற்றுகிறார் மமக அமைப்புச் செயலாளர் நாசர் உமரி

வேலூர் மாவட்ட தமுமுக செயலாளர் ஏஜாஸ் அஹ்மது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி தலைமையில் சுமார் 50 தமுமுக நிர்வாகிகள் ஈகைத் திருநாள் அன்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அங்குள்ள 50 முஸ்லிம் கைதிகளுடன் சிறையில் உள்ள பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்குக் கொண்டனர். மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி பெருநாள் பேரூரை நிகழ்த்தினார்.
சிறையில் உள்ள 60 முஸ்லிம் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கும் 15 குழந்தைகளுக்கும் தமுமுக சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பிறகு வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் சேகர் முன்னிலையில் சிறையில் உள்ள 1400 ஆண் கைதிகளுக்கும் 300 பெண் கைதிகளுக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

சிறைவாசிகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது

ரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கும் சஹர் மற்றும் இப்தாருக்கான சமையல் பொருட்களை தமுமுக சார்பாக வழங்கப்பட்டு வந்தது.
இல்லத்தாருடன் கழிக்க வேண்டிய நேரத்தில் சிறைவாசிகளுடன் கொண்டாடிய தமுமுகவினரை சிறை அலுவலர்கள் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைத் துறை தலைவர் திரிபாதி மற்றும் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தமுமுக வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏஜாஸ் அஹ்மது தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்


வேலூர் மத்திய சிறை உட்பட சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்குரமலானில் சஹர் மற்றும் இப்தார் உணவுக்கான பொருட்கள் துணிமணிகள் தமுமுக சார்பாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்

Tuesday, May 25, 2010

ம.ம.கவில் இணைந்த பா.ஜ.க மற்றும் தி.மு.கவினர் (video)

E-mail Print PDF
திருவாரூரின் மாநாட்டு நிகழ்ச்சிகள் உற்சாகமாக போய்க் கொண்டிருந்தபோது, மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அபுஸாலிஹ் செய்த அறிவிப்பு பல்லாயிரக் கணக்கானோரை ஆர்ப்பரிக்க வைத்தது.

ம.தி.மு.க.விலிருந்து கடந்த ஜனவரி-6 அன்று அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி செல்லச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ம.ம.க.வில் இணைந்தார்.

மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டமெங்கும் அவர் நாச்சிக்குளம் தாஜுதீனுடன் இணைந்து அனல் பறக்கும் பிறச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரின் தலைமையில் ஏராளமானோர் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ஆளுங்கட்சியான தி.மு.க. விலிருந்தும் 6 பேர் இணைந்தனர்.

ஆளும் கட்சியிலிருந்து விலகி நம்முடன் சேர்ந்ததும், நேர் எதிரான கொள்கையை கொண்ட பா.ஜ.க. மதவெறி கட்சியிலிருந்து விலகி, மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்ததும் பத்திரிக்கையாளர்களை ஆச்சரியத்தில் மூழ் கடித்தது