Wednesday, June 13, 2007

துபையில் உற்சாகம்: திறந்தவெளி பூங்காவில் கருத்தரங்கம்

இந்தியாவில் வலிமைமிக்க முஸ்லிம் பேரியக்கமாக திகழும் தமுமுக அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் பலத்த ஆதரவை பெற்றிருக்கிறது என்பது தெரிந்ததே.
பிழைப்பதற்காக வெளிநாடுகளில் வாழும் இந்திய குடியுரிமை பெற்றவர் கள் மிக அதிகமாக வாழ்வது வளைகுடா நாடுகளில் தான். அதில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னணி யில் உள்ளது.
கடந்த ஜூன் 8 அன்று முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஸபா பூங்காவில் சிறப்பான கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும், ஜெ.எஸ்.ரிஃபாயி அவர்களும் வளைகுடா நாடுகளில் சமுதாய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக துபையில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டது. அல்மனார் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டபோதே இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இந்த இடம் போதுமா? என்ற கேள்விகள் வந்தன.
இந்நிலையில் அருகிலிருந்த பிரம் மாண்டமான பூங்காவிற்கு நிகழ்ச்சி இடமாறுதல் செய்யப்பட்டு அனைவ ருக்கும் தகவல் தரப்பட்டது.
மாலை 5மணிலிருந்தே அபுதாபி, அல் அய்ன், அஜ்மான், ராசல் கைமா, புஜேரா, உம்முல் குயின் உள்ளிட்ட தூர மண்டலங்களிலிருந்து வாகனங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாய் நுழையத் தொடங்கினர்.
அருமையான மாலைப் பொழுதில், பச்சைப் பசேல் என விரிந்துக் கிடக்கும் புல்வெளியில் மு.மு.கவின் கருத்தரங்கு இந்தியர்களின் சங்கமமாக உற்சாகமாய் நடந்தது.
அமைப்பு சார்ந்தவர்கள் மற்றும் அமைப்பு சாராத பொதுமக்களும் வருகை தந்ததால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர வைத்தனர்.
மஹ்ரிப் தொழுகை நெருங்கும் நேரத்தில் துபை, ஷார்ஜா மண்டலங்களை சேர்ந்தவர்களும் வருகை தர கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமானது.

அந்த திறந்தவெளி பூங்காவில் மக்கள் தங்கள் தொழுகைகளை அணிலிஅணியாய் திரண்டு அரங்கேற்றியது. நிகழ்வுகளுக்கு சிறப்பு சேர்ந்தது. கருத்தரங்கிற்கு அமீரக மு.மு.க தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அமீரக பொருளாளர் பொறியாளர் மஹ்பூப் ஜெய்லானி அறிமுக உரை நிகழ்த்தினார்.
மண்டல தலைவர்களான பொதக்குடி தாஜுதீன்(அபுதாபி) நெல்லிக்குப்பம் இக்பால் (ஷார்ஜா) குடவாசல் சஹாபுதீன் (அஜ்மான்) துளச்சேந்தரபுரம் இபுறாஹிம் (அல் அய்ன்) எல்லேறி அம்மானுல்லா (உம்முல் கைய்ன்) தரங்கம்பாடி இக்பால் (ராஸ்அல்கைமா) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாயகத்தில்ô இருந்து வருகை புரிந்த த.மு.மு.க தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மாநில செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் அவர்கள் நிகழ்த்திய எழுச்சிமிகு உரைகள் சமுதாய சிந்தனைகளை தூண்டும் விதத்தில் அமைந்தது.
முமுக அமீரக பொதுச்செயலாளர் நூருல்லாஹ் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் பாஷா உள்பட முமுக அமீரக பொறுப்பாளர்கள் மக்களை ஒருங்கி ணைக்கும் பணியை சிறப்பாக செய்திருந்தனர்.
ஒரு வார கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் பல மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கான நிறைவு துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. (அல்ஹம்துலில்லாஹ்

No comments: